ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி….
கடந்த 3 வாரங்களாக நடந்த கூத்தைப் பார்த்தால், எல்லோருக்கும் தலை சுத்தும். இதுக்கெல்லாம் மூல காரணம் மத்திய தொல் பொருள் துறைதான். ஒரு அரசாங்கத் துறை தன் எல்லை எது எனத் தெரியாமல், உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஒரு ஆவணத்தினால், இன்று தேவையில்லாமல் கிளப்பி விட்ட பல அரசியல் நிகழ்வுகள்.
அந்த ஆவணத்தின் பின் விளைவையறிந்த காங்கிரஸ் கட்சி, ஆவணத்தை திரும்பப் பெற்று, சத்தம் காட்டாமல் ஒதுங்கி விட்டது. ஆனால், அனாவசியமாக வார்த்தைகளை விட்டு, பகுத்தறிவு பகலவர்கள், குட்டையைக் குழப்பினார்கள். செங்காவிக் கும்பலோ, வெட்டு, குத்து என்று பேசி, குழப்பின குட்டையிலிருந்து சேற்றை வாரி இரைத்தது. இடையில், உச்ச நீதி மன்றம் வேறு தன் பங்கிற்கு ஒரு சித்து விளையாட்டு ஆடியது. பந்த் என்றும், பின்னர் உண்ணா நோன்பு மட்டுமே என்று வார்த்தை ஜாலங்களில் விளையாடினார்கள். உண்ணா நோன்பிருந்தவர்கள், புண்ணாகிப் போனதுதான் மிச்சம்.
இதுவரை நடந்தவைகளில் ஏதெனும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையா? அரசியல் கட்சிகள், தரம் தாழ்ந்து, தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட விரோதங்களை, கட்சியினரிடையே விதைத்து, மக்களை மக்களுடன் மோத விடுகிறார்களே, இது என்ன நியாயம்? குப்பனுக்கும், சுப்பனுக்கும் ஒரு நாள் வருமானம் போனதுதான் மிச்சம். அரசாங்கம் ஆதரித்த வேலை நிறுத்தத்தினால், அரசு ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கும், அன்றைய சம்பளம் நிறுத்தப் படாது. ஆனால் தினம், தினம் உழைத்து சாப்பிட வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்ன செய்திருப்பார்கள்.
தன் கர்வம், தன் அதிகாரம், தன் வீச்சு என்று செயல் படும் தலைவர்கள், இன்று காந்தி சிலைக்கும், காமராசர் சிலைக்கும் மாலை போட்டு, தங்களை சத்திய வந்தனாகவும், கர்ம வீரர்களாகவும் காட்டி இருப்பார்கள்.
தினம் தினம் வேஷம் போடும் அரிதாரம் பூசாத கலைஞர்கள்.
8 comments:
நீங்கள் இதெற்கெல்லாம் முதல் காரணம் மத்ய சர்க்கார் என்கிறீர்கள்.
நான் ராஸ்கல் ராமனை இதில் இழுத்துவிட்ட கபோதிகள்தான் முதல் காரணம் என்கிறேன்.
வேறுபடும் புள்ளிகள் தெளிவாகவே தெரிகிறது.
--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
தருதலை,
ராமன், ராஸ்கலோ, ரவுடியோ....உச்ச நீதி மன்றம் ஒரு முடிவுக்கு கொண்டு வரட்டும் என்று பொருத்திருந்து இருக்கலாம்.
"யாகாவாராயினும் நாகாக்க...."
தங்கள் வரவுக்கு நன்றி
//உச்ச நீதி மன்றம் ஒரு முடிவுக்கு கொண்டு வரட்டும் என்று பொருத்திருந்து இருக்கலாம்.//
நீதிமன்றத்திற்க்கு என்ன மரியாதை என்று கீழே உள்ள சுட்டியில் சென்று வாசித்துப் பாருங்கள். எமது தொண்டர்களின் மனநிலை புரியும்.
தமிழனை யாராலும் காப்பாற்றவே முடியாது.
http://princenrsama.blogspot.com/2007/10/blog-post.html
ஆதி பகவன்
உங்களுக்கே இது கொஞ்சம் அதிகமாத் தெரியலே? பந்த் அறிவிப்பு விட்டது யாரு??? அதுக்கு மேலேயும் ஒருத்தனுக்கு துணிச்சல் வந்துடுமா, கடையை தொரந்து வக்க? வச்சா அந்த கடைதான் அதுக்கப்பறம் இருக்குமா?
நான் எழுதினதெல்லாம் அன்றாடம் உழைத்து, சம்பாதித்து வயிறு வாழும் கடை நிலை மக்களைப் பற்றி? எங்கே அவங்களைப் போய் ஒரு interview எடுத்து போடுங்களேன், பாப்போம், என்ன சொல்றாங்கன்னுட்டு.
உண்ணாவிரதம் இருந்தவங்களே , பாதியிலே எழுந்து போய்ட்டாங்களாம், தொழில பாக்கறதுக்கு.
வருகைக்கு நன்றி.
//ஆதிபகவன் said...
நீதிமன்றத்திற்க்கு என்ன மரியாதை என்று கீழே உள்ள சுட்டியில் சென்று வாசித்துப் பாருங்கள். எமது தொண்டர்களின் மனநிலை புரியும்.
தமிழனை யாராலும் காப்பாற்றவே முடியாது.
http://princenrsama.blogspot.com/2007/10/blog-post.html //
ஆதிபகவன்!
முதலில் உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்!
சும்மா எதையாவது உலறி கொட்டுவதை நிறுத்துங்கள்!!!
மாசிலா அப்படி என்ன கோபம்?
ராமர் பாலமோ, ராவணன் பாலமோ அல்லது சேது திட்டமோ அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நான் சொன்னது பந்த் என்று சொல்லி தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்க்கு குழி பறிக்க வேண்டாம் என்பதே.
நீதிமன்றம் தவறிழைத்திருக்கலாம். ஆனால் சட்டத்தை மதிக்க வேண்டியது எமது கடமை.
மனதை விசாலமாக வைத்திருங்கள். மற்றவர்கள் சொல்வதையும் கவனமாக கேளுங்கள். உங்கள் முடிவு சரி என உங்களுக்குப் தெரிந்தால் அதில் உறுதியாக இருங்கள். ஆனால் அதை மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.
நான் கூறுவது உளறிக்கொட்டுவதாக நீங்கள் நினைத்தால் அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள். அதற்க்கு ஏன் நீங்கள் பதில் தருகிறீர்கள்?
ada athu appadi illainga
ippadi....
kuppaiya medakki
meda road aakki
roda paaalam aakki
vaichinnga paaru peru
tamilan vathiladikka
ஆதிபகவன்
என் பதிவும் பந்தை எதிர்த்தே. ஏன் இந்த உண்ணாவிரதம் முன்பே தோன்ற வில்லை? எதற்கெடுத்தாலும் பந்த் தான் ஆயுதமா? பந்த் கூட ஒரு விதமான வன்முறைதான். எத்தனை கடைகள் முழு சம்மதத்துடன் கடை அடைப்பு செய்தார்கள்? பொருட்சேதம் தவிர்க்க செய்த அடைப்புதான் அது. இவ்வாறு துன்புறுத்தி மக்களை சித்திரவதை செய்வதில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு தனி ஆனந்தம். A sadistic pleasure. அது எந்தக் கட்சியானாலும்.
மதி,
குபபையோ, கோபுரமோ தனி மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். எதை நீங்கள் குப்பை என்கிறீர்களோ, அதையும் சிலர் கிளறி தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் தூக்கி எறிந்து விடுவீர்களா?
எனினும், மறுமொழிக்கு நன்றி..
Post a Comment