நந்தவனத்தில் ஒரு ஆண்டி,
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டு வந்தானொரு தோண்டி,
அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.....
அது என்னமோ தெரியலே, கர்நாடகத்திற்கு ஒரு சாபக்கேடு போல இருக்கு.
அழகா பாஜபா விற்கு ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஆட்சிக்கட்டிலில் இன்னும் ஒரு 20 மாதம் குமாரசாமியும், JD(S) ம் இருந்திருக்கலாம். ஆனால், விதி அப்பா ரூபத்தில் வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது. இப்போது, ஜனாதிபதி ஆட்சி வந்து உள்ளதும் போச்சு. தன் வினை தன்னைச் சுடும்.
அது போலத்தான் டிராவிட்டின் நிலையும். ஒழுங்காக அணித்தலைவராகவே இருந்திருக்கலாம். இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்து வந்து அணித்தலைவர் பதவியை, தன்னிச்சையாக ராஜினாமா பண்ணினார். காரணம், பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றார். ஆனால் தற்போதைய தொடரில் அவர் ஆட்டம் சுத்த மோசம். அடுத்த மேட்சுக்கு அவர் இருப்பாரா என்கிற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்.
அது ஏன் கர்நாடக பிரபலங்கள் மட்டும் இப்படி, தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்?
3 comments:
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி" என்பதே சரியானது.
பாடும் போது "நந்தவனத்திலோராண்டி" என வரும்
ஸ்....அப்பா இப்பவே கண்ண கட்டுதே
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்பது இழுக்கு
குறளாசான் கூறியது - இவர்களுக்குத் தெரியாது
Post a Comment