நேற்று (11 அக்டோபர், 2008) நடுவண் அரசின் மந்திரி சபை கூடி, எரி பொருட்களின் (சமையல் வாயு உட்பட) விலையை, மார்ச், 2008 வரை உயர்த்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு நல்ல முடிவு. இதனால், அன்றாட உபயோகப் பொருட்களின் விலைகள் போக்கு வரத்து காரணமாக ஏறாது. பணவீக்கமும் ஒரு வித கட்டுப்பாட்டில் இருக்கும்.
இவை உலகம் அறியத் தெரிய கூறும் காரணங்கள்.
ஆனால், உண்மையில் இதற்குக் காரணம், தேர்தல் வரக்கூடிய ஒரு அபாயம் மற்றும் மாநிலத் தேர்தல்கள் சமீபத்து விட்டன. ஓட்டு வங்கியை தட்டிக் கொடுத்து அணைத்துக் கொண்டு போக வேண்டிய கட்டாயம்.
எரி பொருட்களின் விலையை உயர்த்தினால், தற்போழுது 3.42% இருக்கும் பணவீக்கம் கும்மென்று உயரும் (5.11% வரை போகலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்). நடுவண் அரசுக்கு எதிர்க்கட்சிகளிலிருந்தும், துணைக் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு வரும். (இப்பொழுதுதான் அணுசக்தி விடயத்தில் தோளில் கை போட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்). வேலியில் போகிற ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொண்டது போலாகி விடும்.
உலகச் சந்தையில் எரி பொருட்களில் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் சந்தை நிர்ணய முறையில்தான் இதற்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியானால், இங்கும் எரி பொருட்களின் விலைகள் ஏற்றப்பட வேண்டும். ஆனால், இங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக, அரசாங்கம் ஒருவித கட்டுப்பாட்டை, எண்ணெய் நிருவனங்களுக்கு விதித்திருக்கிறது. இந்த விலை கட்டுப்பாட்டினால் வரும் நட்டத்தை ஏடு கட்ட, ரூபாய் 23,457.24 கோடிக்கு அவர்களுக்கு எண்ணெய்க் கடன் பத்திரம் வழங்கப் போகிறது.
ஆனால், இந்த சுமையை அரசு ஏற்றுக்கொண்டிருப்பது, இப்போது தெரியாவிட்டாலும், வரவு-செலவு பற்றாக்குறையை அதிகரிக்கச்செய்யும். அப்பொது அந்த சுமையை வேறு ஒரு ரூபத்தில் மக்களின் மீது செலுத்தப்படும். அது உதவித்தொகை(subsidy) குறைப்பாக இருக்கலாம். அதிக வரி விதிப்பாக இருக்கலாம். வேறு ஏதாவது ஒரு வழியில் மக்களை அது வந்தே அடையும்.
இது நடுவண் அரசு காட்டும் ஒரு கண் கட்டு வித்தை. ஆனாலும் அவர்கள் அதை செய்தே ஆக வேண்டும். இனிப்பு தடவிய மாத்திரை மாதிரி.
6 comments:
Please correct the date to 11 அக்டோபர், 2007.
எவ்வளவு பெரிய தேசம்!
எரிபொருள் உற்பத்தியில் நம்து கடல் பகுதியிலேயே அதற்குரிய வளம் இருந்தும் ஏன் இன்னும் தன்னிறைவு அடையவில்லை?
அதைச் செய்தால்தானே பெட்ரோலியப் பொருட்கள் நம்து கட்டுப் பாட்டிற்குள் வரும்!
எப்போது அது சாத்தியப்படும்? இன்னும் ஒரு அறுபது ஆண்டுகள் வேண்டுமா என்ன?
தமிழ் மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்
நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் பாலா...
//எரி பொருட்களின் விலையை உயர்த்தினால், தற்போழுது 3.42% இருக்கும் பணவீக்கம் கும்மென்று உயரும் (5.11% வரை போகலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்).//
பணவீக்கம் உயரலாம்..ஆனால் நடுத்தர மக்களின் மன வீக்கம் குறையமா..?
எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாது என்ற கொள்கை வரவேற்கத்தக்கது தான். ஆனால் அதனால் ஏற்படும் இழப்பை ஈடு கட்ட கடன் பத்திரம் வழங்கினால் அதுவும் பொது மக்களின் தலையில் தானே விழும்.
இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
Post a Comment