இன்று பரோடாவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது தோனி ICC யின் ஒருதலைப் பட்சமான போக்கைக் கண்டித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது.
"நாங்கள் 20 ஓவர் மேட்ச் என்று ஆடி வருகிறோம். 20 ஓவர் முடிந்தவுடன் டெந்துல்கரும் பதானும் பெவிலியன் நோக்கி வர ஆரம்பிக்கும் போதுதான், அம்பயர் இது 50 ஓவர் மேட்ச் என்று அவர்களிடம் கூறினார். இது எங்களுக்கு முன்பே தெரிவிக்கப் படவில்லை. இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக ICC எடுத்த முடிவு. இருந்தாலும், நாங்கள் தற்போது 33 ஓவரைத் தாண்டி ஆடி வருகிறோம்" என்றார்.
பாண்டிங் அளித்த பேட்டியில் "இந்த போட்டியில் ஒரு மாற்றத்திற்காக, நாங்கள் reverse batting செய்யப் போகிறோம். அதாவது 11 , 10 வது வீரர்கள் முதலில் களம் இறங்குவார்கள். தேவைப்பட்டால், 9வது வீரர் களம் இறங்குவார்" என்றார்.
BCCI காரியதரிசி அளித்த பேட்டியின் போது, இவ்வாறு குறுகிய ஓவரில் மேட்ச் முடிந்தால், எங்கள் வருமானம் பாதிக்கப்படுவதால், நாங்கள் ஒரு புதிய விதிமுறையை ICCக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். அதன்படி, 12, 13, 14, 15 வது வீரர்கள் களம் இறங்கி 50 ஓவர் வரை ஆட வழி செய்யப்படும். அதனால் எங்கள் வருமானம் பாதிக்காது. இதில் ICCக்கும் ஒரு பங்கு கொடுப்போம் என்றார்.
9 comments:
என்ன நடக்குது இங்க ?
:)))
148
முற்றுபுள்ளி வச்சாச்சு..
Super :))
:-)
ஒன்னுமே புரியலே !!
http://imsports.rediff.com/score/in_match8474.html
இப்ப என்ன ரிக்கி பாண்டிங் ICC மேல பாய்வாராமா? அட சொல்லுங்கண்ணாவ்!
அது சரி, சாகர காலத்திலே, சங்கரா, சங்கரா சொல்லுவாங்களாம். எல்லாம் போனதுக்கப்பறம் ஜெயிச்சா என்ன? தோத்தா என்ன?
ஆனா ஒன்னு பாத்திங்களா? டிராவிட் இல்லன்னதும் எல்லோரும் நல்லா ஆடராங்களே? இது ஏதோ சதி மாதிரி தெரியல்லே?
அனானி,
மும்பை மாட்சிலே, இப்போது ஸ்கோர் 64/6 - 19 ஒவரிலே.
சொன்ன மாதிரி 20/20 மாட்ச் ஆயிடுச்சா?
Post a Comment