Friday, October 19, 2007

The Return of Benazir Bhutto

பாகிஸ்தானுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கி விட்டது. 8 வருடமாக ஓடி ஒளிந்து கொண்டிருந்த பெனாசீர் புட்டோ சொந்த நாட்டிற்கு வந்த சில மணி நேரங்களிலேயே ஒரு மாபெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட 150 பேர் மரணம், 500 க்கும்மேற்பட்டவர்கள் காயம்.

"மேடம் 20%" என்று உலக அளவில் வர்ணிக்கப்பட்ட ஊழல் மஹாராணி. லஞ்சம் வாங்குவதில் டாக்டரேட் பட்டம் வாங்கியவர். இவரும், முஷாரஃப் ம் சேர்ந்து இனி கூட்டுக் கொள்ளை தான். பெனாசீர் சொந்த நாடு திரும்ப தோதாக அவர் மேல் உள்ள எல்லா ஊழல் வழக்குகளும் ஒரு அவசர சட்டம் மூலமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இன்று நடந்த குண்டு வெடிப்பைப் பற்றி முஷாரஃப், 'இது ஜனநாயகத்திற்கு நடந்த சதி' என்று விமரிசிக்கிறார். சாத்தான் வேதம் ஒதுகிறது போல் இருக்கிறது.

புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி, இது பாகிஸ்தானிய ஊளவு நிறுவனங்களின் சதி வேலை என்கிறார். இந்தியா போன்ற அண்டைய நாடுகள் பாகிஸ்தானின் உளவு நிறூவனங்களை குறை சொன்ன காலம் போய் இப்போது உள்ளூரிலேயே குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன புட்டோ, முஷாரஃப் வுடன் கை கோர்த்துப் போவது விந்தையிலும் விந்தை.

2 comments:

ராஜ நடராஜன் said...

என்னத்த சொல்றது?

Anonymous said...

I disagree.

விபத்துகள் நிகழ்கின்றன என்பதற்காக பயணம் செய்யாமல் இருக்கிறோமா?

அவர் பிற ஊழல்களில் ஈடுபட்டிருந்தாலும், இந்த நிகழ்வில் குற்றவாளி BB அல்ல. மூளை சலவை செய்யப்பட்ட தற்கொலை கொலைகாரர்கள் மற்றும் அவர்கள் பின்பற்றும் ideology. BB யின் தவறு, நெடிய ஊர்வலதிற்கு ஒப்புக்கொண்டது. என்றாலும் கூட பெருங்கூட்டம் கூடுவது பாகிஸ்தானில் இது முதல் முறையல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும் .

இந்த குண்டு வெடிப்பிற்கு பூட்டோவை காரணம் சொல்வது, ராஜீவ் காந்தி அப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதால் அவர் மரணத்திற்கு அவரே காரணம் என்று கூறுவது போலாகும்.

நன்றி.