Wednesday, October 17, 2007

என்னைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை

என்னைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை.

நான் ஒரு நாடோடியாகத்தான் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன். பயணங்கள் முடிவதில்லை என்பது என் வரையில் உண்மை. இதுவரையில் வாழ்ந்த ஊர்கள் 14, இருந்த இருப்பிடங்கள் 22. தஞ்சை மண்ணிலே பிறந்து, தென் ஆற்காட்டால் (இப்பொழுது விழுப்புரம் மாவட்டம்) சீராட்டப்பட்டு, திருச்சியால் அறிவூட்டப்பட்டவன், திருநெல்வேலியால் சீலனாய், சென்னையால் பொருப்பானவனாய், டெல்லி/ பெங்களூருவால் வல்லுனனாய், தற்போது  ரியாத், சௌதி அரேபியாவால் வாழ்க்கையில் ஒரு நிலையில் இருப்பவன்.

என் சிறு பிராயத்தில் ஊர், ஊராய்த் திரிந்தது, என் தகப்பனாரின் வேலை நிமித்தம் காரணமாக. பின்னாளில் திரிந்தது என் வங்கி வேலை காரணமாக. தற்போது ஒரிடத்தில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறேன்

எனக்கு விமர்சனம் செய்வதில் ஈடுபாடு உண்டு (தருமி மாதிரி, கேள்வி கேட்கத்தான் தெரியும்). அதில் சில சமயம் குசும்புகளும் இருக்கும். (என் மனைவி அதைப் படித்துவிட்டு கூறுவது, "தஞ்சாவூர்ங்கறது சரியாத்தான் இருக்கு.." அவருக்கு கோயம்பத்தூர் காரர்கள் எல்லாம் ரொம்ப சாது என்ற எண்ணம் - அவர்கள் தகப்பனார் ஊர்).

சில சமயங்களில் கதைகளும் எழுதியுள்ளேன். ஆனாலும், எனக்குள் இருக்கும் ஒரு தாக்கம், பொருளாதார, தொழில்நுட்பம் சம்பத்தப்பட்ட கட்டுரைகள் எழுத வேண்டும் என்பதுதான். இந்த நட்சத்திர வாரத்தின் போது ஒரு சில பதிவுகளை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.

மற்றபடி, நான் ஒரு சாதாரணமானவன். என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மறுமொழியிட்டு ஆதரவளியுங்கள். பிடிக்காவிட்டாலும், மறுத்து மொழியிடுங்கள்.

நட்சத்திர வாரம் சற்றே தாமதமாய் தொடங்கியதற்கு என்னை மன்னிக்கவும். வெளியூர்ப் பயணம் ஒன்று குறுக்கிட்டதால் உடன் பதிவு போட முடியவில்லை.

 

வணக்கங்களுடன்,

21 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்! ஒரு 20 பதிவு போட்டு சரி பண்ணிடுங்க

இராம்/Raam said...

நட்சத்திர வாழத்துக்கள் பாலா, லேட்டா ஆரம்பிச்சாலும் கிரேட்டா இந்த வாரத்திலே எழுத வாழ்த்துக்கள்... :))

தமிழ்நதி said...

இவ்வார நட்சத்திரத்துக்கு நல்வரவு. பல்துறை சார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

கோவி.கண்ணன் said...

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறீர்கள் !

வாழ்த்துக்கள் !

ஜெகதீசன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!!! :)

Bala said...

பதிவுலக ஜாம்பவான்களுக்கு ,

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நன்றி.

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் வருகைக்கு.[ஏமாற்றாமல் வந்ததற்கும் அதற்குள் ஒரு பதிவும் போட்டாகி விட்டது]

cheena (சீனா) said...

பாலா !! வருகைக்கு நன்றி பாலா.
சிறு முன்னுரை அருமை. எனக்கும் உங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. பிறந்த ஊர் தஞ்சைத் தரணி. வளர்ந்தது சென்னை. தொழில் வங்கியில். என்னுடைய வீட்டிற்கு வாருங்களேன். பாருங்களேன்.
http://cheenakay.blogspot.com

தருமி said...

//எனக்கு விமர்சனம் செய்வதில் ஈடுபாடு உண்டு//

எதையெதை விமர்சனம் செய்வதுண்டு?
எப்படியெல்லாம் விமர்சனம் செய்வீர்கள்?

14 ஊர்களில் இருந்தவர் மதுரைக்கு மட்டும் ஏன் வரவில்லை?

(ஒண்ணுமில்லை; நீங்க தான சொன்னீங்க .. தருமின்னா கேள்வி அப்டின்னு ...அதான்)

அபி அப்பா said...

வாங்க தல! என்ன இத்தன லேட்!! சரி சரி போகட்டும் வந்து குமுறி எடுங்கப்பா!!!!

Subbiah Veerappan said...

///என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மறுமொழியிட்டு ஆதரவளியுங்கள். பிடிக்காவிட்டாலும், மறுத்து மொழியிடுங்கள்.///

நீங்கள் எழுதுவ்துதான் எழுத்து. ஆக்கம்
நம்பிக்கையோடு எழுதுங்களேன். பிடிபடமலா போய்விடும்?

துளசி கோபால் said...

//வாழ்த்துக்கள்! ஒரு 20 பதிவு போட்டு சரி பண்ணிடுங்க//

ரிப்பீட்டு :-)

மாயா said...

வாழ்த்துக்கள்!

நானும் உங்களை காணவில்லை என்று பதிவு வேற போட்டிட்டன்
http://palipedam.blogspot.com/2007/10/blog-post_16.html

Sorry :)

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் தலைவா. தூள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

Osai Chella said...

எங்கூரு மாப்பிள்ளை யா நீங்க. அவங்க சகோதரி க்ரெக்டாத்தான் சொல்லியிருப்பாங்க! கோவைப் பக்கம் அடுத்தவன் பிரச்சினைய தேவையில்லாம சீண்டமாட்டாங்க! வெட்டிபேச்சு கொஞம் குறைவு! தஞ்சை பற்றி அவ்வளவா தெரியாது! வாழ்த்துக்கள்!

Bala said...

வாங்க லக்கி லுக், செல்லா, சுப்பையா, அபி அப்பா, துளசி கோபால், மாயா

என் வீட்டிற்கு வந்ததுக்கு வணக்கம்.

உண்மைத்தமிழன் said...

வருக வருக பாலா..

கேள்விகள் கேட்டால்தானே பதில் கிடைக்கும்.. உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களையே எழுதுங்கள்.. இங்கே ஆயிரம் கண்களோடுதான் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். எந்தத் திசையாக இருந்தாலும் இநல்ல விஷயமாக இருந்தால் ஓடி வருவோம்.

அப்புறம்..

//OSAI Chella said...
எங்கூரு மாப்பிள்ளையா நீங்க. அவங்க சகோதரி க்ரெக்டாத்தான் சொல்லியிருப்பாங்க! கோவைப் பக்கம் அடுத்தவன் பிரச்சினைய தேவையில்லாம சீண்டமாட்டாங்க! வெட்டிபேச்சு கொஞம் குறைவு!//

இதை மட்டும் நம்பாதீங்க.. கோயம்புத்தூர்க்காரங்க குசும்பே தனி.. நாங்க ஒண்ணுமே செய்ய மாட்டோம்னு சொல்வாங்க. ஆனா அல்லாத்துக்கும் அவுங்கதான் காரணமா இருப்பாங்க.. பார்த்து புரிஞ்சுக்குங்க..

இப்னு ஹம்துன் said...

இப்போதுதான் பார்க்கிறேன்.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்த்துகள் ஐயா.

ஜமாலன் said...

நண்பருக்கு,

உங்களுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு.
1. நானும் தஞ்சை மாவட்டம்தான். கும்பகோணம்.
2. ஆடி ஓடி கடைசில உங்களைப் போலவே சவுதியில் ரியாத்தில் 9-வருடங்கள், தற்சமயம் ஜெத்தாவில் 6-வருடங்கள். இப்பொழுதுதான் மூக்கு நீளத்துவங்கியிருக்கிறது இன்னும் 4 வருடங்களில் ஒட்டகமாக ஆகிவிடுவேன்.
3. எனக்கு பொருளாதாரம் பற்றி எழுத வராது.. அதனால் உங்கள் பதிவை ஆவலுடன் நொக்குகிறேன்.
4. கடைசி ஒற்றுமை.. அடுத்தவாரம் பார்க்கலாம்.

நட்சத்திர வாழ்த்துக்கள்... எழுதுங்கள். முடிந்தால் அடுத்த மாதம் நான் ரியாத் வருவேன் சந்திப்போம். பதிவுலகுக்கு புதியவன் என்பதால் நீங்கள்தான் சவுதியில் முதல் தொடர்பு..

கலக்குங்கள்.

-அன்புடன்
ஜமாலன்.

thiru said...

வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்.