மேற்கு வங்காளத்தில் கம்யுனிஸ்டு ஆட்சிக்கு எதிராக இருக்கும் கட்சி காங்கிரஸ்தான். அதன் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி. ஜனாதிபதி தேர்தலுக்கு 6 மாத காலமாக சோம்னாத் சாட்டர்ஜி பெயர் அடிபட்டுக்கொண்டிருந்தாலும், அவர் பெயரை வழி மொழியாமல், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தந்தது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். காங்கிரசுக்கு ஆதாயம் பண்ணின மாதிரியும் ஆச்சு. அதே சமயம் மே.வங்காளத்தில் அதன் கையை ஒடித்து அதன் பலத்தையும் சற்று குறைச்ச மாதிரியும் ஆச்சு, பிரணாப் முகர்ஜியையும் அரசியலில் இருந்து ஓரம் கட்டின மாதிரியும் ஆச்சு என்று பல்நோக்கு திட்டம் ஒன்று தீட்டியது. ஆனால் காங்கிரஸ் அதன் வலையில் விழாமல், விழித்துக்கொண்டு தப்பித்துக்கொண்டது. இடையே மற்றொரு எதிர் சக்தியான மம்தா பானர்ஜியை மேஜைக்கு கூப்பிட்டு நந்திகிராம் விவகாரத்தில் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு தன் இமேஜை மேலும் வளர்த்துக் கொண்டது. இவை இரண்டும் மிக நன்றாக யோசித்து செய்யப்பட்ட இமேஜ் பில்டிங் நடவடிக்கைகள்.
40, 40 என்று கூறிக்கொண்டிருக்கும் கலைஞரின் பலம் மத்திய அரசில் இன்னும் அதிகம். ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில்அவர் ஒரு சூத்திரதாரியாகவே முன்னிருத்தப்பட்டார்.
அவருக்கு தினம் தினம் அறிக்கை கொடுத்து குடைச்சல் கொடுத்துகொண்டிருக்கும் இருவரில் ஒருவரை பிரபோஸ் செய்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? யோசனை செய்து பாருங்கள்!!
முதலில் மருத்துவர் ஐயா. தோழமைக் கட்சியாக இருந்து கொண்டு, இவர் தினமும் விடும் அறிக்கையைப் பார்த்தால் இவர் நோக்கம் வேறு ஏதோ போலத்தான் தோண்றுகிறது. பேசாமல் இவரை ஜனாதிபதி பதவிக்கு பிரபோஸ் செய்திருந்தால், தலைவலியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும்.
இதைவிட இப்போது பிரதிபா பாட்டிலை பிரபோஸ் செய்து முதல் பெண் ஜனாதிபதி, பெண்களுக்கு 33% சதவீதம் ஒதுக்கீட்டிற்கு முன்னோடி என்றெல்லாம் பேசியதை, ஜெயலலிதாவை பிரபோஸ் செய்து இதே பேச்சை பேசியிருக்கலாம். இதனால் என்னவெல்லாம் அனுகூலங்கள் கிடைத்திருக்கும் பாருங்கள்:
- பெண்கள் இட ஒதிக்கீட்டில் முன்னோடியாக செயல் பட்டவர். ராஜ்ய சபைக்கு பெண்ணையும், ஜனாதிபதி பதவிக்கு எதிரியையும் அனுப்பி வைத்தவர்.
- அன்பின் அடையாளம், பண்பின் முன்னோடி என்று விகடனில் தலையங்கம். (கூடவே முன்பு எழுதிய தலையங்கத்திற்கு மன்னிப்பு).
- என் உள்ளத்தில் 'குடி' கொண்டவர், எனவே அவரை மாளிகையில் 'குடி' வைத்தேன் என்று பேட்டி கொடுக்கலாம்.
- திமுகவை தமிழகத்தின் ஒரே கட்சியாகியிருக்கலாம்.
- கத்தியின்றி, ரத்தமின்றி, ஆள்படையின்றி, தேர்தலின்றி மைனாரிட்டியை மெஜாரிட்டியாக்கியிருக்கலாம்.
- ஸ்டாலினை உடனே முதல் மந்திரியாக்கிருக்கலாம்.
- அஞ்சா நெஞ்சனை அஞ்சாமல் துணை முதலவராகவோ, கட்சித் தலைவராகவோ ஆக்கியிருக்கலாம்.
- வைகோவை ஈழத்திற்கே அனுப்பியிருக்கலாம்.
- சத்தியமூர்த்தி பவனை கலைஞர் டிவியின் ஆஃபீசாக மாற்றியிருக்கலாம்.
- ஜெயா டிவியும் ஜெயபேரிகை கொட்டியிருக்கும்.
- சின் (sin) புரிந்த சன் டிவியை சிம்(sim) கார்டு சைஸுக்கு கொண்டு வந்து சின்னா பின்னமாக்கியிருக்கலாம்
- மூண்றாவது அணி மூச்சு, பேச்சில்லாமல் மூலையில் போய் உட்கார்ந்திருக்கும்.
- ஜனாதிபதி மாளிகை, கொடநாட்டிற்கே குடி பெயர்ந்திருக்கும்.
- எண்பதின் பவர் கண்டு எண்ணுலகமும் வியந்திருக்கும்.
- எதிரியையும் பண்போடு மதித்த அன்பாளர், சாணக்கியனையும் வென்ற ராஜாதி ராஜ தந்திரி, தங்கத் தாரகையை தலைநகருக்கு தந்த தன்னிகரில்லா தாராளன், வஞ்ஞம் விஞ்ஞிய நெஞ்சான், தில்லி கொண்ட திராவிடன், 40ஐ வைத்து நாடாண்ட நாயகன், கலியுகத்தின் கிங் மேக்கர் என்று சென்னை முழுவதும், பல சைஸ் விணைல் போஸ்டர்களில் அழகாக சிரிக்கலாம்.
என்று சத்தம் கேட்டு பேந்த பேந்த விழித்து எழுந்து தயாரானேன், அலுவலகம் செல்ல.
11 comments:
அரை நாள் லீவு போட்டுவிட்டு இன்னும் கொஞ்சம் தூங்கிவிட்டு..எழுதியிருக்கலாம்.:-))
Yeppadippa ippadiyellam sindhikireenga!
"வஞ்ஞம் விஞ்ஞிய நெஞ்சான்"
யெப்பே பில்லரிக்குது.
நெஞ்ச நக்கிட்ட போ.
Kalakals Bala.. :) :)
super appu. kallakunga.
Super thinking thala...
வைகோவை ஈழத்திற்கே அனுப்பியிருக்கலாம்
:-))
வடுவூர் குமார், தண்ணி வண்டி, வீ.எம், உண்மை, சீனு, பிரபு ராஜதுரை..
உங்கள் வருகைக்கும், மறு மொழிகளுக்கும் நன்றி.
அனானி,
இதுக்கு பேருதான் lateral thinking ன்னு சொல்றது. வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.
இந்தக்கனவு எனக்கும் வந்துச்சுங்க.
அதில.. 'இவங்க' நாமினேசன் வரைக்கும் போயிட்டாங்க..
அப்பால பார்த்தா... '70 வயசு ஆவாத சிறுசுங்கல்லாம் வெளியே போங்க..' ன்னு இருக்கைலேர்ந்து யாரோ கொரல் வுட்டாங்க..., கனவு டமால்.:-))
வாசகன், அப்போ கனிமொழி ஜனாதிபதியா வரனுமுன்னா இன்னும் 31 வருஷம் காத்திருக்கனுமா?
யம்மாடியோவ்.......
ஆமாம், துணைப்பதவியை அழகிரிக்கு வாங்காமல் அன்பழகனுக்கு வாங்க நினைப்பதில் இப்படியும் ஒரு முதிர்ந்த காரணமிருக்கிறது!
Post a Comment