Saturday, June 16, 2007

NDTV யின் முட்டாள்தனமான கேள்வி.

NDTV யின் முட்டாள்தனமான கேள்வி.

பிரதிபாபாட்டீலிடம் NDTV நிருபர் ஒரு கேள்வி கேட்கிறார். "..நீங்கள் ஒரு 'ரப்பர் ஸ்டாம்ப்' ஜனாதிபதியாக இருப்பீர்கள் என்று கூறுகிறார்களே....." .

என்ன ஒரு அறிவு பூர்வமான கேள்வி. அவர் என்ன அந்த கேள்விக்கு 'ஆமாம்' என்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தாரா என்ன? ("ஆமாம்" என்று சொல்லியிருந்தால் வெல்வது அதோ கதிதான் என்பது பாட்டீலுக்குத் தெரியாதா.) அல்லது ஜனாதிபதி பதவி அவ்வளவு கேலிக்குரியதாகப் போய்விட்டதா?

ஒரு சிலர் இருந்திருக்கலாம், ஆனால் பதவியே அப்படித்தான் என்று எள்ளி நகையாடுவதைப் போல கேள்வி கேட்பதுதான் பத்திரிக்கை சுதந்திரமா? சுடச்சுடச் செய்திகளுக்காக கிறுக்குத்தனமான கேள்விகள் கேட்பதை பத்திரிக்கை / டிவி நிருபர்கள் நிறுத்தவேண்டும்.

1 comment:

nayanan said...

"நான் அப்படி இல்லை" என்று சொன்னா இன்னும் வெட்கக் கேடு. ஏற்கனவே இருந்தவங்க எல்லாம் அப்படித்தான் என்று கைநாட்டு போடுதல்போல ;)