Monday, November 05, 2007

மரத்தை வெட்டினால் 1 கோடி ரூபாய் இனாம்.

ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டும் போது அங்கே இருக்கும் ஒரு பேரிச்சை மரத்தை அகற்ற முடியவில்லை. அந்த மரம், கார் பார்க்கிங் தளத்தில் இருக்கின்றது. முதலில் அதை வெட்ட முயன்றனர். முடியவில்லை. பின்னர் டிராக்டர் கொண்டு இழுத்து சாய்க்க முயன்றனர். தோல்வி கண்டனர். இன்னும் பெரிய டிராக்டர் கொண்டு வந்து முயற்சி செய்தனர். அப்போதும் அதை சாய்க்க முடியவில்லை.

பிறகு மதத் தலைவர்கள்,அங்கே ஒரு பூதம் தன் குடும்பதுடன் வாழ்வதாகவும், அந்த மரத்தை அதுதான் பாதுகாத்து வருவதாகவும் கூறி அந்த மரத்தை வெட்ட எத்தனிக்க வேண்டாம் என்று அந்த கான்டிராக்டரிடம் கூறினராம்.tree5_

அங்கே வேலை செய்பவர்களும், காவல் காரர்களும், அந்த மரத்தை அகற்ற முயன்ற நேரத்திலிருந்து அங்கே பல அசம்பாவிதங்கள், ஒருவர் மாடியிலிருந்து தலை குப்புற கீழே வி ழுந்து உயிர் விட்டது முதற்கொண்டு, நடக்கின்றன என்கிறார்கள்.

அந்த மரத்தை அப்புறப் படுத்துபவர்களுக்கு ஒரு மில்லியன் ரியால் (ஒரு ரியால் = 10 ரூபாய்க்கும் மேல்) தருவதாக அந்த காம்ப்ளெக்ஸ் சொந்தக்காரர் அறிவித்திருக்கிறார் (இடம் ஜித்தா, சவுதி அரேபியா).

ராமர் பாலம், ஆதாம் பாலம், மணல் திட்டு (நீங்க உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க, என்ன) உடைக்கும் முயற்சியிலும், இப்படித்தானே டிரெட்ஜர் மாறி மாறி உடஞ்சது.

நான் அந்த மரக் கதைக்கும், இந்தப் பால விவகாரத்திற்கும் ஒரு முடிச்சும் போடலைடா, சாமி, ஏதோ ஞாபகம் வந்திச்சு சொன்னேன், அம்புட்டுத்தான்….

3 comments:

வவ்வால் said...

//நான் அந்த மரக் கதைக்கும், இந்தப் பால விவகாரத்திற்கும் ஒரு முடிச்சும் போடலைடா, சாமி, ஏதோ ஞாபகம் வந்திச்சு சொன்னேன், அம்புட்டுத்தான்….//

அது தான் போட வேண்டிய முடிச்சை எல்லாம் போட்டாச்சே அப்புறம் என்ன ஏதோ ஞாபகம் வந்துச்சு, வேற எதுவும் ஞாபகம் வராமா அந்த மணல் திட்டு தான் ஞாபகம் வருதோ :-))

உங்களைப்போன்றவர்களுக்கு மூட நம்பிக்கைகளை விதைக்கவும் , கணினி தேவைப்படுதுல்ல, ஒரு வேளை கணினிக்குள்ள கூட குட்டிச்சாத்தான் இருக்கு அதான் இயக்குதுனு சொன்னாலும் சொல்விங்க :-))

இதுல சூப்பர் கம்பியூட்டர் பற்றி எல்லாம் பதிவு வேற போடுறிங்க!

ஒரு கோடி ரூபாய் கண்டிப்பாக கிடைக்கும் என்று உத்திரவாதம் தந்தால் நான் அம்மரத்தை நீக்கி காட்டுகிறேன்!

Bala said...

நண்பர் வவ்வால்,

relax.. please relax...மரத்துக்கு கீழே பூதம் வாழுகின்றது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம், டிரெட்ஜர் உடைந்தது தெய்வ குத்தம் என்று அப்போது சொன்னது.

சில நேரங்களில் சிரிக்கவும் முயற்சி செய்யுங்கள்...

சரி, வலையிலே பதிவு போடனும்னா, கணிணி இல்லாம, ஓலைச்சுவடியும் எழுத்தாணியுமா உபயோகப்படுத்த முடியும்?

வவ்வால் said...

ஓஹ் நீங்க இதை அபத்தம் என்று சொல்ல வந்தீர்களா, நான் ஒரு மரத்திர்க்கே இத்தனை சக்தி இருக்கும் போது அந்த மணல் திட்டு ராமனால் கட்டப்பட்டது அதான் அதுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என நிறுவ முயன்றதாக நினைத்துவிட்டேன், அப்படித்தான் உங்கள் எழுத்தும் இருந்தது, அபத்தம் என்று சொல்லும் தொனி தெரியவில்லை.

அதான் இப்போ தெளிவுப்படுத்திட்டிங்களே , அப்புறம் என்ன நான் ரிலாக்ஸ் ஆகிடுறேன்... நீங்களும் ஆகிடுங்க!