Sunday, August 12, 2007

செஞ்சட்டை வீரர்கள், வெறும் காகிதப் புலிகள்.

செஞ்சட்டை வீரர்கள், வெறும் காகிதப் புலிகள்.

"Politics is the art of looking for trouble, finding it whether it exists or not, diagnosing it incorrectly, and applying the wrong remedy."

இது இன்று நான் படித்த ஒரு மேற்கோள். செஞ்சட்டை வீரர்கள், அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய நிலையில் இன்று அடித்துள்ள "அந்தர் பல்டிக்கு", இதை விட சிறந்த ஒரு மேற்கோள் இருக்க முடியாது.

இது நாள் வரையில் செஞ்சட்டை வீரர்கள் பேசிய சவடால்களைப் பொறுத்திருந்த காங்கிரஸ், "பொறுத்தது போதும், பொங்கி எழு" என்று மனோகரா சிவாஜி போல, சடாரென்று திரும்பி, "உன்னாலே ஆனதைப் பார்த்துக்கோ, அணுசக்தி ஒப்பந்தம் நடந்து முடிந்த கதை" என்றதும், வாலை சுருட்டி இரண்டு கால்களுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு, சட்டென்று கீழ் சுருதிக்கு வந்து விட்டது.

"நாங்கள், பாராளுமன்றத்தில் எதிர்ப்போம் என்றுதான் கூறினோம், ஆதரவை விலக்கிக் கொள்வதாகக் கூறவில்லையே, அவர்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் குறைவு என்று சற்று ஞாபகப்படுத்தினோம்" என்று தலைக்குத்தலை சமாளிக்கிறார்கள்.

இந்த விடயம் மட்டுமல்ல, சமீபத்தில் இன்னும் பல சமயங்களில், இவர்களில் நிலைப் பாடுகள் கேலிக்குள்ளாகியிருக்கின்றன. இரண்டு, மூன்று தினங்களுக்கும் முன், கருணாநிதி, மேற்கு வங்காளத்தில் இன்னும் கை ரிக்சா இழுக்கும் நிலையையும், அவர்கள் ஆளும் மாநிலங்களில் இன்னும் நிலமில்லாதவர்களுக்கு நில ஒதுக்கீடு செய்யாததையும் சுட்டிக்காட்டினார். நந்தி கிராமத்தில் துப்பாக்கி சூட்டில் பலர் இறந்து போன போது வாய் மூடி, கண், காது பொத்தி அரசாங்கம் நடத்திய இவர்கள், கம்மத்தில் சிலர் இறந்த போது காங்கிரஸ் அரசாங்கத்தை விலகக் கூறியது இன்னுமொரு உதாரணம். கேரளாவில் இவர்கள் அரசாங்கம் நடக்கிறது என்று சொல்வதே ஒரு நகைச்சுவை, அவ்வளவு உள்குத்துக்கள்.

இப்போது இவர்கள் கூட்டம் போடுவது, ச்சும்மா அறிக்கை விடுவதற்காக மட்டும்தான். கூட்டம் போட்டு, போராட்டங்கள் செய்வது எல்லாம் 2000த்திற்கு முன்னோடு போய் விட்டது.

Need a vacation? Get great deals to amazing places on Yahoo! Travel.

2 comments:

Anonymous said...

பாலா!!

வாழ்க்கையில் ஒரு உருப்படியான கருத்தை ஆணித்தரமாக முன் வைத்திருக்கின்றீர்கள். இந்திய இடதுசாரிகள் மட்டுமல்ல, ஆசிய இடதுசாரிகள் அனைவருமே சோரம்போனவர்கள். அதுவும் இந்திய இடதுசாரிகள் அண்டிப் பிழைப்பு நடத்துபவர்கள். அவர்களை காகித புலி என கூறியது பொருத்தமாகத் தெரியவில்லை. உண்மையில் இந்திய இடதுசாரிகள் போலிகள். மன்மோகன் சிங் அவர்கள் கூறியதை மீண்டும் நினைபடுத்துகின்றேன் : "எங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எப்படி என்பதை இடதுசாரிகள் கற்றுக்கொள்ளவேண்டும்".

இடதுசாரிகள் கொள்கைக்காக வாழ நாமும் பிரார்த்திப்போம்.

புள்ளிராஜா