லல்லு பிரசாத் யாதவ் நிஜமாகவே ஒரு மேனஜ்மென்ட் குருதான்.
தன்னிலிருந்து விலகி யோசிக்கும் போதுதான் வித்தியாசமான யோசனைகளும், செயல்திறன்களும் வெளிப்படும். இதுதான் 'out of the box thinking' என்று கூறுவார்கள். லல்லு பல நேரங்களில் அவ்வாறு சிந்திக்கிறார்.
நேற்று அவர் இந்திய கிரிக்கெட் லீக் (ICL) பற்றிக் கூறியது "பல விளையாட்டு வீரர்கள் சந்தர்ப்பம் கிடைக்காமல், திறன்களை வெளிப்படுத்த முடிவதில்லை. அதேபோல் கிரிக்கெட்டும், பெரிய நகரங்களில் மட்டுமே விளையாடப் படுகிறது. ICL இந்திய ரயில்வேயின் மைதானங்களை தங்கள் போட்டிகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இரயில்வேக்கும் வருமானம் கிடைக்கும்".
அவரின் இந்த 'WIN-WIN' உத்தி பாராட்டப்பட வேண்டியதொன்று.
- ICLக்கு விளையாட்டு மைதானங்கள் கிடைக்கும் (BCCI மைதானங்களை தர மறுத்த நிலையில், இது நிச்சயம் உதவும்).
- இரயில்வேக்கும் உதிரி வருமானம். (How to put excess, idle or waste capacity to use?– Management strategy thinking)
- ICL, ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் என்ற நிலையிலிருந்து அடுத்தபடியான வீரர்களை நோக்கி வரும் பொழுது, பெரும் நகரங்களை விட்டு வெளிய வரத்தான் வேண்டும். பல திறமைசாலிகள் கிடைப்பார்கள் (தோனி, ஸ்ரீசாந்த், ஆர் பி சிங் போன்றவர்கள்)
- BCCI க்கு ஒரு போட்டி உருவாகும் பொழுது, அதன் செயல் திறன் இன்னும் மேம்படும். இன்னும் கொஞ்சம் professional ஆக இருப்பார்கள்.
இதில் சரத் பவாருக்கு check வைப்பது ஒரு எண்ணமாக இருந்தாலும், போட்டியை எதிர் கொள்வதும் ஒரு மேளாலரின் திறன். (ஒரு வேளை, லல்லு பின்னொருநாள் BCCI தலைவராக வரும்பொழுது ICLக்கு சாதகமாகவும் இருக்கும்.) ஆக எந்தவிதமாக இருந்தாலும், லல்லுவின் அறிக்கை வரவேற்கத் தக்கதே.
Need a vacation? Get great deals to amazing places on Yahoo! Travel.
No comments:
Post a Comment