Saturday, August 18, 2007

சோனியா காந்தி பிரதமராகும் நாள் அதிக தூரத்திலில்லை.

சோனியா காந்தி பிரதமராகும் நாள் அதிக தூரத்திலில்லை.


காலம் கனிந்து வந்து விட்டது. அது தானாக வந்ததோ, இல்லை தடியால் அடித்து கனிய வைக்கப்பட்டதோ, தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இடது சாரிகளால் எடுத்து வந்து கொடுக்கப்பட்டது.


அணுசக்தி ஒப்பந்தத்தில் மன்மோஹன் சிங்கும், இடது சாரிகளும் எதிரெதிர் துருவங்களில் நிற்கிறார்கள். நாக்கில் சனி பிடித்து இருவரும், ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


மன்மோஹன்சிங், "இடது சாரிகள் வேண்டுமானால் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்ளட்டும்" என்றும், "ஒப்பந்தத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை" என்றும் ஆணித்தரமாக ஊடகத்திலும், மக்கள் மன்றத்திலும் கூறி விட்டார். இடது சாரிகளோ அவரின் அந்த ஆணித்தரமான பேச்சால் நிலை குலைந்து போய், "தேனிலவு முடிந்து விட்டது, இப்பொழுது கல்யாண வாழ்க்கை (என்னவோ கல்யாண வாழ்க்கை என்றாலே சண்டை மட்டும்தான் போல)" என்று ஏதோ டயலாக் விட்டிருக்கிறார்கள். ஒப்பந்த அறிக்கையை முழு விவாதத்திற்கு விட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆதரவு திரும்பப்பெறப்படும் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள்.


இந்த நிலையிலிருந்து இருவரும் கீழே வருவதற்கு தற்பொழுது சாத்தியக் கூறுகள் இல்லை என்றே தெரிகிறது. அது இருவருடைய தன்னிலைத் தன்மையை பாதிக்கும் என்பதினால் ஒரு முடிவில்லா நிலையில்தான் இருக்கும்.


இடது சாரிகளோ, ஒரு கட்சி என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசாங்கமோ, மன்மோஹன் சிங் என்கிற ஒரு தனி மனிதரின் நிலையிலிருந்து வழக்காடுகிறது. அவருடைய குரலுக்கு ஆதரவாக இது வரையில் (18/8/2007 6:00 மாலை) எந்த ஒரு மந்திரியும், காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுக்க வில்லை. எங்கே இப்பொழுது குரல் கொடுத்தால் பின்னர் தனக்கு பாதகமாகப் போய் விடுமே என்று பயந்து இருக்கலாம்.


இந்த நிலைமையின் கடினத்தைக் குறைக்க, பிரணாப் முகர்ஜியும், சோனியா காந்தியும் களாம் இறங்கி உள்ளார்கள். மன்மோஹன் சிங் தன்னிலையிலிருந்து இறங்கி வராத பட்சத்தில், ஆட்சியை கவிழாமல் காப்பதற்கும்,  இடது சாரியை சந்தோஷப்படுத்தவும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படலாம். அது மன்மோஹன் சிங்கின் பதவி விலகலாக அமையலாம். அந்த நேரத்தில், சோனியா காந்தி பிரதமாராக அமரலாம்.


மன்மோஹன் சிங்கை இத்தனை நாள் எதிர்த்துக் கொண்டிருந்த இடது சாரிகளுக்கு இது ஒரு வெற்றி யாகையால் அவர்களும் அணு சக்தி ஒப்பந்தத்தில் சற்று அடக்கி வாசிக்கலாம். (எப்படியிருந்தாலும் அதில் அவர்கள் பூச்சாண்டி காண்பிக்கற மாதிரி அவ்வளவு பயங்கரமான விளைவுகள் ஒன்றுமில்லை).


சோனியா மீண்டும் ஒரு பெரிய ராஜதந்திரி போல பேசப்படுவார். பிரதிபா பாட்டில் தான் காண்பிக்க வேண்டிய விஸ்வாசத்தைக் காட்டி அவருக்கு பதவிப் பிரமானம் செய்விப்பார். பா.ஜ.பாவும், மற்ற எதிர்க் (உதிரி) கட்சிகளும், சோனியா வெளி நாட்டவர் என்ற பழைய கோஷத்தைச் சொல்லி மீண்டும் கூச்சல் போடுவார்கள். அணு சக்தி ஒப்பந்தம், பழைய கதையாகிவிடும், சத்தம் போடாமல், பிரணாப் முகர்ஜி போய் கையெழுத்து போட்டுவிட்டு வந்து விடுவார்.


ஏற்கனவேதான் "மஹாராணியின் சேவையில்" (Her Majesty's Service) பல மந்திரிகள் இருக்கிறார்களே, சட்ட அமைச்சர் பரத்வாஜ் போல ( சத்தம் போடாமல் கொட்ரொச்சி வழக்கிலிருந்து, CBI க்கும் தெரியாமல் அப்பீலை வாபஸ் வாங்கினவர்). அப்பேற்பட்ட சகாக்களுடன் இத்தாலி அம்மையாரின் ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.



Take the Internet to Go: Yahoo!Go puts the Internet in your pocket: mail, news, photos & more.

3 comments:

Anonymous said...

I don't think so.
If she want, She would have taken that chair from the begining.


One thing let me tell you that Sonia came into the scene because of BJP only. They try to make some sect of the Indians as 'foreigners' and a foreigner only came to stop it as an Indian.

(I am not an admirer of Sonia or Congress)

Babu

Anonymous said...

கடந்த தடவை இறுதிவரை முயற்சி எடுத்தும் பிரதமராக முடியவில்லை என்ற வருத்தம் சோனியாஜிக்கு உண்டு. ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு
தியாகத்தின் திரு விளக்கே!! என பாராட்டி பட்டம் கொடுத்தன. இந்திய வரலாற்றில் மீண்டும் ஒரு கறையா?. கட‌வுளே! எங்கள் வாக்காளப் பெருமக்களுக்கு நல்ல புத்தியை கொடப்பா!

Unknown said...

//எப்படியிருந்தாலும் அதில் அவர்கள் பூச்சாண்டி காண்பிக்கற மாதிரி அவ்வளவு பயங்கரமான விளைவுகள் ஒன்றுமில்லை//

அப்படியா?

பொறுத்திருந்து பார்ப்போம்