Thursday, November 29, 2007

விகடன் செய்த தவறு

"நாங்கள் இந்தியர்கள் அல்ல" என்கிற தலைப்பில் வெளியான நாகாலாந்து மக்களின் போராட்டத்தை பற்றிய ஒரு கட்டுரையில் (ஜுனியர் விகடன் 2-12-07 இதழில்) இந்திய வரைபடத்தை இவ்வாறாக பிரசுரித்துள்ளது.

 

 

 p21b

இதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை விட்டு விட்டது. தேசிய சிந்தனையுள்ள, பாரம்பரியமிக்க ஒரு பத்திரிக்கை இவ்வாறு கவனக்குறைவாக இருக்கலாமா?

7 comments:

வெங்கட்ராமன் said...

Vikatan group is not a
"தேசிய சிந்தனையுள்ள, பாரம்பரியமிக்க ஒரு பத்திரிக்கை"

They need money, money and money . . . .

Unknown said...

பாலா,
அது விகடனின் தவறு அல்ல. இந்தியா வரைபடத்தில் இப்படித்தான் இருக்கும் என்று இன்னும் நினைக்கும் அப்பாவி இந்தியர்களில் நீங்களும் ஒருவவர் அவ்வளவே. :-)))

PoK பகுதிகள் 1947இலிருந்தே நம் வசம் இருக்கவில்லை... பார்க்க மேலும்..

ஜம்மு-காஷ்மீர் வரைபடம்(Map) குழப்பும் இந்தியா
http://kalvetu.blogspot.com/2005/11/17-map.html

அகராதி said...

காஷ்மீர் விவகாரத்தில் பல விஷயங்களை மறந்து விடுவது இந்திய அரசில்வாதிகளுக்கு வசதியாக உள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற உடனே, காஷ்மீரின் அரசியல் குறித்து அந்நாட்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்துவதாக வாக்குறுதி கொடுத்து ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் அந்நாடு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனால் அந்த கருதது கணிப்பு இதுவரை நடத்தப்படவில்லை. அந்நாட்டு மக்களின் கருத்து தெரியாமலே துப்பாக்கி முனைகளில் தேர்தல் நடத்தப்பட்டோ, நடத்தப்படாமலோ இந்தியா அப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

இந்தியாவிற்குள் இருக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கே உத்தரவாதமி்ல்லாத நிலையில் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுத்தரமாட்டோம் என்று வீரவசனம் பேசுவதே தேசியம் என்ற பம்மாத்துகள் வேறு.

இவை அனைத்தின் மூலமாகவும் லாபம் பார்ப்பது பெரியண்ணன் அமெரிக்காவும், அவருக்கு அடிவருடும் அல்லக்கை இந்திய அரசியல்வாதிகளும். நஷ்டமோ இந்திய மக்களுக்கு...பொருள் ரீதியாகவும், உயிர் ரீதியாகவும்.

வீரமணிஇளங்கோ said...

பாலா அவர்களே,
பலூன் மாமாவின் கருத்து சரிதான்.இந்திய தவிர்த்த அனைத்து வெளிநாடுகளிலும்,இந்திய வரைபடம்
இவ்வாறாகத்தான் உள்ளது.சிங்கப்பூர்,மலேசியத்தொலைக்காட்சிகளில்,இந்திய வரைபடத்தை,இவ்வாறாகத்தான்
காட்டுகிறார்கள்.நாம் தான் இன்னும் பிடிவாதமாக,POKவை இந்திய வரைபடத்தில்(மட்டும்)அச்சிட்டுக்கொண்டு
திரிகிறோம்.

மேலும்,அகராதி கூறியது போல கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை.காஷ்மீரின் இந்து மன்னருக்கு,சர்தார் வல்லபாய் படேல் அளித்த
வாக்குறுதியின் படி,பல்வேறு சிறப்பு அதிகாரங்களைத்தரவுமில்லை.

Anonymous said...

Folks, this map not in accordance with the approved map published by GOI. According to the Indian constitution, publishing incorrect map is a punishable offence for Indian citizens, entities irrespective of whether you agree with the constitution or not. It is the law of the land, Period.

This is what is pointed out by Bala and he is right.

What is the ground reality in Kashmir or what could have been done or should happen now is a different topic for discussion.

@Veeramani Elango: The alien entities outside India are not bound by Indian constitution. And whatever they say need not be correct always.

Bala said...

வெங்கட்ராமன், முற்றிலும் சரி. இன்று எல்லாம் வியாபாரம்தான்.
-----------

பலூன் மாமா, அகராதி, வீரமணி இளங்கோ- உங்கள் வாதங்கள் தவறு. அதிகார பூர்வமான பாகிஸ்தான் வரைபடத்தைப் பாருங்கள். அதில் கூட ஆக்கிரமித்த காஷ்மீரத்தை அவர்கள் தங்கள் பிரதேசம் என்று கூற வில்லை. சர்ச்சைக்குட்பட்ட பகுதி (disputed territory)என்றுதான் கூறியுள்ளார்கள்.

http://www.pakistan.gov.pk/ministries/ContentInfo.jsp?MinID=6&cPath=59_283_744&ContentID=3716

நீங்கள் கூறிய வாதங்கள், எல்லா விவாத மேடைகளிலும் கூறப்பட்டவைதான். அதற்கான பதில்களும் அந்தந்த மேடைகளிலேயே கூறப்பட்டன.

உங்கள் வாதப்படியே வைத்துக்கொண்டாலும் இந்த வரைபடத்தில் தலையில் கொண்டை போல் இருக்கும் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. அதனால் அதை விட்ட மற்ற பகுதிகள் தான் இந்தியா என்று கூறுவீர்களா?

நான் கூற வந்த செய்தி இதுதான். இந்தியாவின் வரைபடம் இதுதான் என்று இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் ஒன்று இருக்கிறது. அது மட்டுமே இந்தியக் குடிமகன்களால் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அதைத் தவிர எந்த வரைபடங்கள் உபயோகித்தாலும் சட்ட விரோதமே.

//இந்தியாவிற்குள் இருக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கே உத்தரவாதமி்ல்லாத நிலையில் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுத்தரமாட்டோம் என்று வீரவசனம் பேசுவதே தேசியம் என்ற பம்மாத்துகள் வேறு.//

அப்படியென்றால், நமக்கு இராணுவமே தேவையில்லையா? முதலில் நம் தேவைகளைக் கவனித்து விட்டு, எல்லோரையும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பின், இராணுவத்தைப் பற்றி யோசிக்கலாம். உங்கள் அகராதியில் தேசியம் என்றால், கட்சியில் இருக்கும் பெயர்தான் போல.

விகடனில் இருக்கும் காப்பிரைட்டர்கள் செய்த தவறு இது. இந்த வரைபடத்தில் "நாகாலாந்தின் போர்க்குரல்" என்று வேறு விவரித்திருக்கிறார்கள். அப்போதாவது இந்த தவறு கண்ணில் பட்டிருக்க வேண்டும். இதைப் பலர் நிச்சயம் சுட்டிக காட்டியிருப்பார்கள். ஆனால் இது வரையிலும், தவறுக்கு வருந்தின மாதிரி தெரியவில்லை.

manjoorraja said...

விகடன் பத்திரிகை சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேறு விசயங்களுக்கும் கொடுக்கவேண்டும். வியாபாரமே குறியாக இருக்கக்கூடாது. மேலும் இதுப்போன்ற தவறுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.