Saturday, May 27, 2006

நின்றாலும் குற்றம், உட்கார்ந்தாலும் குற்றம்......

ஏன் இந்த விதண்டா(வீண்) வாதமோ தெரியவில்லை. இன்று பார்க்கும் பதிவுகளில்லாம் கழகக் கண்மணிகளின் கடுப்பு தெரிகிறது.

ஜெயலலிதா சட்டசபைக்கு வரவில்லை என்றபோது ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கற்பித்தார்கள். இப்போது வந்தபின்பும் ஒரே புலம்பல்.

திரு கருணாநிதியின் மோசமான உதாரணம் தொடரப்படாமல் எதிர்க்கட்சித தலைவர் இன்று சபைக்கு வந்து பேசியும் இருக்கிறார். நான் சபைக்கு வந்து எதிர்க்கட்சி தலைவர் அறையில் இருந்து சபை நடவடிக்கையை "கேட்டேன்", வரண்டாவில் இருந்து "கவனித்தேன்", (சாலையில் செல்லும் போது நினைத்துப் பார்த்தேன்) என்று சப்பைக் கட்டு கட்டியதற்கு இது எவ்வளோவோ தேவலை.

ஆமாம், இது என்ன புதுவித விளக்கம். ஏழைகளிடம் உள்ள தரிசு நிலங்களை எடுத்து, அதை மேம்படுத்தி பிறகு அவர்களிடம் திருப்பி கொடுப்பார்களாம். இதுதான் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் தரும் திட்டமா? அப்படியென்றால் உங்கள் TV வேலை செய்ய வில்லையென்றால், வசந்த் & கோ வில் மாற்றம் செய்து விடாதீர்கள். திமுக அரசு அதை எடுத்து repair செய்து, இலவச TV கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றி விடும்.

என்னய்யா இது, தலை கால் புரியவில்லை. ok ok இதுதான் அண்ணாயிசம், பெரியாரிசம் போலும்....

சரி, ஏன் நேற்று கலைஞர், தன்னை அதிமுகவினர் தாக்க வந்தபோது "கொல்றாங்க, கொல்றாங்க" என்று கத்த வில்லை. SUN TV Team ரெடியாக இல்லையோ? நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டாரே? அய்யோ பாவம்.

சில பதிவுகளில், ஜெயலலிதா இப்போது கேட்கிறாரே, ஆட்சியில் இருக்கும் போது இவர் என்ன செய்தார்? எனக் கேட்கிறார்கள்.

//இதே விஷயத்தில் அம்மா தனது ஆட்சியில் செய்தது என்ன? இதே 50 லட்சம் ஏக்கர் நிலத்தைத்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு - பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து பண்ணைகளை உருவாக்கப் போவதாக தம்பட்டம் அடித்தார். இந்த விஷயத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து உண்டு. இருப்பினும் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் இதன் மூலம் சாதித்தது என்ன?// -- சந்திப்பு...

அதை அவர் செய்ததால் தான் இன்று எதிர்கட்சியில் மக்கள் அவரை வைத்திருக்கிறார்கள். பின் ஏன் நீங்களும் அதே தவறை செய்கிறீர்கள்?

// இவர் யாரைக் கேவலப்படுத்துகிறார் என்றே தெரியவில்லை. கடனை திருப்பிச் செலுத்தியவர்கள் நாணயமானவர்கள் என்றால், செலுத்தாதவர்கள் எல்லாம் அயோக்கியர்களா?.//-- சந்திப்பு...

இது திசை திருப்பும் வாதம். இணையத்தில் சந்திப்புவின் பதிவுகள் நன்றாக இருக்கிறது என்றால் , மற்ற பதிவுகள் எல்லாம் கெட்டவை என்று கூறியதாக அர்த்தமாகுமா? செலுத்தாதவருக்கு தள்ளுபடி என்றால், செலுத்தியவருக்கு இன்னும் அதிகப்படியான ஊக்கம் கொடுக்கவேண்டும்.

By coming to assembly, she has scored a point over her rivals, silenced her critics and revived the norms. The points she expressed were very valid and the Govt. could not provide proper answers.

5 comments:

neo said...

ஓஹோ! ஆங்! சரி! அப்புறம்....நேத்து சட்டசபையில என்னன்னமோ நடந்துதாமே?! அதப் பத்தி ஒண்ணும் நீங்க கேள்விப்படல போல! சரி இருக்கட்டும்!

திரு said...

நேத்து சட்டசபையில் சேகர்பாபு என்கிற ரவுடி முதல்வரை சும்மா "கொஞ்சவா" போனாருங்க பாலா? கடந்த 5 வருடங்கள் திரு.கருணாநிதி ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்பதன் விளக்கம் நேற்று ஜெயாவின் "அ(டிதடி)திமுக" நடத்திய நாடகத்தில் விளங்கிற்று. என்ன செய்ய? எழுதுறப்போ மனசாட்சி பற்றி எல்லாம் யோசிக்கிறதேயில்ல போல!

ஜெயக்குமார் said...

//திரு.கருணாநிதி ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்பதன் விளக்கம் நேற்று ஜெயாவின் "அ(டிதடி)திமுக" நடத்திய நாடகத்தில் விளங்கிற்று. என்ன செய்ய? எழுதுறப்போ மனசாட்சி பற்றி எல்லாம் யோசிக்கிறதேயில்ல போல!//

அப்போ கருணாநிதி உயிருக்கு பயந்து தான் சட்டசபைக்கு போகவில்லையா?

கலைஞர் உயிருக்கு பயந்த தலைவரா?
கட்டப்பொம்மனுக்கு கோட்டை கட்டினால் போதாது அவனை மாதிரி இருந்து காட்டவேண்டும்.

தலைவன் என்பவன் தனது தொண்டர்களுக்கு முன்னோடியாக இருக்கவேண்டும். இந்த விசயத்தில் ஒரு அலெக்ஸாண்டர் பொல, ஒரு நெப்போலியனைப் போல இருக்கவேண்டும்.

தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை கலைஞரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கு வந்து மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசாதவர்களின் பதவி பறிக்கப்பட்டு, அவர்களை அடுத்த தேர்தலில் தகுதி நீக்கம் செய்யவேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் சரி.

என்னுடைய பதிவிலும், அதில் வெளியிட்டுள்ள பிண்ணூட்டங்களிலும் இது பற்றி விளக்கியுள்ளேன்.

http://jeyakumar777.blogspot.com/2006/05/blog-post_114872544182001978.html

மக்களுக்கு நன்கு அறிமுகமான, அதுவும் ஆளும் கட்சி ஊடகங்கள் தங்கள் கழுகுக்கண்களால் கவனித்திக்கொண்டிருக்கும் போது முதல்வரை அடிக்க எதிக்கட்சியினர் முற்படுவது தற்கொலைக்குக்ச் சமம். யாரும் அது போன்று நடந்து தங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்க மாட்டார்கள்.

SK said...

இந்தப் பதிவு ஜெயலலிதா சட்டசபைக்கு வந்ததைப் பற்றி!

ஏன் நம் நியோ நேற்றைப் பற்றிப் பேசி திசை திருப்புகிறார்?

ஒன்று ஜிங்க்-சக்; இல்லையெனில் அபௌட் டர்ன்!

:))

உட்டாலங்கடி said...

ஜெயக்குமாருக்கு மனநிலையில் ஏதாவது பிரச்சினையா? சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறுகிறார். ஜெயலலிதா சட்டசபைக்கு போனதை நியாயப்படுத்துகிறாரா அல்லது போனது தவறு என்கிறாரா?