Tuesday, May 16, 2006

தேர்தல் - 2060 - ஒரு கற்பனை

தேர்தல் - 2060

ரமேயின் (ரமேஷின் சுருக்கமே ரமே. இக்காலத்தில் பெயர் இரெண்டு எழுத்துக்கு மேல் இருந்தால் ரொம்ப கஷ்டம்) தூக்கம் Public address systeத்தில் வந்த அறிவிப்பால் கலைந்தது. ரமே தினமும் செல்லும் சாலையின் நெரிசல், அரசாங்கத் துறைகளில் இருந்த வரும் தனிப்பட்ட முறையிலான தகவல்கள், உடையும் செய்திகள்(Breaking news) அனைத்தும் இதில் அறிவிக்கப்படும்.

"நண்பர் ரமேஷிற்கு காலை வணக்கம். இன்று தேர்தல் நாள். நீங்கள் 15 வயது பூர்த்தியானவுடன் வாக்களிக்கப் போகும் முதல் தேர்தல். வாக்கு அளிப்பதற்காக உங்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நேரம் 10:15 முதல் 10:30 வரை. இந்த நேரத்தில் உங்கள் கைத்தொடர்பு சாதனம் மூலமாக 956-323-187 எண்ணை தொடர்பு கொள்ளவும். அதன் பின் உங்களுக்கு கொடுக்கப்படும் தகவல் படி நடக்கவும். உங்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில் வாக்களிக்கத் தவறினால் அரசியல் அமைப்பின் 98 (c) பிரிவின் 543 வது மாற்றல் படி உங்களின் எரிவாயு ஒதுக்கத்தில் (fuel quota) 10 விழுக்காடு குறைக்கப் படும். உங்கள் வாகன நிறுத்தக் கட்டணம் 10 விழுக்காடு உயர்த்தப் படும். உங்கள் திருமண அனுமதி ஒரு வருடம் ஒத்தி போடப் படும். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய பிற செய்திகளை அறிய வேண்டுமானால், www.1000lights.elections.2060.org வலைத்தளத்தில் மேயவும். நன்றி."

இந்த அறிவிப்புதான் ரமேயின் தூக்கத்தை தூரம் போகச் செய்தது. அவனுக்கு இந்த தேர்தல் முறை சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் சலுகைகள் பறி போய் விடுமே என்ற பயமும், சுலக்கிற்கு (சுலக்ஷ்ணா) எழுதிக் கொடுத்த ("எனக்கு திருமண அனுமதி வந்த நாளிலிருந்து 3 வருடத்திற்கு உன்னை என் மனைவியாக வசீகரித்துக் கொள்வேன். இல்லையென்றால் .. ப்ளா.. ப்ளா... ப்ளா....") ஒப்பந்தமும் நினைவிற்கு வந்து pocket கணிணியை எடுத்து வைத்து மேய ஆரம்பித்தான்.

தேர்தல் சட்டம் (2025) மற்றும், 2030, 2032, 2040, 2043, 2047, 2051, 2055, 2059 ல் செய்யப்பட்ட திருத்தங்களின் முக்கிய விதிகள்.

1) ஒவ்வொரு தொகுதியும் 1 மில்லியன் (லட்சம், கோடி எண்ணிக்கை முறை BPO வந்த சில வருடங்களிலேயே போய் விட்டது) வாக்காளர்கள் கொண்டது.

2) வாக்களிக்க ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் Junior college வரை படித்து இருக்க வேண்டும்.

3) வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட குழுமங்களாக (registered companies) இருக்க வேண்டும். ( 2047ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்ததின் படி எல்லாத் தொகுதிகளும் தனியார் மயமாக்கப் பட்டுவிட்டன.).

4) வேட்பாளர்கள் கடந்த 3 வருட வர்த்தக நிதி நிலை அறிக்கையை பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

5) அரசாங்கத்திற்கு அளிக்கும் தொகுதி வருட உறுதித் தொகையின் (Yearly Guarantee Money) மதிப்பை அறிவிக்க வேண்டும்.

6) வென்ற வேட்பாளர்கள், தொகுதியில் உள்ள வர்த்தக மற்றும் தனி மனிதர்களிடமிருந்து ஆளுமை வரி (Governance Tax) வசூலித்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூல் ஆனால் அதிலிருந்து ஒரு குறிபிட்ட சதவிகித்தை (அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டது)அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

7) வாக்காளர்கள் இந்த வேட்பாளர்களில் இருந்து ஒருவரையோ அல்லது இதில் எவரும் வேண்டாம் என்றால், "ஒருவரும் இல்லை' என்றோ அல்லது தனக்கு பிடித்த ஒரு குழுமத்தையோ பரிந்துரை செய்யலாம்.

8) எந்த வேட்பாளர், வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையில் 50 சத விகிதத்திற்கு மேல் ஆதரவு பெற்றிருக்கிராறோ அவரே அந்த தொகுதியை ஆளுமை செய்ய அனுமதிக்கப் படுவார்.

9) இந்த குழுமங்களின் தொகுதி ஆளுமை, தேர்தலில் வென்ற குழுமங்களினால் தேர்ந்து எடுக்கப்பட்ட 20 நபர் கொண்ட ஒரு மேளாண்மைக்குழுவால் கண்காணிக்கப் படும்.

10) ஒரு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் திறனாய்வு வாக்களிப்பில் இந்த குழுமங்களை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்களாம். பெரும்பான்மை ஓட்டு மூலம் இந்த குழுமங்கள் தொடர்ந்து ஆளவோ இல்லை வேறொரு குழுமத்தை தேர்ந்தோ எடுக்கலாம்.

உங்கள் தொகுதி வேட்பாளர்களை பற்றி அறிய இங்கே கிளிக்கவும்:

1000lights_candidates

1) SUN (Sakalanithi Universal Network) Ltd.,

2) Congress (TAMILNADU) Ltd.,

3) Kollywood Ltd

4) PepsiCola India Ltd.,

5) Reliance Governance Ltd.,

6) Domacratic Company of India Ltd.,

7) Hindutva Group of Companies Ltd.,

8) Communism Corporation Ltd.,

9) None of the above

10) My choice. ...............................

ரமே கைத்தொடர்பில் நேரம் பார்த்து பின் சபித்தான். இன்னும் 15 நிமிடம் இருக்கிறது. இப்போது தொடர்பு கொண்டால் தேர்தல் ஆணையம் வாக்களிக்க விடாது. சரியாக 10:15 ஆனதும் கைத்தொடர்பில் 956-323-187 அமுக்கினான்.

"வணக்கம் திரு. ரமேஷ் அவர்களே. வேட்பாளர்கள் பற்றி அறிய எண் 1 ஐ அமுக்கவும். தேர்தல் விதி முறைகளை அறிய எண் 2 ஐ அமுக்கவும். தேர்தல் ஆணயம் பற்றி அறிய எண் 3 ஐ அமுக்கவும். வாக்களிக்க எண் 4 ஐ அமுக்கவும். தொடர்பை துண்டிக்க எண் 9 ஐ அமுக்கவும்" .

4 க்கினான். "உங்கள் திரையில் 1000 விளக்கு தொகுதிக்கான வேட்பாளர்கள் தெரியும். உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு எதிரே தெரியும் எண்ணை அமுக்கவும்"

10 க்கினான். "நீங்கள் பரிந்துரைக்கும் குழுமத்தின் பெயரை சொல்லவும்...."

ரமேக்கு கோபமீட்டர் ஏற ஆரம்பித்திருந்தது. "போடா போக்கத்தவங்களா..."

"மன்னிக்கவும். நீங்கள் கூறிய பெயரில் எந்த ஒரு குழுமமும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மீண்டும் வேட்ப்பாளர் எண்ணை அமுக்கவும்.."

9 க்கினான். "உங்கள் தீர்மானம் நிச்சயமா? வேட்பாளர்களில் எவரையும் பிடிக்கவில்லையா? அப்படியானால் மீண்டும் ஒரு முறை அதே எண்ணை அமுக்கவும்.."

மீண்டும் 9. "நீங்கள் இந்த தேர்தலில் பங்கு கொண்டமைக்கு நன்றி. இருப்பினும், உங்கள் முடிவால் ஆளுமை அமைக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். எனவே இந்த அரசாங்கம் உங்கள் திருமண அனுமதியை 6 மாதம் தள்ளி வைதிருக்கிறது. வணக்கம். மீண்டும் அடுத்த தேர்தலில் சந்திக்கலாம்..."

கோபமீட்டர் உடைந்தது. "தே..." ஆரம்பித்து சற்று நிறுத்தினான். கைத் தொடர்பு துண்டிக்கப் பெற்றிருக்கிறதா என்று உறுதி செய்தவுடன் "வி.......ங்ளா.."

http://balablooms.blogspot.com5 comments:

jojo said...

Kalakkal...

Pinnitteenga.

vetri pera vaazhththukkal.

Anonymous said...

unga karpanai valam supersir.

story padikka nanna erukku.

prize ketaikka manamara vaazthukeren.

raghu said...

கதை ரொம்ப அருமை. கடைசி பாராவோட முடிவு ரொம்ப நல்லா வந்திருக்கு. ரொம்ப கதை விடாம, நடக்கப்போறதை ஓரளவு தொடர்போட கற்பனை கலந்து சரளமா எழுதியிருக்கீங்க..

பாராட்டுக்கள்.

Bala said...

என் கற்பனைக் கதை (தேர்தல் - 2060 - ஒரு கற்பனை - balamukundhan) நான்காம் இடத்தில் joint winner ஆக தெரிவு செய்யப்பட்டமைக்கு, தேன்கூடு இணையத் தளத்திற்கும், வாக்கு போட்ட, மறுமொழி இட்ட, என் தளத்திற்கு வந்து உங்களின் பொன்னான சில நிமிடங்களை இந்த பதிவை படித்ததற்காகவும் செலவழித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

நான் பதிவுகள் எழுத ஆரம்பித்து 3 மாதங்களுக்குள், எனக்கு கிடைத்த recognitions இரண்டு. என் முதல் பதிவே தினமலரில் “dot.com” பகுதியில் குறிப்பிடப்பட்டது.

கதை எழுதும் முயற்சியில் “தேர்தல் - 2060 - ஒரு கற்பனை ” என் கன்னி முயற்சி. வலைப் பதிவில் முதிர்ந்தவர்களின் மத்தியில் எனது கற்பனைக்கும் ஒரு அங்கீகாரம் கிடத்தது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷம். இனி மீண்டும் மீண்டும் வருவேன்.

பாலமுகுந்தன்…………..

cheena (சீனா) said...

அருமையான கற்பனை மற்றும் சிந்தனை. எதிர்காலத்தை நன்கு படம் பிடித்துக் காட்டிய கதை. பாவம் ரமே தன் அருமைக் காதலி சுலவைத் திருமணம் செய்ய அனுமதி ஆறு மாதம் தள்ளிப்போடப்பட்ட செய்தி அவனை கைத்தொடர்பினைத் துண்டித்து விட்டு கோபமாகத் திட்டுவதற்கு தூண்டிவிட்டது. பாவம்.