Friday, November 16, 2007

Sachin Syndrome ... 'Oh.. not again..'

Syndrome - A group of symptoms that collectively indicate or characterize a disease, psychological disorder, or other abnormal condition - American heritage dictionary

சச்சின் டெண்டுல்கரின் நேற்றைய ஆட்டம் அபாரம். ஆனாலும் சதம் அடிக்க முடியவில்லை. அவர் இவ்வாறு 90களில் ஆட்டம் இழப்பது வாடிக்கையாகி விட்டது. அவரே இதை ஒரு 'wrong habit'  என்று ஒத்துக் கொள்கிறார். 2007ல் மட்டும் 6 முறை இவ்வாறு ஆட்டம் இழந்துள்ளார்.

அவர் சதத்தை நெருங்கிய போதெல்லாம், 'இன்று சதம்தான்' என்று எழுந்து நின்று ஆர்ப்பரித்த ரசிகக் கூட்டம், இன்று ' சதம் போடுவாரா' என்று சந்தேகம்/விவாதம் செய்கிறது. இனிமேல் அவர் 'சதம் போட வேண்டுமே' என்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவர் ஆட்டமிழந்து வரும் போது, 'He is great' என்று கூறி ஆரவாரம் செய்தவர்கள், 'Just missed' என்று சமாதானம் செய்து கொண்டே கை தட்டியவர்கள், இன்று 'Oh.. not again..' என்று உச்சுக் கொட்டும் நிலைக்கு வந்து விட்டார்கள். அவரின் குழந்தையும் கூட sixer அடித்து சதத்தை எட்டி விடு என்று தொலைபேசியில் கூறும் அளவுக்கு உள்ளது.

உன்னதத்திலிருந்து, வியப்பிற்கு மாறி, இப்போது பரிதாபத்திற்கு உரியவாராகியுள்ளார். சச்சின் ஒரு 'statistician's delight'  என்று கூறுவார்கள். இப்போது ஒரு புதுவிதமான புள்ளி விவரத்தை ஆரம்பித்து உள்ளார். 50 க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, 100க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, 200க்கும் மேற்பட்ட எண்ணிக்கை, என்பதின் இடையே, 90-100 எண்ணிக்கை என்கின்ற ஒரு புது புள்ளி விவரத்திற்கு அடி போட்டு அதிலும் அவரே முதன்மையான வராயிருக்கிறார்.

பாகிஸ்தானின் சல்மான் பட், யுனிஸ் போன்றவர்கள் 90களில் சர்வ சாதாரணமாக ஆடும் போது, 400 பந்தயங்களுக்கு மேல் ஆடிய சச்சின் 90 களில் ததிங்கனத்தோம் போடுகிறார். அவர் அதிக ஒட்டங்கள் குவித்திருக்கலாம், மிக அபாரமாக ஆடி குழுவின் வெற்றியை உறுதி செய்யலாம். அனாலும் அந்த மைல்கல்லை எட்டமுடியாதிருப்பது அவ்ர் ஒரு விதமான மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.  

மேலே கூறிய விளக்கப்படி இது ஒரு வியாதியே. அவர் ஒரு மனோதத்துவ நிபுணரை ஆலோசிப்பது நல்லது எனத் தோண்றுகிறது.

 

பி:கு: சச்சினின் ஆட்டத்தையோ, அவர் குழுவின் வெற்றிக்கு ஆற்றிய பங்கைப் பற்றியோ, அவரின் dedication பற்றியோ எந்தவொரு சந்தேகமும் எழுப்பவில்லை. அவை சர்ச்சைக்கு அப்பாற்பட்டது.

5 comments:

Sridhar V said...

//மேலே கூறிய விளக்கப்படி இது ஒரு வியாதியே. அவர் ஒரு மனோதத்துவ நிபுணரை ஆலோசிப்பது நல்லது எனத் தோண்றுகிறது.//

இதெல்லாம் ரொம்ப ஓவருங்கோவ். அவர் தொடர்ந்து சதமடிச்சா 'ரிகார்டு'காக ஆடுறார்னு சொல்றது. 90-களில் அவுட் ஆனா மனோவியாதின்னு சொல்றது. கொஞ்சம் தீர்க்கமா பாருங்க
- அவர் ஆடிய முதல் 79 பந்தயங்களில் அவர் சதம் அடிக்கவேயில்லை. அதற்கப்புறம்தான் புயல் வேகத்தில் ரிகார்டுகள் செய்ய ஆரம்பித்தார்.
- இந்த வருடத்தில் 1000 ரன்களை அடித்திருக்கிறார். இது ஏழாவது முறை.
- இப்படி அவுட் ஆவது பலருக்கும் நடக்கும்தான். டிராவிட் இம்மாதிரி நிறைய அவுட் ஆயிருக்கிறார்.
- 99 ரன்கள் அடித்த மொஹம்மத் யூசுப் இன்று 100 அடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் அவுட் கூட ஆகவில்லை. விட்டால் அவருக்கும் மனோவியாதி என்று சொல்லிவிடுவீர்கள் போல.
- இன்று அவர் பதட்டத்தில் அவுட் ஆகவில்லை. துரதிர்ஷ்டவசமாகத்தான் அவுட் ஆனார்.

சரி விடுங்க... ஏதோ நீங்க பரபரப்புக்கு எழுதறீங்க.

Bala said...

ஸ்ரீதர்

statitics இங்க பாருங்க. http://stats.cricinfo.com/guru?sdb=player;playerid=1934;class=odiplayer;filter=advanced;team=0;opposition=0;notopposition=0;homeaway=0;continent=0;country=0;notcountry=0;groundid=0;season=0;startdefault=1989-12-18;start=1989-12-18;enddefault=2007-11-05;end=2007-11-05;tourneyid=0;finals=0;daynight=0;toss=0;scheduledovers=0;scheduleddays=0;innings=0;followon=0;result=0;seriesresult=0;captain=0;keeper=0;dnp=0;recent=;viewtype=bat_list;runslow=90;runshigh=99;batposition=0;dismissal=0;bowposition=0;ballslow=;ballshigh=;bpof=0;overslow=;overshigh=;conclow=;conchigh=;wicketslow=;wicketshigh=;dismissalslow=;dismissalshigh=;caughtlow=;caughthigh=;caughttype=0;stumpedlow=;stumpedhigh=;csearch=;submit=1;.cgifields=viewtype

மொத்தம் 16 தடவை. அதில் 2007ல் மட்டும் 6 தடவை. 2006ல் அவரைப் பற்றிய கடும் விமரிசனங்கள். முதலில் டெஸ்ட் கேப்டனுக்கு ஒத்துக் கொண்டது, பின்னர் மறுத்தது. 'Seniors are not treated well' என்று கூறியது. உலகக் கோப்பைக்குப் பின் எழுந்த சுடு சொற்கள். இவை எந்த ஒரு மனிதனையும் நிலை தடுமாற வைக்கும். சச்சினை கடவுளாகப் பார்க்காதீர்கள. மனிதனாகவும் பாருங்கள்.

Look at the symptoms, not at the effects.

சச்சினின் சாதனைகளில் நானும் மகிழ்பவனே.

Sridhar V said...

//மனிதனாகவும் பாருங்கள். //

ஐயா... அதைத்தானே நானும் சொல்கிறேன். 2006-ல் என்ன விமர்ச்னங்கள்? நீங்க புதுசா கிரிக்கெட் பார்க்கிறவரா? 1993 உலக கோப்பை போதே இம்ரான்கான் தொடங்கி வைத்த விவாதம்தான் 'சச்சின் டென்டுல்கர மேட்ச் வின்னரா' என்ற கேள்வி. அவர் அதற்கு அப்புறம் பலமுறை அதை நிரூபித்தாலும் தொடர்ந்து கேள்வி கேட்டு கொண்டேதான் இருப்பார்கள்.

6 முறை அவுட் ஆனால் என்ன? அட் 79 மேட்சுகளில் அவர் சதம் அடிக்காமல்தான் இருந்தார் என்று முன்னமேயே சொன்னேனே... சார்... ரன்களை பாருங்கள். அவை அணி ஜெயிக்க உதவுகிறதா என்று பாருங்கள். strike rate-ஐ பாருங்கள். சும்மா சின்ன விஷயத்தை எடுத்து ஊதி பெரிதாக்கி மனோவியாதின்னு எல்லாம் சொன்னால்... நான் ஒன்னும் சொல்றதுக்கில்லை.

//முதலில் டெஸ்ட் கேப்டனுக்கு ஒத்துக் கொண்டது, பின்னர் மறுத்தது. '//

புதுசு புதுசா கதையை கிளப்பாதீங்க. அவர் ஒத்துக்கவே இல்லை முதல்ல. அவர்கிட்ட கேட்டாங்க. அவர் யோசித்து தற்போதைய நிலையில் ஏற்று கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.

சௌத் ஆப்பிரிக்காவின் Graham Ford கோச்சாக ஒத்து கொண்டு BCCI அதை அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகும் மறுத்ததுதான் தவறு. அதுவும் ethics படிதான்.

இவர் இங்கு ஒத்துக்கவே இல்ல.

Seniors are not treated well-னு அவர் சொல்லல. It is not fair to say that Seniors did not contribute அப்படின்னுதான் சொன்னார். அவரளவுக்கு அவர் எப்பொழுதும் மெச்சூர்டாதான் நடந்துக்கிறார். ரசிகர்கள்தான் சின்ன விஷயத்தை ஊதி பெரிசாக்கறது எல்லாம்.

வவ்வால் said...

சச்சின் அதிக முறை 90-100க்கு இடையே அவுட் ஆக காரணம், அவர் நன்றாக ஆடுவது தான், 97 அடித்து வெற்றி பெறுவதை விட 101 அடித்து தோல்வி அடைவது முக்கியமா? ஒரு காலத்தில் சச்சின் 100 அடித்தும் ஆட்டம் தோற்கும் போது, அவர் 100 அடிக்கவே ஆடுகிறார் என்று சொன்னவர்கள் தானே.

மற்றவர்கள் அடிக்கடி 90 இல் அவுட் ஆகவில்லை என்றால் சச்சின் அளவுக்கு கன்சிஸ்டண்டாக ஆடவில்லை, முதலில் 50 ரன்னை கடந்தால் தானே 100 க்கு பக்கமாக வர முடியும் :-))

ஸ்ரீதர் சொன்னது போல ஆரம்பத்தில் அவர் 79 மேட்ச்களுக்கு 100 அடிக்கவே இல்லை, கிரிக்கெட் என்பது ஒரு நிலையற்ற தன்மை கொண்ட , புதிர்களைக்கொண்டது, என்ன எதிர் பார்க்கிறோமோ அதற்கு எதிராக முடிந்து விடும். அது தான் அந்த ஆட்டத்தின் சுவாரசியமும்.

ஆனால் அவர் ஸ்ட்ரைக் ரேட் பார்த்தால் எப்போதும் நன்றாகவே இருக்கும்.50 வரை வேகமாக ஆடிவிட்டு சமயத்தில் அடுத்த 50க்கு மெதுவாக ஆடுவது போல தெரியும், பல காரணங்கள் இருக்கு, எனர்ஜி லெவல் ஒரே போல எல்லா நாளும் இருக்காது, மைதானத்தில் நிலவும் வெப்பம் எல்லாம் பார்க்கணும். மேலும் பந்து கடினமாக இருக்கும் போது தட்டினாலே ஓடி விடும், மென்மையாக ஆனதும் சரியாக போகாது, இந்த காரணத்தினாலேயே ஓபனிங்க் ஆடுகிறவர்கள் பலரும் மிடில் ஆர்டரில் ஆட முடியாது அவதிப்படுவார்கள்.

இன்னும் சிலர் ஒப்பனிங்க் இறங்கியவரை 100ம் அடிக்கனும் ஆட்டம் முடியும் வரைக்கும் ஆடி மேட்ச் வின் பண்ண வைக்கனும் என்று அதி மேதாவியாக சொல்வார்கள், அதெல்லாம் நடக்கிற காரியமா?

இதற்கெல்லாம் மனோவியாதி என்று சொல்ல ஆரம்பித்த்து அதைக்கேட்டால் தான் மனோவியாதி வரும்.உங்களை போல நாளு பேர் ஏன் 100 அடிக்கலை ..அடிக்கலைனு கேட்டு இனிமே தான் பாதிப்பு வரப்போகுது அவருக்கு :-))

ஒரு காலத்தில் டெஸ்ட்ல ஒரே ஒரு இரட்டை சதம் கூட அடிக்காமலே,பல சதங்கள் அடித்து இருந்தார் அப்போதும் , இப்படித்தான் இந்த விமர்சகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க! என்ன செய்தாலும் ஒரு விமர்சனம் வரத்தான் செய்யும்!

சீனு said...

//பாகிஸ்தானின் சல்மான் பட், யுனிஸ் போன்றவர்கள் 90களில் சர்வ சாதாரணமாக ஆடும் போது, 400 பந்தயங்களுக்கு மேல் ஆடிய சச்சின் 90களில் ததிங்கனத்தோம் போடுகிறார்.//

இதற்கு காரணம் பெரும்பாலும் சாதனைக்காக வெளையாடுவதால் தான். ஜெயசூர்யா 90+ வந்தால் அடுத்து 4 மற்றும் 6 ஆக அடித்து 100-ஐ தாண்டிவிடுவாராம். கேட்டால் பந்தை வீணடித்து டென்ஷன் ஆவது டீமின் ரன் விகிதத்தை குறைக்கும் என்று கூறினார்...