Wednesday, November 14, 2007

டாடா குழுமத்தின் ஆசியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், உலகின் நான்காவது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த Computational Research Laboratories (CRL), நொடிக்கு 117.9 trillion கணக்குகள் செய்யக்கூடிய ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தயாரித்து உள்ளது. இது முழுக்க முழுக்க CRL ன் சுய தொழில் நுட்பத்தால் உருவானது என்று அதன் தலைவரும், TCS நிறுவனத்தின் முதன்மை அதிகாரியுமான S. ராமதுரை கூறியுள்ளார். இதன் பெயர் 'ஏக'. சம்ஸ்கிருத வார்த்தையான இது 'முதல்' என்ற அர்த்தம் தரும். இது பற்றி மேலும் அறிய

http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEB20071113105830&Title=Business&rLink=0

இந்தியத் தொழில் நுட்பத்தை உலகறியச் செய்யும் டாடா குழுமத்திற்கு இது மற்றும் ஒரு வெற்றிக்கல். பாராட்டுக்கள்.

2 comments:

மாசிலா said...

அடப்பாவிங்களா!

'ஏக'ன்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'முதல்'னு நேரடியா சொன்னா நாங்க புரிஞ்சிக்க மாட்டோமா? இதுக்கு போய் இவ்ளோ நூதனமான கம்ப்யூட்டர தயாரிச்சி அது வழியா எங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்திருக்காங்களே. இதெல்லாம் வீண் செலவுப்பா!

தமிழன எவ்வளவு கீழ்த்தரமா எடை போட்டு வெச்சிருக்காங்க பாருங்க.

அடுத்த வார்த்தையான 'இரண்டு'க்கு வாய்வழியாவோ அல்லது தாள் வழியாவோ சொன்னாக்கா நாங்க புரிஞ்சிக்குவோம். யாராவது டாட்டா கிட்ட சொல்லி வையுங்கப்பா!

;-D

பாச மலர் / Paasa Malar said...

பல துறைகளைப் பற்றிய உங்களின் பதிவுகள் பல்சுவை...

-மலர்