Saturday, April 05, 2008

இன்னுமொரு ‘காவிரி’

இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்தி
“The central leadership of the party, however, had adopted a cautious approach on Friday saying the state units of the party in Karnataka and Tamil Nadu were free to take their own stands in the matter”

தேர்தல் வந்து விட்டது. எஸ்.எம். கிருஷ்ணாவை கவர்னர் பதவிலிருந்து விலகச் செய்து, தேர்தல் குழுவின் தலைவராக போட்டதின் காரணமே, எப்பாடு பட்டாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதுதான். அல்வா மாதிரி வந்து மடியில் விழுந்த ஒகனேக்கல் விவகாரத்தை விட்டு விடுவார்களா? எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று அலையும் காங்கிரஸ் கட்சிக்கு, கொள்கை என்று ஒன்று உண்டா என்ன? கொள்கையே இல்லை என்பதுதான் அவர்கள் கொள்கை. பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதுதான் அவர்கள் வழி. கர்நாடகாவில், தண்ணீர் கொடுக்காதே என்பார்கள், தமிழ்நாட்டில் தண்ணீருக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள். மானம் கெட்ட நிலை. என்ன செய்வது? இதுவரை வாய்மூடி மௌனியாக இருந்த நம்மூர் சில்லுண்டித் தலைவர்களெல்லாம் ஆ, ஊ வென்று கர்நாடகாவை திட்டித் தீர்க்கலாம். அப்போழுதுதானே இங்குள்ள ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட முடியும். இது காங்கிரசின் பச்சோந்தித் தனம்.

ஊரே பற்றி எறியும் போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தானாம். அது போல, இவ்வளவு அமர்க்களம் நடைபெற்ற போதும், ‘மௌன’ மோஹன சிங் தன் அதரங்களிலிருந்து ஒரு முத்துக் கூட உதிர்க்க வில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு காங்கிரஸ் மத்திய மந்திரியும் வாயைத் திறக்கவில்லை. ஒரு மத்திய அரசாங்கம் இருக்கிறது, அதற்கு முறையிடுவோம் என்று இஙகேயுள்ள ஆளும் கட்சி நினைக்கவில்லை. மாறாக, சோனியாவிற்குத்தான் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 10, ஜன்பத் தான் உன்மையில் நாட்டை ஆள்வது.

இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகாவில் தேர்தல் முடிந்து ஒரு அரசாங்கம் அமையும் வரை பொருத்திருப்போம் என்று முடிவெடுத்துள்ளது, தற்போதைய நிலைக்கு ஒரு தற்காலிகமான செயல் என்றாலும், கர்நாடாகாவில் எந்த கட்சியின் அரசு வந்தாலும் அவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளப் போவதில்லை. இந்தப் பிரச்சினையை ஊதி, ஊதிப் பெரிசாக்கினவரே பாஜபாவின் எதியுரப்பாதான். குமாரசாமி சத்தியமாக அரசு அமைக்கப் போவதில்லை. கிருஷ்ணாவின் நிலை தான் நன்றாக தெரியும். கூட்டாட்சி வந்தால் இன்னும் இடியாப்பச் சிக்கல்தான். அப்படியிருக்க, எப்படி வரப்போகும் அரசு இந்த விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு சாதகமாக முடிவெடுக்கும்.

ஆக மொத்தத்தில். இன்னுமொரு ‘காவிரி’ உருவாகிவிட்டது. ஒப்பந்தம் போட்டு 10 ஆண்டுகள். நடமுறைப் படுத்த இன்னும் எத்தனை தலை முறைகளோ? ஆனாலும், எல்லாக் கட்சிகளுக்கும் வெற்றி. தொடக்க விழாதான் கொண்டாடி ஆயிற்றே. எனவே சாதனைப் பட்டியலில் இன்னுமொரு எண்ணிக்கை அதிகரிக்கும். கர்நாடக அரசியல் கட்சிகள், தத்தம் வெற்றி என்று பறை சாற்றிக் கொள்ளும்.

வடநாட்டில் எதிர்ப்பென்றால், அங்கே ஒட்டுப் பெறுவதற்காக இங்கே சேதுக் கால்வாய்த் திட்டம் நிறுத்தப்படும். கர்நாடகாவில் தேர்தல் என்றால், ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் தள்ளி வைக்கப்படும். கேரளாவில் கூச்சல் போட்டால், முல்லைப் பெரியாறு மல்லாக்கப் படுத்துவிடும். ஆந்திராவில் அமளி என்றால், கிருஷ்ணாவும் கோவிந்தாவாகி விடும்.

தேசிய நோக்கு இல்லாத இவர்களை எப்படி நாம் தேசியக் கட்சிகள் என்று கூற முடியும்? இனி வரும் தேர்தல்களில், தேசியக் கட்சிகளை ஒட்டு மொத்தமாகப் புறப்பணிப்பதுதான், நாம் இவர்களுக்குத் தரும் தண்டணையாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியலில் நிர்வாகமும் இல்லை, மத்திய அரசுக்கு ஆண்மையும் இல்லை.

இது என் நூறாவது பதிவு. ஆயினும் இதைப் பதியும் பொழுது எனக்கு எந்தவொரு உவகையும் இல்லை. மிகுந்த சங்கடத்துடன்தான் பதிகிறேன்.

5 comments:

சின்னப் பையன் said...

a.முதலில் பிடியுங்கள்... நூறுக்கு வாழ்த்துக்கள்.
b. மிகச் சரியான பதிவு... எல்லாத்துக்கும் ஒரு தீர்வு வந்துடும்னு நெனெக்கிற நாமதான் _____.
c. அந்த 'ஆயுத' எழுத்தை எப்படி போடறது... பாக்கணும்...:-)

naan yaar said...

///தேசிய நோக்கு இல்லாத இவர்களை எப்படி நாம் தேசியக் கட்சிகள் என்று கூற முடியும்? இனி வரும் தேர்தல்களில், தேசியக் கட்சிகளை ஒட்டு மொத்தமாகப் புறப்பணிப்பதுதான், நாம் இவர்களுக்குத் தரும் தண்டணையாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியலில் நிர்வாகமும் இல்லை, மத்திய அரசுக்கு ஆண்மையும் இல்லை.///

அருமையா சொல்லியிருக்கீங்க...அவங்க அவங்க பதவியைப் பிடிக்கறதுலையே இருக்காங்க...தேசியமாவது ஒன்னாவது!! :(

Anonymous said...

நூறுக்கு வாழ்த்துகள் !

கலைஞர் பேசாமல் அடுத்த மத்திய அரசு அமைச்சரவை சீரமைப்பிற்கு பிறகு போராட்டம் நடத்துவோம் என எப்படி ஓப்பனாக கூறுவார் ? கனிமொழி அமைச்சரான பின்னர் அவரது வாய்ஸ் எப்படி எழும்? ராமதாஸ் போல அவரும் காங்கிரசிற்கு கைதிதான் :((
சதுரங்கத்தில் காங்கிரஸ் ஜெயித்து விட்டது.

பினாத்தல் சுரேஷ் said...

சரியான குமுறல் பாலா. வரிக்கு வரி உடன்படுகிறேன்.

நூறுக்கு வாழ்த்தும்.

Anonymous said...

Dear bala,

My heartful happiness for ur 100th release. 2nd Century pera en anbana valthukkal.

Arasiyal oru Sakkadai... Adhil odum thanni ore ketta thanni.... arasiyal thallaivargal nalla thannikku kanndippa poradavillai... poradapovadhum ellai....

edhil varuthappadara namma than oru muttal