கண்டதும், கேட்டதும் # 1
தொலைக்காட்சியில் நேற்று இடம் பெற்ற இரு செய்திகள்:
செய்தி 1:
“பைசல்.... கடைத்தெரு சென்று, வீட்டுக்குத் தேவையான மளிகை மற்றும் இதர சாமான்கள் வாங்கி, பத்திரமாக வீடு திரும்பினார்.”
காட்சி: திரு பைசல் உடை அணிந்து, தலை வாரி, வீதிக்கு வந்து அங்கு வரும் மினி பஸ் ஒன்றில் ஏறுகிறார். தான் இறங்க இடத்தில் இறங்கி, வீதியை கடந்து வணிக வளாகத்தினுள் சென்று, தன் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி, பின்னர் வீடு வந்து சேர்கிறார்”.
காட்சி இடம் பெற்ற தொலைக்காட்சி : B B C.
இடம் – பாக்தாது, ஈராக்.
இதில் என்ன விசேடம்? அன்றாடம் எல்லார் வீட்டிலும் நடப்பதுதானே? சரி பயணத்தின் இடையே நடந்தது என்ன?
- வண்டி நடத்துனர் அவரை நன்கு தடவி பரிசோதனை செய்து, பின்னர் வண்டிக்குள் ஏற்றிக்கொள்கிறார்.
- வழியில் ஒரு இடத்தில் இராணுவமும் வண்டிக்குள் இருப்பவர் அனைவரையும் பரிசோதனை செய்கிறது.
- வேண்டிய சாமான்கள் இருக்கும் கடைகளுக்கு மட்டும் சென்று தேவையானவற்றை (வேறு எங்கும் பராக்கு பார்க்காமல்) மற்றும் வாங்குகிறார்.
- இதற்கு மொத்தம் ஆன நேரம் 5 மணிகள்.
இந்த காட்சி பார்க்கும் போது என் மனதில் தோண்றிய காட்சி. Blood Diamond படத்தில் நாயகன் துயர் படும் ஆப்பிரிக்க மக்களைப் பற்றி பேசும் ஒரு வசனம். “God has left them long time back…”
செய்தி # 2
“இந்த தம்பதியினருக்கு 4 குழந்தைகள். ஒரு தாயார். இவர்கள் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில், தங்கள் திருமணத்தை அங்கீகரிக்கும்படி வற்புறுத்துகிறார்கள்”.
காட்சி: ஒரு தம்பதியினர் ஜோடியாக நடந்து செல்கின்றனர்.
காட்சி இடம் பெற்ற தொலைக்காட்சி : C N N.
இடம் : ஜெர்மானிய சிறு நகரம் ஒன்று.
இதில் என்ன கடினம்? 4 குழந்தைகளுக்கு தாய், தந்தையான இவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்த தம்பதியினர் யார்?
தம்பதியினர் இர்வரும் அண்ணன், தங்கை.
தாங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் மிகுந்த பாசத்துடன் இருப்பதாலும், ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிந்திருப்பதாலும் திருமணம் செய்து கொண்டு, 4 செல்வங்களைப் பெற்று இனிதாக இல்லறம் நடத்துவதாக இவர்கள் கூறுகிறார்கள். ஜெர்மானிய சட்டப்படி இந்த திருமணம் செல்லாதது மட்டுமல்லாமல், இவர்களுக்கு 2 வருடம் சிறைத்தண்டனையும் கிடைக்கும். மருத்துவ ரீதியாக, இவ்வாறான ஒவ்வாதமுறை திருமணங்கள் மூலமாக பெற்றெடுக்கும் குழந்தைகள் மன வளர்ச்சி குன்றியவர்களாகவும் வேறு சில இயலாமைகளுக்கு ஆளானபவர்களாகவும் இருப்பார்கள் என நிருபிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் முதல் இரு செல்வங்களுக்கும் அவ்வாறான குறைகள் இருக்கின்றன.
- உறவு முறையை இவ்வளவு கொச்சைப்படுத்தும் இது போன்ற மனிதர்களை என்ன சொல்வது/ செய்வது?
- மிருகங்களுக்கும் கீழான உணர்வுகளோடு பழகும் இவர்களை என்ன செய்யலாம்?
- சரி, இந்த திருமணம் சட்டத்தின் மூலமாக முறிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட அந்த இரு குழந்தைகளின் நிலை என்ன?
1 comment:
கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கையில் ஆதாமும் ஏவாளும் தானே முதல் மனிதர்கள்.
மனித குலம் இவ்வளவு உருவாகவேண்டுமென்றால், ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் தங்களுக்குள் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றுத் தான் மனித சமுதாயத்தை வளர்த்தெடுத்திருக்க வேண்டிம்?
_______
CAPitalZ
ஒரு பார்வை
Post a Comment