Wednesday, January 24, 2007

சோம்பேறி தூர்தர்ஷனும், தேசபக்தி மந்திரிகளும்.

சோம்பேறி தூர்தர்ஷனும், தேசபக்தி மந்திரிகளும்.

இந்தியாவிலே கிரிக்கெட் போட்டி ஆரம்பித்தால், இரு அணியினருக்கும் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னரே தனியார் தொலைக்காட்சிக்கும், தூர்தர்ஷனுக்கும் இடையிலே போட்டி ஆரம்பிச்சுடும். போட்டித்தொடர், தொலைக்காட்சி ஒளிபரப்பு எல்லாம் எப்பவோ முடிவெடுத்த நிலையில், ஆட்டம் ஆரம்பிக்கற வரைக்கும் மக்களுக்கு தூர்தர்ஷன் ஒளிபரப்புமா இல்லையா எனத் தெரியாது.

வழக்கம் போல முதல் போட்டியிலெ பூவா, தலையா போட்டதுக்கப்பறம்தான் நம்ம தூர்தர்ஷன் தூக்கத்திலேருந்து முழிச்சு, ஐய்யயோ, ஆட்டம் ஆரம்பிச்சுடுசே, நாம ஒளிபரப்பலையே, மக்கள் நம்மை சும்மா வுட மாட்டங்களே, ஏதாவது பண்ணணுமே பதறி, தனியார் தொலைக்காட்சிகிட்டே போய், பிச்சைக்காரன் கணக்கா, அய்யா, அய்யா, எனக்கும் பங்கு கொடு, நானும் ஒளிபரப்பறேன், இல்லாட்டி, மக்கள் என்னை திம்சு பண்ணிடுவாங்க, ப்ளீஸ், ப்ளீஸ் ன்னு கெஞ்சி கையேந்தி நிக்கும். தனியார் தொலைக்காட்சி இப்பொதான் ரொம்ப பந்தாவா, சீ, சீ வேற இடம் போய் பாரு, நான் என்ன இளிச்சவாயனா? கோடி கோடியா கொட்டி வாங்கின உரிமையை உனக்கு தூக்கி கொடுக்கனுமா, சரிதான் போ உன் வேலைய பார்துக்கிட்டு ன்னு மூஞ்சிலே எச்ச துப்பாத குறையா விரட்டி அடிக்கும்.

அடி வாங்கின குழந்த மாதிரி, தூர்தர்ஷனும் ஓன்னு அழுது ஒப்பாரி வெச்சுகிட்டு, மந்திரி காலை போய் புடிச்சுகிட்டு கதறி அழும். னக்கு அவன் காசு குடுத்து வாங்கின முட்டாயை கொடுக்க மாட்டேங்கிறான், அவனை போய் அடிப்பா, அந்த முட்டாயை புடுங்கி எனக்கு கொடுப்பா ங்கிற கணக்கா. மந்தி(ரி) தான் தாதாவாச்சே, அது எப்படி, எம் புள்ளைக்கு கொடுக்காமே, அவன் மாத்ரம் திங்கறது. தற்றானா இல்லையா கேளு. இல்லைன்னா தாவடையிலே ரெண்டு போட்டு எடுத்துட்டு வாடா ன்னு திருப்பி அனுப்புவாரு.

தூர்தர்தஷனும் திருப்பி போய் கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி கேட்கும். நிலமைய பார்த்து தனியார் தொலைக்காட்சியும் சரின்னுட்டு சப்பி போட்ட மாங்கொட்டையை கொடுக்கறா மாதிரி, நான் ஒளிபரப்பினதுக்கபுறம் 15 நிமிஷம் கழிச்சு நீ ஒளிபரப்பு அப்படின்னு சொல்லும்.

இப்போ நம்ம மந்திரி தாதா இருக்காரே, உடனே தனியார் தொலைக்காட்சிக்கு தேச பக்தி இல்லே, எல்லாம் காசு பண்ற கும்பல் அப்டி, இப்டின்னு அறிக்க வுடுவாரு. அப்றமா மாங்கொட்டயை முழுக்க சப்பாதே, கொஞ்சம் வச்சு தூக்கி போடுன்னு சொல்லி, அந்த சப்பின மாங்கொட்டயை தூர்தர்தஷன் ஒளிபரப்பும்.

இதுலே என்ன வேடிக்கன்னா, தூர்தர்தஷன் ஏதோ காசே பண்ணாம அப்படியே கிரிக்கெட் மாத்திரம் தான் ஒளிபரப்பறா மாதிரி எல்லோரும் பேசறாங்கோ. தூர்தர்தஷன்லே பார்த்தா ஒரு ஒவருக்கு 4 பந்து தான் பார்க்கலாம். அவங்க வெளம்பரம் போட்டு முடிக்கரதுக்குள்ளே முத பந்து போட்டுர்ப்பாங்கோ. கட்சி பந்து போடரதுக்கு முன்னாடி வெளம்பரம் ஆரம்பிச்சுடுவாங்கோ.

வெண்ணய எடுக்கறது ஒர்த்தன், விரல சூப்பரது இன்னொருத்தன்ங்ற கணக்கா, எவனோ 2700 கோடி ரூபா கொடுத்த வியாபாரத்தை, இன்னொருத்தன் வந்து அல்வா கணக்கா துட்டு எதுவும் கொடுக்காம கேக்குறது நியாயமா? அப்டி கேட்டதும் இல்லாமெ, அதுலே விளம்பரம் எல்லாம் காண்பிச்சு காசு பண்ணனும்னு நினக்கிறது சரியா? தூர்தர்தஷனுக்கு தேச பக்தி நிறைய இருந்தா, காசு கொடுத்து முழு ஒளிபரப்பையும் வாங்குறதுதானெ? அப்படி முடியாட்டி, தனியார் தொலைக்காட்சி கொடுக்கறதை அப்படியே ஒளிபரப்பரதுதானே (அவங்க தனியா விளம்பரம் ஏதும் காண்பிக்காமே)? சரி அதுதான் முடியலே! தொடர் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சீக்கிரமா முழிச்சுக்கிட்டு ஏதோ டீல் போட்டு எல்லா போட்டியையும் காமிக்கலாம்தானே? தொடர் ஆரம்பிச்சதுக்கப்பறம் முழிச்சுக்கிட்டு, துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு பறந்தா எப்படி?

காசேதான் கடவுள்னு ஆனபுறவு, எதுக்கு இந்த தேசபக்தி, பாசபக்தி எல்லாம்?

No comments: