Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 2
நுண் வியாபார உரிமையை வர்த்தக ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பயன்படுத்தலாம். வர்த்தக ரீதியாக பயன்படுத்தும்போது அது தனி மனிதருக்கோ அல்லது அந்த குழுவிற்கோ ஆதாயம் ஈட்டும் பணியாக முடிகிறது. சமுதாய ரீதியாக பயன்படுத்தும்போது, அது அந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், ஆதாயமின்றி பொதுநலத்தோடு செயல் படுத்தப்படுகிறது. மருந்து தயாரிப்பாளர்கள் நடத்தும் உடல் நல பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள், விவசாய பொருட்கள் தயாரிப்பாளர்கள் நடத்தும் ஆய்வுகள், விழிப்புணர்ச்சி கூட்டங்கள் ஆகியவை சமுதாய ரீதியானவை ஆகும். Scojo என்கிற ஒரு கண்பார்வை சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம், தென் அமெரிக்காவில், கிராமங்களில் $2 க்கு படிக்கும் கண்ணாடியை முனைவர்கள் மூலம் விற்று ஆதாயமும் கண்டது. இது சமுதாய சேவையும், அதே சமயம் தொழில் வெற்றியும் ஆகும்.
இந்தியாவில் நுண் வியாபார உரிமைக்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன், அவற்றில் தலை சிறந்ததும் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டதும், குஜராத், ஆனந்த் நகரத்தில் உள்ள அமுல் பால் பண்ணையே ஆகும். சிறு கிராமங்களில் உள்ள ஆடவர்க்கும், பெண்டிர்க்கும் கறவை மாடுகள் வாங்கி கொடுத்து, அதை சேகரித்து ஒரு வெள்ளைப் புரட்சியை செய்து அந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திய அதற்கு ஈடு உண்டோ? இதைத்தவிர மற்ற உதாரணங்கள்:
- ICICI வங்கி 30க்கும் மேற்பட்ட நுண் வியாபார உரிமை நிறுவனங்கள் மூலமாக 10 லட்சத்திற்கும் மேலான குடும்பங்களுக்கு கடன்உதவி அளித்து வருகிறது.
- Aptech மற்றும் NIIT நிறுவனங்கள் நடத்தும் கணிணி கல்விக்கூடங்கள்
- ஜனனி என்றொரு நிறுவனம் மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடத்தும் சிகிச்சை மையங்கள் ( 260 மையங்கள்) http://www.janani.org/home.htm
- n-Logue நடத்தும் இணைய மையங்கள் http://www.n-logue.com
- Drishte நடத்தும் இணைய மையங்கள். இவை மின் ஆளுமையை கிராமங்களூக்கு எடுத்துச் சென்றன.
- OneRoof நடத்தும் சேவை மையங்கள். இவை தமிழ்நாட்டில், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் 9 விதமான சேவைகளை (தகவல், தொலை தொடர்பு, நிதி, கல்வி, எரிசக்தி, ஆரோக்கியம், நீர், சுகாதாரம், உபகரணங்கள் மற்றும் ஆலோசனை மையம்) அளித்து வருகிறது. http://www.oneroof.com/india.html
- DTDC (Desk to Desk Couriers), BlazeFlash தபால் பட்டுவாடா
- Arvind Mills ன் ruff ‘n’ tuff jeans. 4000 தையல்காரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தனது பிரசித்தி பெற்ற ஜீன்ஸ் ஆடையை தைத்து வழங்குகிறது.
- Lijjat papads மஹாராஷ்ட்ராவில் குடும்பப் பெண்மனிகளைக் கொண்டு சிறிய அளவில் ஆரம்பித்து இன்று பரந்து விரிந்திருக்கும் ஒரு ஸ்தாபனம்.
- HP - HP village Photographers மூலமாக டிஜிட்டல் போட்டொகிராபி- 3 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட மையங்கள்.
- Ferns ‘n’ petals பூச்செண்டு வியாபாரம், 32 மையங்கள்.
- Nirma ஏற்படுத்திய தாக்கத்தை நாம் மறந்திருப்போமா? குடிசைத் தொழிலாக ஆரம்பித்து தேசிய அளவில் வியாபித்த ஒரு ஸ்தாபனம்.
உலகமயமாகுதலும் (globalization) இதற்கு ஒரு காரணம். உலகமயமாதல் காரணமாக பண்ணாட்டு நிறுவனங்களும் இந்திய வணிக சந்தையில் நுழைகின்றன. C K பிரகலாத் (Coimbatore Krishnarao Prahalad, the Paul and Ruth McCracken Distinguished University Professor of Corporate Strategy at the University of Michigan Ross School of Business, is a globally recognized business consultant whose client list includes AT&T, Cargill, Citicorp, Oracle, TRW and Unilever. Recently Professor C. K. Prahalad earned the third spot on Suntop Media's 2005 "Thinkers 50" list, just behind Harvard strategy specialist, Michael Porter, and Microsoft founder, Bill Gates. - WIKIPEDIA) பண்ணாட்டு நிறுவனங்கள் வறூமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களை ஒதுக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறுகிறார். எனவே பண்ணாட்டு நிறுவனங்கள் நுண் வியாபார உரிமை போன்ற வியாபார நுணுக்கங்களை நிச்சயம் பயன்படுத்தும். ஏனென்றால் அதில் அவர்களுக்கு நிறைய அணுகூலங்கள் உள்ளன.
எதிர் வரும் காலங்களில் சாத்தியக்கூறுகள் எவ்வாறு இருக்கும் என அடுத்த பகுதியில பார்ப்போம். (தொடரும்)
Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 1 ஐ படிக்க