- முக்கிய கட்சிகளின் கட்டுக்கோப்புகள் கலகலக்கத் தொட்ங்கியுள்ளன. இது மிக அதிக அளவில் வேட்பாளர் அதிருப்தி / மாற்றங்கள் என செய்யப்படுவதிலிருந்து தெரிகிறது. சற்று முந்தைய காலங்களில் வேட்பாளர் அறிவிப்புகள் முழுவதுமாக ஒத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இப்பொழுதோ, ஆர்ப்பாட்டங்கள், மறியல், தலைமை நிலையப் படையெடுப்பு, ராஜினாமா, கட்சித் தாவல் போன்றவை நிகழ்கின்றன. இதனால், வேட்பாளர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இது கட்சித் தலைமை, தொண்டர்களிடமிருந்து தொலைவில் இருக்கும் நிலைமையை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. இது கட்சிகளின் வீழ்ச்சிக்கு முதல் படியாகும்.
- கட்சிகள் ஏகாதிபத்திய முறையில் செயல் படுகின்றன. (தி.மு.க வில் கூடி முடிவு எடுப்பது போல தோன்றினாலும், திரு. கருணாநிதியின் முடிவே இறுதியானது). அ.தி.மு.க வில் இரண்டாம் மட்ட தலைவர்களே இல்லை. இன்றைய இரண்டாம் நிலைத் தலைவர், நாலை கடைநிலைத் தொண்டனுக்கும் கீழே தள்ளப் படுவார். தி.மு.க வில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோருமே இரண்டாம் நிலைத் தலைவர்களே. அவர்கள் எத்தனை யுகங்களானாலும் தலைவர் பதவியை எட்டி பிடிக்க முடியாது. குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அதற்கு தகுதியானவர்கள்.
- தி.மு.க என்றும் இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி இடுகிறது. கூட்டணிக் கட்சிகளின் தோளில் கை போட்டுக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை. இது அரசியல் காலச் சக்கரத்தில் தி.மு.க. வின் இறங்கு முகத்தை காட்டுகிறது.
- 82 வயதில் திரு. கருணாநிதி தான் இன்னும் தலைவராக, முதல்வராக முன்னிலை படுத்தப் படுகிறார். இன்றைய இந்தியாவில் முன்னேறி வரும் எந்த துறையை எடுத்துக்கொண்டாளும், இளைய தலைமுறையினரே தலைமைப் பொறுப்பில் இறுக்கின்றனர். ஏனெனில் புதிய சிந்தனைகளும், துணிர்ந்து முடிவு எடுக்கும் திறணும் அவர்களுக்கெ இருக்கும். வயதான தலைவர்கள் சில நிர்ப்பந்தகளுக்கு (நன்றி உணர்வு, பாசம், பிரதி பலன்...) கட்டுப்பட வேண்டியவர்களாகிறார்கள். (பா.ஜ.க சென்ற 10 ஆண்டுகளில் முன்னேறியதின் காரணம், இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைத்ததுதான். ஆனால், மீண்டும் திரு.அத்வாணி போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் தான் அது வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது). இவர்களது அனுபவம் இளைய தலைமுறையினரை வழி நடத்தி செல்ல உதவ வேண்டுமெ தவிர, அவர்களே எக்காலத்திற்கும் தலைவராக இருக்க அல்ல.
- எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, 2004 மக்களவைத் தேர்தலில் நன்கு படித்த இளைஞ்சர்கள் தேர்ந்து எடுக்கப் பட்டார்கள். ஆனால், தமிழக 2006 தேர்தலில் இது போன்ற எவ்வளவு வேட்பாளர்களை கழகக் கட்சிகள் நிறுத்தியுள்ளன? இளையவர்கள் என்றால் தலைவர்களின் வாரிசுகள் என்றே இங்கே அர்த்தம்.
- தேர்தல் வாக்குறுதிகளில் தொலை நோக்கு சிந்தனை எள்ளவும் இல்லை. இன்னும் தமிழக வாக்களர்களை கையேந்தி, பிச்சை எடுக்கும் மனிதர்களாகவே இக்கட்சிகள் பார்க்கின்றன. "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!" - இது மேடை பிரசாரத்திற்கு மட்டுமெ. மற்ற நேரங்களில் அவர்களின் எதிர்பார்ப்புகள் "இல்லை என்று சொல்லடா! கையேந்தி நில்லடா!!" மட்டுமே. இலவச நிலம், TV, வேட்டி, சேலை, நிவாரண நிதி இத்யாதி, இத்யாதிகள். ஏன் இக்கட்சிகள் வேலை வாய்ப்புத் திட்டங்கள் (வெறும் வேலை வாக்குறுதி மட்டும் அல்ல - குறிப்பிட்ட விதமான திட்டங்கள்), கட்டமைப்பு வசதிகள், புதிய சார் நகரங்கள் (Township), சுகாதார வசதிகள், பயண வசதிகள் பற்றி எந்த ஒரு வாக்குறுதியையும் அளிக்கவில்லை?
Thursday, April 06, 2006
தமிழகத் தேர்தல் 2006 - கட்சிகளின் நிலைப்பாடுகள்.
2006 - தமிழக தேர்தலில், கட்சிகளின் உண்மையான நிலைப்பாடுகள் வெளியாகியுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment