இன்றைய செய்தி: நாடார் பேரவை தி.மு.க வை ஆதரிக்கும்.
தமிழக தேர்தலில் எல்லா சாதி சங்கங்களும் தங்கள் ஆதரவை ஏதெனும் ஒரு கட்சிக்கு தெரிவித்து உள்ளன.
இனிமேல் சாதி ஓட்டை தேடி அலைவதிற்கு வேறு ஒரு சாதியும் இல்லை.
பாரதியார் கண்ட கனவில் ஒரு பகுதி நிறைவு பெற்று விட்டது.
Friday, April 28, 2006
Monday, April 17, 2006
தியாகிகளுக்கு வழங்கும் உதவித்தொகை உயர்த்தப் பட்டது.....
இன்று மாலை கூடிய அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறிய இந்த தீர்மானத்தின் மூலமாக, பின் தேதியிட்ட நாளிலிருந்து, மிக உயர்ந்த, தன்னலம் கருதாமல், நாட்டின் முன்னேற்றத்திற்காக தியாகங்கள் செய்த சில குறிப்பிட்ட தியாகிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை, மாதம் ரூபாய் 3 லட்சமாக உயர்த்தப் படுவதாக அரசாங்கக் குறிப்பு ஒன்று கூறுகிறது. இதற்கு வருமான வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப் படுவதாக, இந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
இது குறித்த பேட்டி ஒன்றில் நிருபர்கள் "ஏழ்மையில் வாடும் கட்சித் தலைவர் அவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்குமா ?" எனக் கேட்டனர்.
அதற்கு ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர், "இந்த அறிவிப்பு எந்த ஒரு தனி நபரையும் முன்னிறுத்தி செய்யப்படவில்லை. எனினும், தனக்கு வந்த மந்திரி சபையின் தலைவர் பதவி, தான் வகித்த மன்ற உறுப்பினர் பதவி, தேசியக் குழுவின் தலைமைப் பதவி, மற்றும் பல தலைமைப் பதவிகள் ஆகியவற்றை, தன்னலம் கருதாமல், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக தியாகம் செய்த அவரைத் தவிர, வேறு யாருக்கு அந்த தகுதி உண்டு" என பதில் கூறினார்.
-------
கவனிக்க: இந்த கற்பனைக்கும், இன்று வந்த திருமதி சோனியா காந்தியின் நிதி நிலை ஒப்புமை (financial declaration) க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
Sonia Gandhi owns no car and the money she holds in cash is a meagre Rs 20,000.
But she does have an ancestral house in her country of origin Italy and its worth Rs 13 lakh.
The total worth of Gandhi's jewellery is Rs 21.66 lakh.
Shas lent Rs 5,04,394 to her daughter Priyanka Gandhi Vadra. Has Rs 85,338 in her savings account in UCO Bank and Rs 20 lakh in fixed deposit in the same bank.
She owns Rs 12 lakh in RBI bonds and Rs 52,800 in UTI, besides holding ten shares of Maruti Technical Services Pvt Ltd, whose worth was not quoted in the declaration.
Also, she owns 500 shares of Western India Tanneries, her declaration said without quoting their value.
இது குறித்த பேட்டி ஒன்றில் நிருபர்கள் "ஏழ்மையில் வாடும் கட்சித் தலைவர் அவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்குமா ?" எனக் கேட்டனர்.
அதற்கு ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர், "இந்த அறிவிப்பு எந்த ஒரு தனி நபரையும் முன்னிறுத்தி செய்யப்படவில்லை. எனினும், தனக்கு வந்த மந்திரி சபையின் தலைவர் பதவி, தான் வகித்த மன்ற உறுப்பினர் பதவி, தேசியக் குழுவின் தலைமைப் பதவி, மற்றும் பல தலைமைப் பதவிகள் ஆகியவற்றை, தன்னலம் கருதாமல், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக தியாகம் செய்த அவரைத் தவிர, வேறு யாருக்கு அந்த தகுதி உண்டு" என பதில் கூறினார்.
-------
கவனிக்க: இந்த கற்பனைக்கும், இன்று வந்த திருமதி சோனியா காந்தியின் நிதி நிலை ஒப்புமை (financial declaration) க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
Sonia Gandhi owns no car and the money she holds in cash is a meagre Rs 20,000.
But she does have an ancestral house in her country of origin Italy and its worth Rs 13 lakh.
The total worth of Gandhi's jewellery is Rs 21.66 lakh.
Shas lent Rs 5,04,394 to her daughter Priyanka Gandhi Vadra. Has Rs 85,338 in her savings account in UCO Bank and Rs 20 lakh in fixed deposit in the same bank.
She owns Rs 12 lakh in RBI bonds and Rs 52,800 in UTI, besides holding ten shares of Maruti Technical Services Pvt Ltd, whose worth was not quoted in the declaration.
Also, she owns 500 shares of Western India Tanneries, her declaration said without quoting their value.
Thursday, April 06, 2006
தமிழகத் தேர்தல் 2006 - கட்சிகளின் நிலைப்பாடுகள்.
2006 - தமிழக தேர்தலில், கட்சிகளின் உண்மையான நிலைப்பாடுகள் வெளியாகியுள்ளன.
- முக்கிய கட்சிகளின் கட்டுக்கோப்புகள் கலகலக்கத் தொட்ங்கியுள்ளன. இது மிக அதிக அளவில் வேட்பாளர் அதிருப்தி / மாற்றங்கள் என செய்யப்படுவதிலிருந்து தெரிகிறது. சற்று முந்தைய காலங்களில் வேட்பாளர் அறிவிப்புகள் முழுவதுமாக ஒத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இப்பொழுதோ, ஆர்ப்பாட்டங்கள், மறியல், தலைமை நிலையப் படையெடுப்பு, ராஜினாமா, கட்சித் தாவல் போன்றவை நிகழ்கின்றன. இதனால், வேட்பாளர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இது கட்சித் தலைமை, தொண்டர்களிடமிருந்து தொலைவில் இருக்கும் நிலைமையை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. இது கட்சிகளின் வீழ்ச்சிக்கு முதல் படியாகும்.
- கட்சிகள் ஏகாதிபத்திய முறையில் செயல் படுகின்றன. (தி.மு.க வில் கூடி முடிவு எடுப்பது போல தோன்றினாலும், திரு. கருணாநிதியின் முடிவே இறுதியானது). அ.தி.மு.க வில் இரண்டாம் மட்ட தலைவர்களே இல்லை. இன்றைய இரண்டாம் நிலைத் தலைவர், நாலை கடைநிலைத் தொண்டனுக்கும் கீழே தள்ளப் படுவார். தி.மு.க வில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோருமே இரண்டாம் நிலைத் தலைவர்களே. அவர்கள் எத்தனை யுகங்களானாலும் தலைவர் பதவியை எட்டி பிடிக்க முடியாது. குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அதற்கு தகுதியானவர்கள்.
- தி.மு.க என்றும் இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி இடுகிறது. கூட்டணிக் கட்சிகளின் தோளில் கை போட்டுக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை. இது அரசியல் காலச் சக்கரத்தில் தி.மு.க. வின் இறங்கு முகத்தை காட்டுகிறது.
- 82 வயதில் திரு. கருணாநிதி தான் இன்னும் தலைவராக, முதல்வராக முன்னிலை படுத்தப் படுகிறார். இன்றைய இந்தியாவில் முன்னேறி வரும் எந்த துறையை எடுத்துக்கொண்டாளும், இளைய தலைமுறையினரே தலைமைப் பொறுப்பில் இறுக்கின்றனர். ஏனெனில் புதிய சிந்தனைகளும், துணிர்ந்து முடிவு எடுக்கும் திறணும் அவர்களுக்கெ இருக்கும். வயதான தலைவர்கள் சில நிர்ப்பந்தகளுக்கு (நன்றி உணர்வு, பாசம், பிரதி பலன்...) கட்டுப்பட வேண்டியவர்களாகிறார்கள். (பா.ஜ.க சென்ற 10 ஆண்டுகளில் முன்னேறியதின் காரணம், இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைத்ததுதான். ஆனால், மீண்டும் திரு.அத்வாணி போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் தான் அது வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது). இவர்களது அனுபவம் இளைய தலைமுறையினரை வழி நடத்தி செல்ல உதவ வேண்டுமெ தவிர, அவர்களே எக்காலத்திற்கும் தலைவராக இருக்க அல்ல.
- எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, 2004 மக்களவைத் தேர்தலில் நன்கு படித்த இளைஞ்சர்கள் தேர்ந்து எடுக்கப் பட்டார்கள். ஆனால், தமிழக 2006 தேர்தலில் இது போன்ற எவ்வளவு வேட்பாளர்களை கழகக் கட்சிகள் நிறுத்தியுள்ளன? இளையவர்கள் என்றால் தலைவர்களின் வாரிசுகள் என்றே இங்கே அர்த்தம்.
- தேர்தல் வாக்குறுதிகளில் தொலை நோக்கு சிந்தனை எள்ளவும் இல்லை. இன்னும் தமிழக வாக்களர்களை கையேந்தி, பிச்சை எடுக்கும் மனிதர்களாகவே இக்கட்சிகள் பார்க்கின்றன. "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!" - இது மேடை பிரசாரத்திற்கு மட்டுமெ. மற்ற நேரங்களில் அவர்களின் எதிர்பார்ப்புகள் "இல்லை என்று சொல்லடா! கையேந்தி நில்லடா!!" மட்டுமே. இலவச நிலம், TV, வேட்டி, சேலை, நிவாரண நிதி இத்யாதி, இத்யாதிகள். ஏன் இக்கட்சிகள் வேலை வாய்ப்புத் திட்டங்கள் (வெறும் வேலை வாக்குறுதி மட்டும் அல்ல - குறிப்பிட்ட விதமான திட்டங்கள்), கட்டமைப்பு வசதிகள், புதிய சார் நகரங்கள் (Township), சுகாதார வசதிகள், பயண வசதிகள் பற்றி எந்த ஒரு வாக்குறுதியையும் அளிக்கவில்லை?
Tuesday, April 04, 2006
ஏன் இந்த அவசரம்?
தேர்தல் ஆணையம் ராய் பரேலி தொகுதியில் மே 8 தேதியில் இடைத்தேர்தலை நடத்த ஆணை பிறப்பித்து உள்ளது. இது சாதரணமான ஒரு அறிவிப்பு போல தோண்றினாலும், நிகழ்ச்சி தொடர்வுகள் சற்று வித்தியாசமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
- 14ம் மக்களவையின் ஏழாவது அமர்வு பிப்ரவரி முதல் மே வரை.
- இந்த தொடர் கடந்த 22ம் தேதி மார்ச் மாதம், 10ம் தேதி மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- திருமதி. சோனியா காந்தி, தனது மக்களவை உறுப்பினர் பதவியை 23ம் தேதி ராஜினாமா செய்தார் (அதாவது, கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் பட்ட பின்னர்.)
- இப்பொழுது தேர்தல் ஆணையம் (ராஜினாமா செய்த 13 நாட்களுக்குள்) இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது. தேர்தல் தேதி மே 8. முடிவு அறிவுக்கும் நாள் மே 11.
- மீண்டும் மக்களவை கூடும் தேதி மே 10.
- திருமதி. சோனியா காந்தி மீண்டும் தேர்ந்து எடுக்கப் படுவது திண்ணம்.
- மே 11 அல்லது மே 12ல் அவர் மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆவார்.
- ஆக திருமதி. சோனியா காந்தி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே மக்களவை செல்ல மாட்டார்.
இது மாதிரி, இவ்வளவு குறுகிய நாட்களில் முன்னர் எப்பொழுதாவதாவது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப் பட்டுள்ளதா? இப்பொழுது ஏன் இந்த அவசரம்?
ஏற்கனவே தேர்தல் தலைமை அதிகாரி திரு. நவீன் சாவ்லா, காங்கிரசிற்கு வேண்டப்பட்டவர் என்று ஒரு குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. இந்தச் செயல் அதை நிரூபணம் செய்யாதா?
திருமதி. சோனியா காந்தி இன்னும் ராஜிவ் காந்தி பவுண்டேஷன் தலைமை பதவியை ராஜினாமா செய்ய வில்லை குறிப்பிடத் தக்கது.......
Monday, April 03, 2006
தேர்தல் பற்றிய என் கண்ணோட்டங்கள் # 1
ஜனநாயகத்தில், தேர்தல் என்பது மிக முக்கிய ஒரு அம்சமாகும். ஆனால், கட்சி அரசியலில், இந்த தேர்தல் சில சமயங்களில் எள்ளி நகையாடப் படுகிறது. உதாரணத்திற்கு, சமீபத்திய சோனியா காந்தியின் ராஜினாமா நாடகம். இதன் பாதிப்பும், என்னுள் நீண்ட காலமாக தோன்றிய எண்ணங்களின் பிரதிபலிப்புமே, இந்த பதிப்பு.
- தேர்தல் அறிக்கைகள் ஓரு சாசனம் (Charter) ஆகும். இவை மக்களுக்கு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அளிக்கும் ஒரு உறுதிமொழி. இந்த உறுதிமொழிகளை, தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் / சட்டசபையில் எடுக்கும் உறுதிமொழிக்கு சமமானதாக கருத நினைப்பதற்கு, விதி முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் (அப்போது தான் இந்த, எல்லொருக்கும் TV, 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி போன்ற பம்மாத்து வாக்குறுதிகளை கட்சிகள் அளிக்காது).
- எந்த ஒரு உறுப்பினரும் மரணம் அடைந்தலோ, உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ, அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படக்கூடாது. முன்பு நடந்த தேர்தலில் இவருக்கு அடுத்த படியாக ஓட்டு வாங்கிய வேட்பாளரை மன்ற உறுப்பினராக ஆக்க வேண்டும். இதற்கு அவர் , முன்னவர் வாங்கிய ஓட்டில் குறைந்த பட்சமாக 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த தொகுதிக்குள் வரும், District Magistrate அல்லது District Collector ஐ நியமன உறுப்பினராக செய்ய வேண்டும். இந்த உறுப்பினர்கள் அடுத்த தேர்தல் வரை பதவி வகிக்கலாம்.
- ஆட்சி அமைத்த கட்சிகள், ஆண்டிற்கு ஒரு முறை, தேர்தல் வாக்குறுதி பற்றிய முன்னேற்ற தகவல் அறிக்கை (Progress Report) ஒன்றை பொது மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆண்டு தோறும், சட்ட மன்ற / பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் (நெருங்கிய உறவினர்கள் உட்பட) சொத்து மற்றும் வருமான அறிக்கையை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்த பட்சம் 80% கூட்டத் தொடர்களில் பங்கு பெற்றிருக்க வேண்டும். (இந்த வெறும் கையெழுத்து போடும் பாவ்லா வேலையெல்லாம் கூடாது. ஆக்க பூர்வமான பங்கேற்பு வேண்டும்).
- தன் தொகுதிக்குள் நடக்கும் அரசு அமைப்பு கூட்டங்களில் (திறப்பு விழாக்கள் அல்ல. Distrcit Consultative Committee போன்ற அமைப்புகள்), 80% கலந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட முடியாது.
- எந்த ஒரு தனி நபரும் தொடர்ச்சியாக 2 முறைக்கு மேல் சட்ட/ பாராளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப் பட கூடாது. வாழ்நாளில் 8 முறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது.
- திரும்பப் பெரும் உரிமை வேண்டும் (இது ஏற்கனவே விவாதத்தில் உள்ளது).
இன்னும் வரும்................
Subscribe to:
Posts (Atom)