Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Friday, June 13, 2008

சமுதாயச் சீரழிவுகள்

கடந்த சில நாட்களாக கேள்விப்படும் செய்திகள்,  தொண்மை வாய்ந்த, வளர்ந்த செழிப்பான நாகரீகம் என்று நாம் சொல்லிக் கொள்ளும் நமது நாகரீகம் எவ்வளவு கீழ்த்தரமான நிலையை எட்டியிருக்கிறது என்பதை தெளிவு படுத்தும். அறியாமையை விலக்கி, பகுத்தறிவோடு கூடிய உணர்தலை புகட்டக்கூடிய கல்வியறிவு பெற்ற சிலர் எவ்வளவு கீழ்த்தரமான செயல்களைச் செய்துள்ளார்கள் என்று அறியும் போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.

மனைவியும், கணவரும் டில்லி அருகில், நொய்டாவில்  பல் மருத்துத் துறையில் இருப்பவர்கள்.  கணவர், தன் 14  வயது மகளை கொலை செய்திருக்ககூடும் என்று காவல்துறை கருதி அவரை சிறையில் வைத்துள்ளது.

நன்கு படித்த, பல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை செய்யும், நான்கு மென்பொருள் பொறியாளர்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மிரட்டி பணம் பறித்தார்கள் என்கிற குற்றத்திற்காக பெங்களூருல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தன் பழைய காதலனை, புதிய காதலனோடு சேர்ந்து சதி செய்த கொன்ற குற்றத்திற்காக, MBA படித்துக் கொண்டிருந்த மாணவிக்கும் மாணவனுக்கும் புனாவில் உள்ள நீதி மன்றம், ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தன் உடன் வேலை பார்த்த விமான உபசரிப்பு பெண் ஊழியரை,  தங்கும் விடுதியின் அறையில் கொலை செய்த குற்றத்திற்காக,  சக விமான செலுத்துநர்(co-pilot), மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் சகோதரியைக் காதலித்த குற்றத்திற்காக, காதலனைக் கொன்ற வழக்கில், யாதவ் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, தில்லி நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும், கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்தவை. ஊடகங்கள் மூலமாக பெரிதாக விவாதிக்கப்பட்டதால் அறியப்பட்டவை. இக்குற்றங்களில் சம்பத்தப் பட்டவர் அனைவரும், மத்திய தர வாழ்க்கை நிலையில் உள்ளவர்கள். நல்ல படிப்பறிவு  பெற்றவர்கள். கல்வியறிவை, தன் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை நெறித்திறனை மேம்படுத்த உபயோகப்படுத்தாமல், நெறி கெட்டு மற்றவர்களின் உயிரைப் பறிப்பதற்கு உபயோகப்படுத்தும் இந்த சமுதாயப் பதர்களை, சட்டங்கள் மிக அதிகபட்ச தண்டனை வழங்கி, சமுதாய மேன்மைக்கு மேலும் பங்கம் வராமல் காக்க வேண்டும்.

Tuesday, May 27, 2008

பிணம் தின்னும் கழுகுகள்

பிணம் தின்னும் கழுகுகள்
தில்லி, நொய்டா சிறுமி கொலை வழக்கில், ஊடகங்களின், குறிப்பாக தொலைக்காட்சிகளின் போக்கு மிகவும் அநாகரிகமானது. எள்ளளவு கூட மனதாபிமானம் இல்லாமல், அச்செய்தியை கூறு போட்டு, கூப்பாடு கூவி விற்று, தங்களின் ‘Air time’ நிரப்பிக் கொண்டதுமில்லாமல், ‘TRP rating’கை உயர்த்தவும் உபயோகப்படுத்திக் கொண்டது. தொலைக்காட்சிகள், வேட்டை நாய் போல் தேடித் தேடி, துருவித் துருவி, தெருவில் போவோர் வருவோர் அனைவரையும் பேட்டி கண்டு, , காவல் துறையினரை ஒரு முனைப்போடு செயல் பட முடியாமல் வைத்து விட்டன.

காவல் துறை வழக்கில் கவனம் செலுத்தாமல், பேட்டி கொடுப்பதிலும், அறிக்கை விடுவதிலும்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். வழக்கு ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே காவல் துறை அதிகாரி மாற்றப்படுகிறார். இத்தனைக்கும் அவர் செய்தது என்ன? ஃபாரன்ஸிக் அறிக்கை வந்த பிறகுதான் திட்ட வட்டமாக எதுவும் கூற முடியும். அதற்கு ஓரிறு வாரங்கள் ஆகலாம் என்றார். அதில் ஒன்றும் தவறில்லையே? முறையாக ஒரு வழக்கை நடத்தினால்தான் அதில் தவறின்றி முடிவெடுக்க முடியும். இவ்வளவு உணர்ச்சி பூர்வமான ஒரு வழக்கை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நடத்த முடியுமா?

அவருக்குப் பின் பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரி என்ன பேட்டி கொடுக்கிறார்? அந்த சிறுமியும், வீட்டில் உதவியாளாராக இருந்தவரும் இருந்த நிலை கண்டிக்கத் தக்கதாக (‘objectionable’) இருந்ததாகவும், ஆனால் அதே சமயம், அவர்கள் தன்னிலை (compromising) தவறி இல்லை என்றும் பேட்டி கொடுக்கிறார். இவர் என்ன திரைக்கதை வசனகர்த்தாவா, கதை எழுத? இந்த வார்த்தைகளின் விளைவுகள் தெரியாமல் பிரயோகப்படுத்தலாமா? அதுவும் SSP போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள்? இவர்கள் பேட்டி கொடுக்கும் நேரத்தை வழக்கில் செலுத்தியிருந்தால், சிறுமியின் மரணத்திற்கான காரண, காரியங்களைக் கண்டு பிடித்திருக்கலாம்.

ஊடகங்கள் இச்சம்பவத்தை ஒரு “கௌரவக் கொலை (Honor killing)” என ஒரு புது அடைமொழி கொடுத்து வர்ணிக்கின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானில் ஒன்று அறியாத பலரை தவறுதலாகக் கொன்றதற்கு, அமெரிக்கர்கள் கூறிய “collataeral damage” என்கிற வர்ணணை போல, சிறிதும் ஈவு இரக்கமின்றி எப்படி இவர்களால் இப்படிக் கூறமுடிகின்றது. இவர்களுக்கு, குடும்பம், குழந்தைகள் இல்லையா? வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களா?
காவல்துறையினர் கூறும் ஒரு முக்கிய தடையம் என்ன தெரியுமா? ஹரித்துவாரில், ஈமக் கிரியை நடத்தும் இடத்தில், சிறுமியின் அப்பா, மரணம் இரவு 2 மணிக்கு நடந்ததாக பதிவு செய்துள்ளாராம். ஆனால் விசாரணையின் போது காலை 6 மணிக்குத்தான் தனக்கு மரணம் பற்றி தெரியும் என்றாராம். சம்பவம் நடந்த நேரமும், தெரிந்த நேரமும் வித்தியாசமாக இருக்கலாமே? இதில் என்ன தடையம் கிடைத்திருக்கக்கூடும். இந்த விதமான கோமாளித்தனமான விதத்தில் தான் விசாரணை செல்கிறது.

போதாதற்கு, உடன் பணி புரியும் பெண் மருத்துவருடன் தகாத உறவு என்று ஒரு குற்றச் சாட்டு. இனி அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் கூடுமான வரை எதிர் பாலர் இல்லாத அலுவலகத்தில் தான் பணி செய்ய வேண்டும். நம் போதாத காலம், ஏதேனும் சம்பவம் நடந்து விட்டால், இது மாதிரிதான் நம் மானமும் பறிபோகும். தமிழகக் காவல்துறை கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கஞ்சா எடுப்பதைப்போல, இந்த தகாத உறவு, வடக்கத்திய பாணி போலும்.

இதில் முக்கியமாக இந்த சிறுமியின் மானத்தை விலை போட்ட இந்த தொலைக்காட்சிகளும், காவல் துறையும், துச்சாதனனை விடக் கொடியவர்கள். ஊடகங்கள், பிணம் கேட்பாரற்றுக் கிடந்தால் எப்படி கழுகுகளும், வல்லூறுகளும் அதை கொத்திக் கிளறி பிண்டத்தை வாறி இறைக்குமோ, அப்படி பால் வடியும் முகம் கொண்ட சிறுமியை, பச்சிளம் மாறாத ஒரு குழந்தையை சின்னா பின்னப் படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் இவர்கள் அனைவரும், தத்தம் தொழிலில், நன்கு படித்து, அனுபவம் பெற்றவர்கள். செய்தியை மக்களுக்கு எப்படி அளிக்க வேண்டும் என்று அறிந்தவர்கள். ஒரு துர்மரணச் செய்தியை எப்படி வியாபாரமாக மாற்றினார்கள் என்றுதான் தெரியவில்லை.

இதில் என்ன ஒரு அலங்கோலம் என்றால், 25ம் தேதி ஊடகங்களின் முக்கிய செய்தி கர்நாடக தேர்தல் நிலவரம் ஆகும். கல்யாணப் பந்தி முடிந்து எச்சில் இலைகள் குப்பைத்தொட்டியில் விழும் போது எப்படி தெரு நாய்கள், பக்கத்து தொட்டியிலிருந்து அடித்து, பிடித்து இன்னொரு குப்பைத் தொட்டிக்குத் தாவுமோ அப்படித் தாவி தேர்தல் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்தனர். கேட்டால் இதுதான் இதழியல் (journalism) என்பார்கள், வெட்கம் கெட்டவர்கள்.

இந்நிகழ்வுகளில், பாரட்டப்பட வேண்டியவர்கள் மத்திய மந்திரி திருமதி ரேணுகா சவுத்திரியும் மற்றும் சில அரசு சாரா அமைப்புகளும்தான். ஒரு சிறுமியை தவறாக சித்தரித்து களங்கப்படுத்தியதற்காகவும், அவர் பெயரைக் கூறி அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகவும் juvenile சட்டங்களின் படி காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தொலக்காட்சிகளின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, May 05, 2008

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்

சென்ற வெள்ளிக்கிழமை (மே மாதம் 2 ம் தேதி) பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிய ஒரு கருத்தரங்கம் ரியாத், சௌதி அரேபியாவில் நடை பெற்றது. அதில் நான் வாசித்தளித்த கட்டுரை.
........

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்
(கோ. பாலமுகுந்தன்)

மேதகு இந்தியத் தூதர் அவர்களுக்கும், எழுத்துக்கூடத்தின் உறுப்பினர்களுக்கும், மற்றும் ஏனைய பெரியோர்களுக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்.

பாவேந்தரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், எனக்கும் ஒரு பங்களித்து, சந்தர்ப்பம் தந்துதவிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு என் நன்றி.

ஓர் இரவு திரைப்படத்தில் வரும் இந்த பாடலை ஒலி பரப்பி என் உரையை வாசிக்கிறேன்.

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே எம் வாழ்வில் உணர்வு சேர்க்க
நீ அன்றை நற்றமிழ்க் கூத்தில் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா
அறமிதென்றும் மறமிதென்றும் யாம் அறிகிலாதபோது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா..”

இதயத்தின் வலிக்கு இசையை அழைத்தவன். வன்முறையை நீக்கி, ஏழ்மையைக் களைவதற்கு தமிழை துணைக்கு அழைத்தவன். கல்வி புகட்ட வள்ளுவனை ஆசானாய் ஏற்றவன். தமிழே மூச்சாய், தாரக மந்திரமாய், தரணியெங்கும் தழைத்தோங்க சங்க நாதமிட்டவன்.

பாவேந்தர் பற்றி பேசும் போது இயற்கையுடன் அவர் கொண்டிருந்த பிணைப்பை மறக்க முடியுமா? புரட்சிக் கவிஞரின் மறு பக்கம் என்று சொல்லக் கூடிய வகையிலே அவர் இயற்கையை வர்ணித்து எழுதிய ‘அழகின் சிரிப்பு’ ஒரு தெவிட்டாத தேன். மங்காத ஒளி. வர்ணனைகள் காட்சிகளை கண் முன் கொண்டு நிறுத்தும். கை கோர்த்து நடத்திச் செல்லும்.

அவற்றிலிருந்து சில வர்ணணைகளை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடற்கரையை, தினம் வந்து போகும் காதலர்கள் பதித்த கால் தடங்களால் வரையப்பட்ட ஒரு பெரிய புள்ளிக் கோலம் என்று வர்ணிக்கும் கவிஞர்கள் மத்தியில், அதை ஒரு மணல் மெத்தையென்றும், அங்கே மேவும் நீர் அலைகளை, கல்விக் கூடத்தில் பாடம் பயிலும் இளைஞர்களின் எழுச்சி மிகு பூரிப்பிற்கு ஒப்பிடுவதும் இவர் போன்ற புரட்சியாளர்களால் மட்டும்தான் முடியும்.
…..
கடல் ஆர்ப்பரித்த முழக்கத்தை இசையாய் வரித்த வாணர் இவர்.
“கடல் நீரும் நீல வானும் கை கோக்கும்!
அதற்கிதற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில் வீணை;
அவ்வீணை மேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்து இன்பத்தை
வடிக்கின்ற புலவன்!
தம்பி, வண்கடற் பண் பாடல் கேள்”
அதனால் தான் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..” என்று ஏங்கினானோ?
….
‘அழகு’ என்றாலே கவிஞர்களுக்கு எப்போதும் ஒரு பரவசம்தான். அழகைக் கண்டால் ‘ஆடாத மனமும் உண்டோ?’ அழகை ஒரு பெண்ணாகவே பாவிக்கும் கவிஞர்கள் தான் இந்தப் புவியில் உண்டு. சுப்பு ரத்தினம் இதற்கு விதி விலக்கா? ஆனால் என்ன, மற்றவர்கள் மங்கையை (அழகை) நிலவில், இரவில் அதன் ஒளியில் கண்டனர். இவர் கதிரவனின் இளம் காலைக் கதிரில் கண்டார். கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையில் கண்டார்.

தென்றலை திகட்டாமல் வர்ணிக்கும் வள்ளல் இவர். “தென்றல் வந்து என்னைத் தொடும். சத்தமின்றி முத்தம் இடும்” என்றார் ஒரு கவிஞர். இவரும் அவ்வாறே தென்றலின் குறும்பை வர்ணிக்கிறார். “பெண்கள் விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை” என்று. குழந்தையின் நெற்றியில் விழும் சிறு குழலை அசைந்தாட்டி, மழலையை சிலிர்க்க வைக்கும் தென்றலைப் போற்றுகிறார்.
“கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்தனங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள், தமிழைத் தந்தாள்,
தமிழ் எனக்கு அகத்தும், தக்கத் தென்றல் நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வதை நான் கனவிலும் மறவேண் அன்றோ?” என்று தென்றலுக்கு தலை வணங்கி நன்றி சொல்கின்றார்.
….
குமுத மலரை பெரும்பாலான கவிகள், காதலியின் இதழ்களுக்கும், கண்ணிற்கும் ஒப்பிடுகையில், “கரிய பாம்பின் தலைகள் போல நிமிர்ந்திருந்த தாமரை சிற்றரும்புகள்” என்று சற்று பயம் ஏற்படும் வண்ணம் வர்ணித்தாலும், உடனே அடுத்த வரியிலேயே “மங்கைமார் செங்கை ஏந்தி அணி செய்த நல்விளக்கின் அழகிய பிழம்பு போல” என்று தாமரை மொட்டை, ஒளிச்சுடருடன் ஒப்பிடுகிறார்.

மயிலைப் பற்றி இவர் யாது கூறுகின்றார்? “மயிலே! நீயும் பெண்களும் ஒருவருகொருவர் சமம் தான், நடையின் ஒயிலிலாகட்டும், மெல்லிய இடையிலாகட்டும், வண்ணத் தோன்றலிலாகட்டும், நீங்கள் ஒருவருக்கொருவர் நிகர்தான். ஆனால் ஒன்றில் மட்டும் வேறுபடுகிறீர்கள். கலாப மயிலே, நிமிர்ந்து நிற்க உனக்கு நீள் கழுத்து அளித்தாள் இயற்கை அன்னை. ஆனால் பெண்களுக்கோ, அயலான் வீட்டில், அறையில் நடப்பதை எட்டிப்பார்க்காதிருக்க குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்’’’ என்று கூறி
“இங்கு வா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
மனதிற் போட்டுவை; மகளிற் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக! “ என்று வம்பிற்கு இழுக்கிறார்.
….
கானகத்தைப் பற்றி இவர் வர்ணனையில் ஒரு காட்சி:
பெட்டைக் கோழியைத் தேடி ஒடும் காட்டுச் சேவலின் சிறகுகள் பட்டு, செடி கொடிகளில் படர்ந்திருந்த கொசுக் கூட்டங்கள் உயரப் பறக்குமாம். அவ்வாறு அவை பறக்கும் போது கரு மேகங்களை ஒத்திருக்குமாம். உடனே கான மயில்கள், கார் மேகங்கள் தான் வந்து விட்டன என்று மகிழ்ந்து தன் தோகைகளை விரித்து ஆடத் துவங்குமாம். அந்த மகிழ்ச்சியான ஆட்டத்தில் சுழன்று, சுழன்று தரையிலிருந்தும், மரக் கிளைகளிலிருந்தும் ஆடும்போது, தோகைகள், மரக்கிளைகளில் இருக்கும் தேன் கூடுகளின் மேல் பட்டு அந்தக் கூடுகள் உடைந்து அதிலிருந்து தேன் வழியுமாம். அந்தத் தேனுக்காகத் தவமிருக்கும் கரடி, வழியும் தேனைக் குடித்தபடி, மயிலுக்கு நன்றி கூறுமாம்.
ஆகா!! என்ன ஒரு கற்பனை வளம். கேட்கும் போதே காட்சி கண் முன் முப்பரிமாணத்துடன் தெரிகின்றதோ?
….
நதியைப் பற்றியும், நதியில் வரும் புனல் பற்றியும் இவர் பார்வையே அலாதி. வறண்ட நதியில் இருக்கும் மணற்துகள்களை, உதிர்ந்த தாழம்பூவின் பொடிகளுக்கு ஒப்பிடுகிறார். விளை நிலங்கள் நடுவே இருக்கும் வறண்ட நதியில் வானவில்லைக் காண்கிறார். பெருஞ்சிங்கமொன்று அறைந்தால், எப்படி ஒரு மத யானை, பலமாக பெரும் சப்தத்துடன் கீழே விழுமோ அவ்வாறு வந்தது வெள்ளம் என்கிறார். கரையோர மரங்கள், தன் கிளைகளிருந்து பூக்களை சொரிந்து வெள்ளத்தை வரவேற்றன வென்றும், உழவுப் பெருமக்கள், தம் நோய் தீர்ந்தது, வறுமை ஒழிந்தது என்று ஆடிப்பாடினரென்றும், அதனைக் கண்டு, எப்படி ஆனந்தக் கூத்தாடும் தம் மக்களைக் கண்டு ஒரு தாய் பேருவகை கொள்வாளோ அவ்வாறு அந்த நதியன்னை, அசைந்து அசைந்து பெருமிதத்துடன் சென்றாள் என்று முடிக்கிறார்.
….
கானலைப் பற்றி பாவேந்தர் கூறியதை உங்களுடன் பகிர்ந்து என் உரையை முடிக்கிறேன். இது பாலை வாழ் நமக்கும் சாலப் பொருந்தும்.
“வானும் கனல்சொரியும்! - தரை
மண்ணும் கனல்எழுப்பும்!
கானலில் நான்நடந்தேன் - நிழல்
காணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லைஅங்கே!
ஆன திசைமுழுதும் - தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா (து)- எடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்! - ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல் செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய்எரியும்!

திடுக்கென விழித்தேன் –நல்ல
சீதளப் பூஞ்சோலை”

ஆம்! விழித்தெழுந்தேன் !! பாவேந்தர் புகழ் பாடும், நல்லெண்ணம் கொண்ட பெருந்தகையார் நடுவில், தமிழே சுவாசம் என்று பூத்துக் குலுங்கும் இச்சோலையிலே.

நன்றி, வணக்கம்.

***************


அரங்கேறிய நிகழ்வு:

பாவேந்தர் நினைவேந்தும் கருத்தரங்கம்:
எழுத்துக்கூடம். இரியாத்.

முன்னிலை: மேதகு இந்தியத் தூதர் , திரு.பரூக் மரைக்காயர் அவர்கள்.
நாள்: 02 மே 2008
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
இடம்: இந்தியத் தூதர் இல்லம், தூதரக வளாகம்

Wednesday, June 06, 2007

இராஜஸ்தானில் குஜ்ஜர்கள் பிரச்சினை

இராஜஸ்தானில் குஜ்ஜர்கள் பிரச்சினை

இராஜஸ்தானில் தற்போது நடந்தேறிய போர்க்களம் அரசியலில் இருப்போருக்கும் ஏனைய மற்றவருக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஒரு பெரிய பாதக விளைவுக்கான அடிக்கல்லாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இப்பிரச்சினை தற்போது ஏற்படுத்திய விளைவுகள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்:

  • 26 பேர் பலி
  • இராஜஸ்தானில் ஆளும் பா. .. அரசாங்கம் கவிழும் நிலை.
  • தில்லி மற்றும் இராஜஸ்தானில் பொது வாழ்க்கை ஸ்தம்பிப்பு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு (பஸ் எரிப்பு ) சேதம்.
  • "நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்" என்று உச்ச நீதிமன்றத்தின் கருத்து.
  • "மீனா" சமுதாயத்தினர் போரட்டத்தில் குதித்து மேலும் சிக்கல் ஏற்படக்கூடிய நிலை.

குஜ்ஜர்களின் கோரிக்கைதான் என்ன?

தாங்கள் இப்பொழுது அட்டவணைப்பட்டிருக்கும் நிலையில் இருந்து இன்னும் தாழ்த்தப்பட வேண்டும். அவர்கள் இராஜஸ்தானில் தற்பொழுது மற்ற பின்தங்கிய வகுப்பில் (OBC) அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளார்கள். அதிலிருந்து பழங்குடிகளாக (ST) அறிவிக்கப் பட வேண்டும். இதுவே போராட்டத்தின் முக்கிய நோக்கம். அதாவது இன்னும் தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கபட வேண்டும். ஏனென்றால் மற்ற பின்தங்கிய வகுப்பில் பல சாதியினர் இடம் பெற்று விட்டதால், இவர்களுக்கு சலுகைகள் கிடப்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.

ஆனால் இந்த கோரிக்கைக்கு "மீனா " சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏன்? இதுவரை "மீனா " சமுதாயத்தினர் மட்டுமே இதுவரையில் பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டு அதனால் கிடக்கும் சலுகைகளை ஏகபோக உரிமையுடன் அனுபவித்து வருகிறார்கள். குஜ்ஜர்களும் பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டால், ஏகபோக உரிமை போய்விடும். முதலில் இந்த இரு சமுதாயத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பின்னர் அரசுடன் மோதலாக உருவானது.

குஜ்ஜர்களின் பின்னனி

இவர்கள் பழங்குடிகள் என்பதில் சந்தேகமில்லை. ருஷ்யாவில் ஒரு பகுதியில் இருந்து ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், கைபர் பாஸ் வழியாக இந்தியாவை வந்தடைந்தவர்கள். 5 அல்லது 6 ம் நூற்றாண்டில் குஜராத்திற்கு குடியேறி பின்னர் அங்கிருந்து மத்திய இந்தியாவிலும் இமாலய மலைப்பகுதிகளிலும் குடியேறினவர்கள். இன்று இவர்கள் இமாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், இராஜஸ்த்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்தரகாண்டம், தில்லி, மஹாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் பாக்கிஸ்தானிலும் உள்ளார்கள். இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். மஹராஷ்ட்டிராவில் இவர்கள் பிராம்மண சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் இவர்களை பழங்குடிகள் என்றும், இராஜஸ்த்தான், மத்தியப்பிரதேசம் இவர்களை மற்ற பின் தங்கிய வகுப்பினராகவும் அறிவித்துள்ளார்கள்.

போராட்டத்தின் பின்விளைவுகள்:

குஜ்ஜர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கக்கூடும். பழங்குடியினராகவும் அறிவிக்கப்படலாம். இதனை முன் மாதிரியாகக் கொண்டு ஏனைய சமுதாயத்தினரும், மேலும் தாழ்த்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றக்கோரி அட்டவணை திருத்தம் கோரலாம். இதனால் மேலும் மோதல்களும், கலவரங்களும் வரலாம். தமிழ்நாட்டில் நாம் இத்தகைய கலவரங்களை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

எந்த அட்டவணையிலும் இல்லாதவர்கள் மற்ற பின்தங்கிய வகுப்பினராய் அடையாளம் காட்டிக் கொள்ள விழையலாம். அங்கே கூட்டம் அதிகமானால், மற்ற பின்தங்கிய வகுப்பினர், மிகப் பின்தங்கிய வகுப்பினராய் மாற்றிக்கொள்ள விரும்பலாம். மிகப் பின்தங்கிய வகுப்பினர் மேலும் சலுகைகளைப்பெற பழங்குடியினாராய் மாற ஆசைப்படலாம்.

பட்டியலில் சேர்ந்த எவரும் பட்டியலை விட்டு வெளி வந்து தாங்கள் முன்னேறி விட்டோம் என்று கூறிக் கொள்ளப் போவதில்லை. இதில் அந்த சமுதாயத்தை குறை கூற முடியாது, குறை கூறுவதிலும் அர்த்தம் இல்லை. பட்டியல்தான் கழு கொம்பு என்றாகி விட்டபின் அதை விட யாருக்கு மனது வரும். ஆனால் பட்டியல் மூலமாக சலுகைகள் பெற்று வளர்ந்தபின், அந்த கழு கொம்பை இல்லாதவருக்குக் கொடுத்து அவரையும் முன்னேறச் செய்யாமல், இந்த சமுதாயங்களை சேர்ந்த தனிப்பட்டவர்கள் அதை அடி கொம்பாக பயன்படுத்தும் போதுதான் கலவரங்கள் மூள்கின்றன.

  • சமுதாயத்தில் தங்களை மேலும் மேலும் தாழ்த்தப்பட்டவர்களாவே காட்டிக் கொண்டும், இன்னும் கீழ்நிலைக்கு மாற்றக்கோரி போரட்டங்கள் செய்யும் நிலைக்கு நம் மக்களை (ஏ)மாற்றியவர்கள் யார்?
  • ஓட்டு வங்கியை மட்டும் மனத்தில் வைத்து அதற்காகவே சட்டங்கள் இயற்றி மக்களை இன்னும் தாழ்த்தப்பட்ட நிலையையே விரும்பச் செய்யும் நிலைக்கு தள்ளியவர்கள் யார்?
  • தன்மான உணர்ச்சியை குழிதோண்டி புதைக்கும் நிலைக்கு நம் மக்களை இட்டுசென்றவர்கள் யார்?

இந்த கேள்விகளுக்கு நம் அனைவருக்கும் விடை தெரியும்.

உங்கள் உள்மனதில் எழும் விசனங்களுக்கு, விமோசனம் ஏதெனும் உண்டா? இன்னும் எவ்வளவு உயிர் பலி கொடுப்போம்? எவ்வளவு பஸ்கள் எரிப்போம்? எத்தனை நாட்கள் கடை அடைப்பு செய்வோம்? எவ்வளவு சாதிக்கட்சிகள் உருவாவதை பார்க்கப் போகிறோம்?

Wednesday, February 07, 2007

உடல் கொடுத்த உத்தமர்கள்.

Cadaver தான் கடவுள். The Dead teaches the Living

முன் குறிப்பு: இந்த உரையாடலை படிக்காவிட்டாலும், கடைசியில் உள்ள கவிதையை
படிக்கத் தவறாதீர்கள்.

நேற்று மாலை கல்லூரியிலிருந்து வந்ததும் என் மகள் ரொம்ப excited ஆக இருந்தாள்.

"அப்பா இன்னிக்கு ஒரு donar body வந்ததுப்பா. பாவம் ரொம்ப சின்ன வயசு, ஒரு 40 அல்லது 45 வயசுதான் இருக்கும் போல இருக்கு. செக்க செவேல்னு நிறம். தலை மயிரெல்லாம் கன்னங்கரேல்னு இருக்கு. மூஞ்சியெல்லாம் கருகருன்னு தாடி. well built body, ஒன்னும் accident மாதிரி தெரியல்லே, பாக்க பாவமாயிருந்ததுப்பா" என்றாள்.

"எதுக்கு ஒங்க காலேஜுக்கு வந்தது? ஆஸ்பத்திரிக்குத்தானே கொண்டு போயிருக்கனும்" னு
கேட்டேன்.

"இல்லேப்பா, அங்கே எல்லா formalities ம் முடிஞ்சு தான் இங்கே கொண்டு வந்தாங்க. இங்கேயிருந்து cadaver well க்கு போகும்..." சடாரென்று விளித்தல் உயர்திணையிலிருந்து அஃறிணைக்கு மாறியது.

"Cadaver well ன்னா என்னது அது, Mortuary யா? "

"இல்லே, இல்லே, ஒரு பெரிய tank லே, formalin solution யை ரொப்பி அதுலே காலேஜுக்கு வர்ற donar body யை போட்டு decompose ஆகாம preserve பண்ணி வச்சிருக்கும். பிணத்துக்குள் இருக்கும் இரத்தம் கட்டியா உறைஞ்சு போயிடும். உடல் உறுப்புகள் எதுவும் சேதமடையாமல் இருக்கும். அப்புறம் எப்போ தேவையோ அப்போ பரிசோதனைகூடத்துக்கு எடுத்து வந்து நாங்க dissect பண்ணி தெரிஞ்சுப்போம். முழு உடலும் இருக்கும், இல்லே கை கால் அப்படின்னு தனித் தனியா உறுப்புகளும் இருக்கும்....."

"You know one thing dad... this is the place where the dead teaches the living. எங்களுக்கு cadaver ஒரு விதத்தில் கடவுள் மாதிரி. நாங்கள் இதை பிணம் என்று சொல்ல மாட்டோம். எபோதுமே cadaver என்றுதான் சொல்லுவோம்"

எனக்கு உடனே வசூல்ராஜா MBBS படம்தான் ஞாபகம் வந்தது. கமல் பிணம் சரியா தெரியலைன்னு எட்டி பார்க்கும் போது, அந்த விரிவுரையாளர், "பிணம்னு சொல்லாதே, cadaver ன்னு சொல்லு" ங்கிற காட்சி.

Berkeley யில் உள்ள University of California வில், cadaver ஐ நன்கு ஆராய்ந்து முடித்த பின், இறந்தவருக்கு பிரார்த்தனை அஞ்சலி செய்து பின்னர் அடக்கம் செய்வார்களாம். மற்றுமொரு பல்கலையில் cadaver களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களின் முதற்பெயர் கொண்டே அழைக்கவேண்டும் என்றும், அஃறிணையில் குறிப்பிடக் கூடாதென்றும் விதி இருக்கிறது. மற்ற கல்லூரிகளில் எவ்வாறோ தெரியவில்லை.

அவருடய வாழ்க்கையைப் படி, இவருடைய வாழ்க்கையைப் படி என்றுதான் கூறக் கேட்டிருக்கிறோம். நீ என்னையே படி என்று கூறி, இறந்தவுடன் தன் உடலை மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில், தானமாகக் கொடுத்து, இறந்தும் வாழும் அந்த உத்தமர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

ஒரு மருத்துவ மாணவன் இந்த உத்தமர்களைப் பற்றி எழுதிய ஒரு கவிதையை கீழே காணலாம்.

Our Lady of the Tank

Our lady of the tank,
in this graveless state,
Your flesh did not go quite the way of all,
Though wet and wrinkled we all will fall.

From the obstetrician to the mortician,
We travel a trivial time,
Proudly putting reason to rhyme,
Germ to term, virgin to carcass.

The sickle swings, the scalpel scrapes,
As through your greasy gift we sift,
Gross whole of petty parts,
Decayed in chunks, displayed in charts.

This breast, where a warm mouth cuddled,
Now lies alone in a chemical puddle.
As does your brain, plucked and pickled.

Your universe of cells, each of molecules
Submits to the ingracious exploration of fools,
Where solid blood awaits within your shredded heart,
Where food oozed through the intestinal mess
To the lumen at the end of the tunnel.

Do your sunken eyes despise
Our semester of eternity?

Does your complexity disguise
The hand of some paternity?

Do we fall to creation's temptation, or find
That God is truly just, a very long time?

When in the hour of reckoning we danced
In the ballroom of the living and the dead,
By tag and timer tested,
Your last patience we requested,
And having filled in all the blanks,
I whispered in your empty skull my empty thanks.

Peter Draper, second year student
UIC College of Medicine


பின்குறிப்பு : நீங்கள் கவிதையை மட்டுமே படித்தீர்களென்றால், சற்று முன் சென்று உரையாடலையும் படிக்கவும். கவிதையின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்.

Thursday, February 01, 2007

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 3




இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களும், தன்னார்வு நிறுவனங்களும் எவ்வாறு நுண் வியாபார உரிமையை மேம்படுத்துகின்றன என்று சென்ற பாகத்தில் பார்த்தோம்.

சீனா இந்த யுக்தியை பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை கண்டதாகக் கூறப்படுகிறது. Consumer goods and Toys ல் சீனா உலக சந்தையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது இதன் மூலமாகக் கூட இருக்கலாம்.

நிச்சயமாக அரசாங்கம் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது. ஆனால் அரசாங்கம் நுண் வியாபார உரிமையை ஊக்கப்படுத்த இன்னும் அதிக சலுகைகளை அளிக்கலாம். அரசு இலவச சலுகைகளை அளிப்பதை விட்டு விட்டு, அந்தப் பணத்தில் இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம். 2000 அல்லது 3000 ரூபாய்க்கு தொலக்காட்சிப் பெட்டி வழங்குவதற்கு பதிலாக, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு தொழில் கல்வி கற்றுத் தந்து அந்த குடும்பம் என்றென்றும் நலமாக வாழ வழி செய்திருக்கலாம். நிலங்களை இலவசமாக தருவதற்கு பதிலாக, அந்த பயனாளிகள் அனைவரையும் சேர்த்து, கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, அந்த சங்கங்களின் மூலமாக அதே நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்து மேம்பட வழி செய்திருக்கலாம்.

“கொசுக்களினால் பரவும் நோயைத் தடுக்க கொசு வலை கொடுக்காதே, சுகாதார மையம் அமைத்து சுற்றுப்புற சூழலை ஒழுங்குபடுத்து”.

இலவசங்கள் வியாதியை தற்போதைக்கு நீக்குகின்றன. ஆனால் அதன் காரிய காரணங்களை போக்குவதில்லை.


இந்த நுண் வியாபார உரிமை யுக்தியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது, அரசும் கண்டிப்பாக நடத்தக்கூடாது. அரசு இத்தகைய செயல்திட்டங்களை செயல்படுத்தும் போது வெற்றி பெறுவது இல்லை. அதற்கு காரணம், அரசியல்வாதிகளின் குறிக்கீடு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு. உதாரணத்திற்கு,

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தங்கள் மொத்தக் கடன் தொகையில் 1% DRI(Differential rate of interest) scheme ல் அளிக்க வேண்டும் என்று 1977க்கு முதலே (ஏனெனில் நான் வங்கியில் சேர்ந்தது 1977ல்) உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு ரூபாய் 4500 வியாபார மூலதனத்திற்காகவும் (Fixed assets) ரூபாய் 1500 வியாபாரப் பொருட்கள் கொள்முதல் (Working capital) செய்வதற்கும் வழங்க வகை செய்யப்பட்டிருந்தது. இந்த கடனுக்கு வட்டி 4% மட்டுமே. இன்று கூறப்படும் நுண்கடன், எப்பொழுதோ இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு அமல் செய்யப்பட்டு வந்துள்ளது. இதன் மூலமாக ஒரு சிலர் பயனடைந்தாலும், இந்த் திட்டம் எத்தனை பேரை வறுமைக் கோட்டிற்கு மேல கொண்டு சென்றதென எனக்குத் தெரியாது.

இதே போல் மிக நல்ல திட்டம் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டுத் திட்டம் (Integrated Rurald Development Programme). ஆனால் இதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அதிக அளவில் பயன் அளிக்கவில்லை. 5000 பேர் இருக்கும் ஊரில் கிட்டத்தட்ட 3000 கறவை மாடுகள், 2000 ஆடுகள், 500 முடிதிருத்தும் கடைகள், 500 உணவகங்கள் ஆகியவைகளுக்கு சுற்று வட்டாரத்திலுள்ள 2 அல்லது 3 வங்கிகள் நிதிஉதவி வழங்கியிருக்கும். ஓரே நபர் 2 வங்கிகளில் இருந்து கடன் வாங்கியிருப்பார். அட ! அந்த பணம் அவருக்கு சென்றிருந்தால்தான் பரவாயில்லையே ! அவர் பொருளாதார ரீதியில் முன்னுக்கு வந்திருப்பாரே. அது சென்ற இடமெல்லாம், ப்ளாக் டெவெலப்மெண்ட் ஆபிசருக்கும் அந்த ஏரியா MLA/MP க்கும் தான். அதில் ரொம்ப அழகாக சுருட்ட "லோன் மேளா" என்கிற திட்டம் போட்டது ஜனார்தன் பூஜாரி என்கிற மத்திய இணை நிதி அமைச்சர்தான்.


இந்தியாவில் நுண்கடன் வசதி அளிப்பதற்கான கட்டுமான வசதிகள் ஏற்கனவே உள்ளன. கிராமிய வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள்/ வங்கிகள், நில மேம்பாட்டு வங்கிகள், அரசின் வேலை வாய்ப்புத் திட்டங்கள் (rozgar yojana), மானியத் திட்டங்கள் (subsidy schemes), கிராமப் புற வரையிலான அரசு நிறுவனங்கள் (block development offices), ஆகிய அனைத்தும் இருந்தும், ஏன் நம்மால் வேலை வாய்ப்பு வசதிகளை “அதிக அளவில்” பெருக்க முடியவில்லை? இந்த திட்டங்கள்/செயல் பாடுகள் வெறும் ஓட்டு பெருவதற்கான திட்டங்கள் தானா? அல்லது இதில் உள்ள குறைபாடுகள் என்ன? ஆனால் தனியார் முயற்சியால் தொடங்கப்படும் திட்டங்கள் பெருமளவு வெற்றி பெருவதன் காரணம்? உதாரணமாக,


  • சுனாமி நிவாரணத் திட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனங்கள் வீடுகள் கட்டி கொடுத்துவிட்டன. ஆனால் அரசு எவ்வளவு வீடுகள் கட்டிக் கொடுத்தது? இருவருடைய வலிமையையும் ஒப்பிடும்போது வெற்றி சதவிகிதம் எவ்வளவு?
  • குஜராத் அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கு அரசு காரணமா? அல்லது அதில் முனைப்பட்ட கூட்டுறவு சங்கமா?
  • லிஜ்ஜத் பப்பட்டின் வெற்றிக்கு யார் காரணம்?
  • மும்பை டப்பாவாலா பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். (மதிய உணவு பெட்டியை, ஒவ்வொரு வீட்டிலிருந்தும் காலையில் பெற்று, அதை உரிய நேரத்தில், மும்பையில் வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கும் தனி நபர்களிடம் சேர்த்து, பின்னர் காலி பெட்டியை சேகரித்து வீட்டில் கொண்டு சேர்க்கும் பணி). வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள். 99.9999% சதவிகிதம் சரியான வெற்றி. கணிணி இன்றி, படிப்பறிவு இன்றி, இயந்திர மயமாக்கல் இன்றி. Six Sigma தர நிர்ணயத்தில், உலக மதிப்பீட்டார்களின் கணிப்பில் ஒரு அதிசயம். இதில் அரசின் பங்கு 0.00001% கூட இல்லை.
  • அரசு பங்கு பெற்றாலும், தன் பங்கை நிதி உதவியுடன் நிறுத்தி நிர்வாகத்தை தன்னாட்சியாக செயல் பட வழிவகுத்தால் அந்த திட்டங்கள் குறித்த இலக்கில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. உதாரணம்: கொங்கன் இரயில்வே, டெல்லி மெட்ரோ
எனக்குத் தோண்றிய சில நுண் வியாபார உரிமை யுக்திகள்:
  • ஆசிரியர்கள் வேலைக்குத் தகுதியான பட்டம் பெற்ற பல வேலையில்லா பட்டதாரிகளின் மூலமாக கிராம மற்றும் சிறு நகரங்களில், மாலை வேலைகளில், அங்குள்ள பள்ளிகளில் பயிலும் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனிக்கல்வி அளித்தல்.
  • அதே போல், பள்ளி வசதிகள் இல்லாத கிராமங்களில், பள்ளி செல்ல வசதியில்லாத (பொருளாதார அல்லது தொலை தூரம்) சிறார்களுக்கு கல்வி அறிவு அளித்தல் – திண்ணைப் பள்ளிக்கூடம். இந்த திட்டங்களை தனியார் நிறுவனங்கள் (Aptech, NIIT) மூலமாக அரசு செயல் படுத்தலாம்.
  • ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவ கூடங்கள் (Health centers) , மருந்தகங்கள் போன்றவற்றை, அப்பல்லோ போன்ற மருத்துவ மனைகள் ஏற்படுத்தலாம். அரசு நடத்தும் primary health center களின் நிலை என்ன என்று நம்மில் பலருக்குத் தெரியும்.
  • BSNL/VSNL போன்ற நிறுவனங்கள், புறநகர் பகுதிகளில் தனியார் தொழில் முனைவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதன் சேவைகளை இப்போதுள்ள அளவிலிருந்து (PCO விற்கும் மேம்பட்ட) இன்னும் அதிகரிக்கலாம். இணைய மையம், நடமாடும் தொலை தொடர்பு மையங்கள் போன்றவை. சமீபத்தில் Airtel நிறுவனம் மும்பை டப்பாவாலாக்களின் மூலம் தனது pre-paid recharge voucher விற்பனையை துவக்கியுள்ளது. (http://economictimes.indiatimes.com/Airtel_hires_Dabbawallahs_as_salesmen/articleshow/1501785.cms)
  • Food-world, Nilgiris போன்ற பிரபல நிறுவனங்கள் சுகாதாரணமான முறையில் தயாரிக்கப்படும் சிறு/குறுந்தீனி பண்டங்கள்/ உணவுப்பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யலாம்.
  • பிரபல விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களை நேரடியாக பயிற்றுவிக்கப்பட்ட முனைவர்கள் மூலம் வாடகை மையங்கள் அமைத்து வேலை வாய்ப்பு வழங்கலாம்.

மேற்கூறியவற்றில் பல இப்பொழுதும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறன. ஆனால் அவை நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பில் இல்லை, பல இடைத்தரகர்கள் மூலமாக உபயோகிப்போர்களை வந்தடைகின்றன. இதனால் விலையும் அதிகம். நிறுவனங்கள் நேரடியாக செயல் படுத்தும்போது நுண் வியாபார உரிமை முறை செயல் படுத்தப்படுகின்றது. விலையும் குறைய வாய்ப்புண்டு.

இதுவும் ஒரு வகையான வெளிக்கொள்முதல் (outsourcing ன் தமிழாக்கம் சரியா?) தான். தயாரிப்பாளர்களின் தயாரிப்பு மற்றும் வியாபார செலவுகள் குறையும், பரந்த வேலை வாய்ப்பு உண்டாகும்.

நண்பர்களே, இந்த மூன்று பாகங்களில் நான் கூறிய அனைத்தும் வலையில் மேய்ந்த போது எனக்குக் கிடத்தவை மற்றும் என் சுய அலசல்கள். நான் இந்த துறையில் முன்னோடியோ, அனுபவசாலியோ அல்ல.


இந்த தொடர் கட்டுரையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். நீங்களும் உங்களுக்குத் தோண்றிய நுண் வியாபார உரிமை வாய்ப்புகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.


Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 1 ஐ படிக்க

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 2 ஐ படிக்க



நன்றி….

Monday, January 29, 2007

Microfranchising (நுண் வியாபார உரிமை) - பாகம் 2

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 1 ஐ படிக்க

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 2

முதல் பாகத்தில் கூறியிருந்தபடி, நுண் வியாபார உரிமை பல்வேறு முறைகளில், பல துறைகளில் செழிக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் தேவைகள், மக்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் அறிந்த ஒரு உள்ளூர் தொழில் முனைவர், ஒரு சக்தி வாய்ந்த, பெரிய தேசிய/ பன்னாட்டு அளவில் வர்த்தகம் செய்யும் ஒரு குழுமத்துடன் தொடர்பு கொள்ளும் போது “win-win” நிலைமை சாத்தியமாகிறது. இந்தப்பெரு நிறுவனம் “கை கொடுக்கும் கை” யாக விளங்குகிறது. நுண் வியாபார உரிமையை தனி மனிதர் மட்டுமன்றி, குழுக்களாகவும் சேர்ந்து செயல் படுத்தலாம். சுய உதவிக் குழுக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நுண் வியாபார உரிமையை வர்த்தக ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பயன்படுத்தலாம். வர்த்தக ரீதியாக பயன்படுத்தும்போது அது தனி மனிதருக்கோ அல்லது அந்த குழுவிற்கோ ஆதாயம் ஈட்டும் பணியாக முடிகிறது. சமுதாய ரீதியாக பயன்படுத்தும்போது, அது அந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், ஆதாயமின்றி பொதுநலத்தோடு செயல் படுத்தப்படுகிறது. மருந்து தயாரிப்பாளர்கள் நடத்தும் உடல் நல பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள், விவசாய பொருட்கள் தயாரிப்பாளர்கள் நடத்தும் ஆய்வுகள், விழிப்புணர்ச்சி கூட்டங்கள் ஆகியவை சமுதாய ரீதியானவை ஆகும். Scojo என்கிற ஒரு கண்பார்வை சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம், தென் அமெரிக்காவில், கிராமங்களில் $2 க்கு படிக்கும் கண்ணாடியை முனைவர்கள் மூலம் விற்று ஆதாயமும் கண்டது. இது சமுதாய சேவையும், அதே சமயம் தொழில் வெற்றியும் ஆகும்.

இந்தியாவில் நுண் வியாபார உரிமைக்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன், அவற்றில் தலை சிறந்ததும் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டதும், குஜராத், ஆனந்த் நகரத்தில் உள்ள அமுல் பால் பண்ணையே ஆகும். சிறு கிராமங்களில் உள்ள ஆடவர்க்கும், பெண்டிர்க்கும் கறவை மாடுகள் வாங்கி கொடுத்து, அதை சேகரித்து ஒரு வெள்ளைப் புரட்சியை செய்து அந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திய அதற்கு ஈடு உண்டோ? இதைத்தவிர மற்ற உதாரணங்கள்:
  • ICICI வங்கி 30க்கும் மேற்பட்ட நுண் வியாபார உரிமை நிறுவனங்கள் மூலமாக 10 லட்சத்திற்கும் மேலான குடும்பங்களுக்கு கடன்உதவி அளித்து வருகிறது.
  • Aptech மற்றும் NIIT நிறுவனங்கள் நடத்தும் கணிணி கல்விக்கூடங்கள்
  • ஜனனி என்றொரு நிறுவனம் மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடத்தும் சிகிச்சை மையங்கள் ( 260 மையங்கள்) http://www.janani.org/home.htm
  • n-Logue நடத்தும் இணைய மையங்கள் http://www.n-logue.com
  • Drishte நடத்தும் இணைய மையங்கள். இவை மின் ஆளுமையை கிராமங்களூக்கு எடுத்துச் சென்றன.
  • OneRoof நடத்தும் சேவை மையங்கள். இவை தமிழ்நாட்டில், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் 9 விதமான சேவைகளை (தகவல், தொலை தொடர்பு, நிதி, கல்வி, எரிசக்தி, ஆரோக்கியம், நீர், சுகாதாரம், உபகரணங்கள் மற்றும் ஆலோசனை மையம்) அளித்து வருகிறது. http://www.oneroof.com/india.html
  • DTDC (Desk to Desk Couriers), BlazeFlash தபால் பட்டுவாடா
  • Arvind Mills ன் ruff ‘n’ tuff jeans. 4000 தையல்காரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தனது பிரசித்தி பெற்ற ஜீன்ஸ் ஆடையை தைத்து வழங்குகிறது.
  • Lijjat papads மஹாராஷ்ட்ராவில் குடும்பப் பெண்மனிகளைக் கொண்டு சிறிய அளவில் ஆரம்பித்து இன்று பரந்து விரிந்திருக்கும் ஒரு ஸ்தாபனம்.
  • HP - HP village Photographers மூலமாக டிஜிட்டல் போட்டொகிராபி- 3 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட மையங்கள்.
  • Ferns ‘n’ petals பூச்செண்டு வியாபாரம், 32 மையங்கள்.
  • Nirma ஏற்படுத்திய தாக்கத்தை நாம் மறந்திருப்போமா? குடிசைத் தொழிலாக ஆரம்பித்து தேசிய அளவில் வியாபித்த ஒரு ஸ்தாபனம்.
மேற்குறிப்பிட்ட எதிலும் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலங்களில், மத குருமார்களே நாட்டை ஆண்டார்கள். பின்னர் அரசாட்சியும், ஜனநாயகமும் வந்தது. அப்பொழுது அரசு வியாபார சந்தையை ஏற்படுத்தி, சீற்படுத்தியது. இப்பொழுது நடப்பது வணிக சந்தை. இதில் வணிக நிறுவனங்களே சந்தையை நிர்ணயிக்கின்றன.

உலகமயமாகுதலும் (globalization) இதற்கு ஒரு காரணம். உலகமயமாதல் காரணமாக பண்ணாட்டு நிறுவனங்களும் இந்திய வணிக சந்தையில் நுழைகின்றன. C K பிரகலாத் (Coimbatore Krishnarao Prahalad, the Paul and Ruth McCracken Distinguished University Professor of Corporate Strategy at the University of Michigan Ross School of Business, is a globally recognized business consultant whose client list includes AT&T, Cargill, Citicorp, Oracle, TRW and Unilever. Recently Professor C. K. Prahalad earned the third spot on Suntop Media's 2005 "Thinkers 50" list, just behind Harvard strategy specialist, Michael Porter, and Microsoft founder, Bill Gates. - WIKIPEDIA) பண்ணாட்டு நிறுவனங்கள் வறூமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களை ஒதுக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறுகிறார். எனவே பண்ணாட்டு நிறுவனங்கள் நுண் வியாபார உரிமை போன்ற வியாபார நுணுக்கங்களை நிச்சயம் பயன்படுத்தும். ஏனென்றால் அதில் அவர்களுக்கு நிறைய அணுகூலங்கள் உள்ளன.


எதிர் வரும் காலங்களில் சாத்தியக்கூறுகள் எவ்வாறு இருக்கும் என அடுத்த பகுதியில பார்ப்போம்.
(தொடரும்)

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 1 ஐ படிக்க

Microfranchising (நுண் வியாபார உரிமை) - பாகம் 1

Microfranchising (நுண் வியாபார உரிமை)

Microfranchising இதன் தமிழாக்கம் என்ன? எனக்குத் தெரியவில்லை. இந்த கட்டுரையைப் பொருத்த வரையில், நான் இதை “நுண் வியாபார உரிமை” என்றே குறிப்பிடப் போகிறேன்.

நுண் வியாபார உரிமை, நுண்கடனைச் (MicroCredit) சார்ந்தது மட்டுமல்லாமல், நுண்கடனின் அடுத்த தலைமுறை என்றும் கூறப்படுகிறது. பொருளாதார வல்லுனர்களால், மிக முக்கியமாக, வளர்ந்து வரும் நாடுகளில், இதன் அத்தியாவசத்தன்மை பெரிதும் உறுதிப்படுத்திப் பேசப்படுகிறது. இது வறுமையை ஒழிக்கும் முறைகளில் மிகப்பெரிய ஒரு முறையாகவும் எடுத்து வைக்கப்படுகிறது. வருவாய் பெருக்கும் முறையாக மட்டுமல்லாமல், சுய வேலைப்பாடு, மற்றும் நண்பர்கள்/சார்ந்தோர் (neighbourhood) வேலைப்பாடு, சொத்து உருவாக்குதல், சமுதாய வளர்ச்சி ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து ஒரு பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் ஒரு சித்தாந்தமே நுண் வியாபார உரிமை. பங்களாதேசத்தை சேர்ந்த, கடந்த வருடம் நோபெல் பரிசு பெற்ற மொஹம்மது யுனுஸ், நுண்கடண் சித்தாந்தத்தை மிகப்பெரிய அளவில் உபயோகப்படுத்தி வெற்றி பெற்றார். அதன் மூலமாக இணைக்கப்பட்ட (networked) நிருவனங்களையும் உருவாக்கினார்.

நுண் வியாபார உரிமை என்றால் என்ன? இதில் பல்வகைபட்ட உரிமைகள் உள்ளன. இது ஏதோ புது வகையான தொழில் முறையோ என்று மூளையை கசக்கிக் கொள்ளவேண்டாம். ஒரு சில வடிவங்களில், இந்தியாவில் இது ஏற்கனவே உபயோகத்தில் உள்ளதுதான். உதாரணமாக, இன்சுரன்ஸ் ஏஜென்சி ஒரு நுண் வியாபார உரிமை தான். அதாவது ஒரு பெருமையுடைய (known brand) நிறுவனம், தன் வியாபார பொருட்களை/ சேவையை, நேரடியாக தனி மனிதரின் மூலம் விற்பது/அளிப்பது தான் நுண் வியாபார உரிமையின் அடிப்படை. இதில் பல்வேறு உத்திகள் கையாளாப்பட்டு வருகின்றன. வாகன வியாபாரங்கள், உணவகங்கள், செய்தித்தாள்/பத்திரிக்கை ஆகியவை பெரும்பாலும் இந்த முறையைத்தான் கடைபிடிக்கின்றன. சில வகையான தொழில்களூக்கு மிக அதிக மூலதனம் வேண்டியிருக்கும். நுண் வியாபார உரிமையில், மத்திய அல்லது அதற்கும் கீழ்ப்பட்ட நிலையிலுள்ள மக்கள் சுயமாக பொருள் ஈட்டுவதற்கு வழி வகுக்கும் உத்திகள் மட்டுமே உள்ளடக்கம். இது ஏதடா “புதிய மொந்தையில் பழைய கள்” என்று முகம் சுளிக்க வேண்டாம். வேண்டுமென்றால் “புதிய சீசாவில், புதிய பதனீர்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

வேறு எங்கிலும் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ஒரு தொழிலை/ வியாபாரத்தை /சேவையை அல்லது தொழில்/வியாபார/சேவை முறையை அதே அடிப்படையில் மற்ற இடங்களிலும் நகல் முறையில் அமல் படுத்தப்படும் போது வெற்றி வாய்ப்பு நிச்சயப்படுத்தப்படுகிறது. அதே சமயம் இதில் முனைப்படுபவர்களுக்கு மிகப் நுண்ணிய தொழில் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டுமென்றோ அல்லது தொழில் அறிவோ இருக்க வேண்டுமென்றோ அவசியம் இல்லை. நுண் வியாபார உரிமைக்கும், தனி நபர் செய்யும் தொழில் அல்லது வியாபாரத்திற்கும் வேற்றுமைகள் நிறைய உண்டு. நுண் வியாபார உரிமையில் சிறு மூலதனம், விற்பனை நிலையம் அல்லது தொழில் திறன் (skill) மட்டுமே போதும். தேவையான கச்சா பொருட்கள் அல்லது விற்பனை பொருட்கள், வியாபார உத்தி, சந்தை நிலவரம் ஆகியவை தானாகவே வழங்கப்படும். எனினும் எல்லோராலும் தொழில் முனைவர் (entrepreneur) ஆவது என்பது முடியாது. ஆனால் எவரால் முடியுமோ அவர் மற்றவர்க்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்.

நுண்கடன், நுண் வியாபார உரிமையோடு இணையும்பொழுது, அது சிறு தொழில் முனைவர்களுக்கு, ஒரு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். அது மட்டுமல்லாமல், இந்த மாதிரியான நிறுவனங்கள் ஒரு வறையறுக்கப்பட்ட விதிமுறைகளோடு செயல்படுவதால், அவைகளின் அதிக வளர்ச்சிக்கு அரசாங்க உதவிகளும், வங்கிகளின் நிதியுதவிகளும் மற்றும் பல நன்மைகளும் கிடைக்கும்.

இவைகளின் வளர்ச்சி சிறு நகரங்களிலும், கிராமங்களிலும், பெருநகரங்களை விட அதிகமாக இருக்கும். இதனால், தனி மனித தேவை சம்பந்தபட்ட எல்லா விதமான தொழில்/ சேவைகளிலும் நுண் வியாபார உரிமை சாத்தியப்பட்டதே. உதாரணமாக, அன்றாட அத்தியாவசிய தேவைகள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான தேவைகள் போன்றவற்றில் ஆரம்பித்து, இணைய மையம், சூரிய எரி சக்தி, நீர் வினியோகம், கணிணிக் கல்வி, தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசி அட்டை வினியோகம் மற்றும் இணைப்புகள், தபால் வினியோகம் (courier), ஐஸ் கிரீம் மற்றும் பேக்கரி பொருட்கள், சிறு/குறு திண் பண்டங்கள் ஆகிய அனைத்தும் சாத்தியமே.

மொத்தத்தில் நுண் வியாபார உரிமை ஒரு பொதுவுடமையான முதலாளித்துவம் (communistic capitalism) என்று கூறினால், அதில் ஏதேனும் மிகைப்பாடு உண்டா? இல்லை இதை ஒரு ஜனநாயக முதலாளித்துவம் (democratic capitalism) என்று கூறலாமா?

இந்தியாவில்
நுண் வியாபார உரிமை எந்த அளவிற்கு இருக்கிறது அதை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம். (தொடரும்)

Saturday, January 27, 2007

From Russia with Love (அன்புடன் ரஷ்யாவிலிருந்து)

From Russia with Love (அன்புடன் ரஷ்யாவிலிருந்து)

இது என்ன, தமிழாக்கம் செய்யப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படம் பற்றிய பதிவு என்று நினைச்சீங்களா? ஹி..ஹி.. அதெல்லாம் ஒன்றும் இல்லை. இப்போ இந்தியா விஜயம் செய்திருக்கும் ரஷ்ய அதிபர் புடின் நமக்கு அன்புடன் அளித்திருக்கும் அணு உலை பத்திய ஒரு பதிவுதான் இது. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியது. யாருடாது, புதுசா ஏதோ டிபென்ஸ் எக்ஸ்பெர்ட் இல்ல ந்யுக்கிளியர் சயின்டிஸ்ட் கணக்கா பதிவு போட வந்துருக்கான்னு நினைக்கிறீங்க, அப்படித்தானே? அய்யய்யோ, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க, சும்மா, ஏதோ ப்ளாக் போடலாம்னு தோணின போது இந்த சப்ஜெக்ட் மாட்டிச்சு, அவ்வளவுதான். நமக்கு தெரிந்த வரைக்கும் பேப்பர்லெ படிச்சத வச்சு ஒரு சின்ன குறிப்பு.

கடந்த ஒண்றரை, இரண்டு வருடங்களாகவே அணுசக்தி சம்பந்தப்பட்ட செய்திகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. முதலில் ஈராக், பின்னர் வடகொரியா, அப்புறம் ஈரான் என அணுசக்தியை அழிவுக்கு பயண்படுத்தும் நாடுகள் பற்றி பேசப்பட்டன. ஆனால் இந்தியா பற்றி வேறு விதமாக பேசப்பட்டது. அணு சக்தி உடைய நாடாக இருந்தாலும், மிகவும் ஆக்க பூர்வமாக உபயோகப்படுத்தும் நாடு என்று உலக நாடுகளால் பேசப்பட்டு, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது. தற்பொழுது ரஷ்யாவிடமிருந்து வந்திருக்கும் இந்த நேசக்கரம்.

ரஷ்யாவிற்கு 80,90களில் இருந்த அளவுக்கு வல்லமை இப்பொழுது இல்லா விட்டாலும், படை பலம், எண்ணை வளம், மற்றும் அணு சக்தியில் அது இன்னமும் ஒரு வலிமை மிகுந்த நாடாகத்தான் விளங்குகிறது. எனவே இந்த இரு நாடுகளுடன் இரண்டு கைகளையும் கோர்த்துச் செல்லும் பொழுது இந்தியாவும் வலிமை பெறுகிறது. இது எனது பார்வையில் இந்தியாவை ஒரு வல்லரசு நிலைக்கு இட்டுச் செல்லும் பாதையில் மற்றுமொரு படிக்கல் என்பேன்.

இந்த நிகழ்வு, அணு வியாபார குழுமத்தில், இந்தியாவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை. ப்ரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிடமிருந்தும் இந்தியாவிற்கு சாதகமான நிலைப்பாடு வெளிப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

அமெரிக்காவிடன் செய்த அணு உடன்பாட்டிற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்பொழுது ரஷ்யாவினுடன் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்த எதிர்ப்பு ஒன்றும் இல்லாமல் போகும் அல்லது சற்று அடக்கி வாசிக்கப்படும்.

Tuesday, January 09, 2007

கொழும்பு பண்டாரநாயகே விமான நிலையம்

இந்த முறை டிக்கெட் ஸ்ரீலங்கன் ஏர்வேஸில் தான் கிடைத்தது. இங்கிருந்து கொழும்பு சென்று பின்னர் சென்னை. திரும்பி வரும் போதும் அதே வழி. சென்னையிலிருந்து திரும்பும்போது சுமார் 5 மணி நேரம் விமானநிலையத்திலேயே தங்க வேண்டிய நிலை. அப்போது கவனித்த சில:

  • சமீபத்தில் புதுப்பிக்க / விரிவு படுத்தப் பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாகவும், கலை நோக்குடனும் உள்ளது.
  • வரியற்ற (Duty Free) கடைகள் கிட்டத்தட்ட, அபு தாபி, மஸ்கட் ஏர்போர்ட் பாணியில் உள்ளன.
  • இருக்கை வசதிகள், மற்றும் உணவுக் கூடங்கள் வசதியாக உள்ளன.
  • ஆயுர்வேத மசாஜ் கூடம் ஒன்றும் உள்ளது.
  • சிப்பந்திகளின் அன்பான அணுகுமுறை.
  • மொத்தம் 8 அள்ளது 10 விமானங்கள் மட்டுமே நிற்கக்கூடிய விமானதளம்.
  • மிகப் பரந்த அளவிளான குடியேற்றப் (immigration) பகுதி.

கொழும்பு விமானதளத்தைவிட பண்மடங்கு நில பரப்பைக் கொண்ட, சென்னை மற்றும் மும்பை விமான நிலையங்களில் காண முடியாத அழகும், வசதிகளும், கடைகளும், பயனியர் சௌகரியங்களும் நிறைந்து காணப்பட்டது.

சென்னை விமானநிலையம் பரப்பளவில் பெரியதாக இருந்தாலும் சென்னையில் பல அசௌகரியங்கள் உள்ளன.

புறப்பாடு மற்றும் வருகைக்கான கட்டடங்கள் தனித்தனியாக இருந்தாலும், இருவரும் ஒரே வழியாகத்தான் airbridgeலிருந்து வெளியெ வரவும் உள்ளே செல்லவும் முடியும். இறங்குபவர்களை நிறுத்தி வைத்து, ஏறுபவர்களை அனுப்ப முடியும்.

குடியேறல் பகுதி மிகவும் சிறியது. ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் வந்து விட்டால், பயணிகள் படும் சிரமம் அதிகம்.

உடமைகள் ஏற்க்கப்படும் இடம் ஒரே இருட்டு. அவ்வளவு வெளிச்சமான வெளிப்பகுதி இருந்தும், கண்ணாடி தடுப்புச்சுவர் போடாமல், சுவெரழுப்பி இருட்டடித்து விட்டார்கள்.

உங்கள் விமானம் கடைசி தளத்தில் நின்றால், நீங்கள் car parking இடத்தை அடைய சுமார் 1.5 km நடந்து இருப்பீர்கள்.

பயணப்படும் போதும் மிக நீண்ட தூரம் நடக்க வேண்டும். மாடியேறி சென்றதும், பாதுகாப்பு சோதனைக்கு மீண்டும் அதே தூரம் நடக்க வேண்டும். ஒரு தானியங்கி நடைபாதை வைத்திருக்கலாம்.

பாதுகாப்பு சோதனைக்கு முற்பட்ட இருக்கையிடமும் ஏதோ இரயில்வே கம்பார்ட்மெண்டில் இருப்பது போல ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும். வெளியே மலையும், பச்சைப் பசேலென்ற செடிகளும் தெரியும் இடத்தில் அதைப் பார்த்தவாறு இருக்கைகளை அமைக்காமல், அங்கெ கழிப்பறையும் கடைகளையும் கட்டி விட்டுள்ளார்கள். சோதனை முடிந்து உள்ளே போனல் அங்கேயும் அப்படித்தான். விமான ஓடுகளத்தை பார்த்து இருக்கைகளை அமைக்காமல் உள்ளடங்கி, இருட்டான இடத்தில் அமைத்துள்ளார்கள்.

இயற்கை வெளிச்சத்தை சற்றும் பயன்படுத்தாமல், வீணடித்துள்ளார்கள்.

இவை அனைத்தையும் காட்டிலும் மிக முக்கியமான ஒன்று. நான் கொழும்பு சென்ற விமானத்தில் 95 சதவிகிதம் சென்னை, திருச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சின் பயனித்தவர்களே. கொழும்பு ஒரு மிகப்பெரிய குழிசியாக (Hub) மாறி வருகிறது.

ஹைதரபாத் மற்றும் பெங்கலூரு விமானநிலையங்களும் பலவிதமான நவீன வசதிகளுடன் வரும். அப்போது சென்னை நிலையம் இன்னும் பரிதாபகரமாகத்தான் இருக்கும்.

Friday, June 02, 2006

ஆதாயம் தரும் பதவி (Office of Profit)யும் CPMன் நிலையும்.

Parliament (Prevention of Disqualification) Amendment Bill, 2006 ல் குறிப்பிடப்பட்ட 56 வாரியங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

இதில் 17 வாரியங்கள் West Bengal ல் உள்ளவை. There is no wonder about the CPM's vested interest in getting this bill passed. இரு வாரங்களுக்கு முன்னர் தான் CPM தற்போது எடுத்து வரும் நிலப்பாடுகளின் தரம் குறித்து மெச்சி எழுதினேன் ( http://balablooms.blogspot.com/2006/05/cpm.html) . என்னை 'அடங்குடா, மவனே!!' என்று கூறி தங்களுக்கு எது நல்லதோ, எந்த விஷயம் தங்களை முன்னிலைப்படுத்துமோ அதில் மட்டும்தான் நாங்கள் குரல் கொடுப்போம் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.

இந்த விஷயத்தில் CPM இன் தோல் உரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் உறுப்பினர்கள் உதித்துள்ள சில பொன்மொழிகளை படியுங்கள்:

“If this state of affairs is allowed to continue, then there are bound to be litigations on a large scale as well as the likely vacation of seats in both Houses of Parliament, which will necessitate the holding of by-elections to fill up these vacancies."

“This would result in a lot of wasteful expenditure and would enforce an unnecessary financial burden upon the nation,” Mr Bharadwaj added. - Decaan Herald - May 17th.

ராய் பரேலியில் நடந்த செலவு தேசிய முன்னேற்றத்திற்காக செலவிடப்பட்டது போலும். இந்த BILL சட்டமாக அமலாக்கப் படாவிட்டால், UPA கவிழ்ந்தாலும் கவிழும். இப்போது தெரிகிறதா, மதிமுகவின் 4 MPக்களின் மகிமை.

“This is the prerogative of Parliament and the state legislatures, they have the powers (to do so),” Karat said.

இது ஜனாதிபதியின் "எல்லா மாநிலங்களுக்கும் ஒப்புதலான ஒரு வறைமுறை" குறித்த ஆலோசனைக்கு பிரகாஷ் கரத்தின் பதில். அகில இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் மேற்கு வங்காள ஹஜ் கமிட்டி மற்றுமே இடம் பெற்றுள்ளன இந்த பட்டயலில். மற்ற மாநில ஹஜ் கமிட்டிகள் என்னவாயிற்று? அதன் பொருப்பாளர்கள் இப்பொழுது MP ஆக இல்லை. அவர்கள் MP க்களானால் அப்பொழுது தனி சட்ட திருத்தம் கொண்டு வரலாம். ஏனென்றால் பாராளுமன்றத்திற்கு வேர வேலை இல்லை பாருங்கள்.

இப்பொழுது பிரகாஷ் கரத் தேர்தல் ஆணயம் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது என்கிறார். "Questions for Money" scamல் பார்லிமெண்ட் செயல்பட்ட சுறுசுறுப்பின் காரணம் அதில் சம்பத்தப்பட்ட பெரும்பான்மையானோர் BJP என்பதாலும், CPM, CPI சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்பதினால்தானோ?

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் என்பது போல, இது காங்கிரஸ் தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு.

இது சம்பந்தமான "idly vadai" பதிவும் அருமை . http://idlyvadai.blogspot.com/2006/06/111-143.html

Exempted institutions from OoP definition:

1 The TTD Board AP
2 The Bihar State Religious Trust Board BIHAR
3 The Board of Control-A.N Sinha Institute of Social Studies, Patna BIHAR
4 National Advisory Council Central
5 The Society for Self-Employment for Urban Youth Central
6 The Agricultural and Processed Food Products Export Development Authority Central
7 The National Agricultural Co-Operative Marketing Federation of India Ltd Central
8 The Indian Farmers Fertilizers Co-operative Ltd Central
9 The Krishak Bharti Co-Operative Limited Central
10 The National Co-Operative Consumers Federation of India Ltd Central
11 The Aurovile Foundation Central
12 The National Commission of Enterprises in the Unorganised Sector Central
13 The Planning Board (Asiatic Society Central
14 Delhi Rural Development Board Central
15 The Maulana Azad Education Foundation Central
16 The Dr. Amedkar Foundation Central
17 The Research and Information System for the Non-Aligned and other Developing Countries Central
18 The Indira Gandhi National Centre for Arts Central
19 The Indian Institute of Psychometry Central
20 The Indian Council of Cultural Relations Central
21 All India Council for Sports Central
22 The Central Wakf Council Central
23 The Nehru Memorial Museum and Library Central
24 The Jalianwala Bagh Memorial Trust Central
25 The Haj Committee of India Central
26 The Mallickghat Phoolbazar Parichalan Committee Central
27 The Dalit Sena Delhi
28 The Social Justice Trust Delhi
29 The Bahujan Prerna Charitable Trust, Delhi Delhi
30 The Tripura Khadi and Village Industries Board Tripura
31 The UP Development Council UP
32 The Uttar Pradesh Co-operative Bank UP
33 The Uttar Pradesh Pradesh Provincial Co-operative Federation Ltd UP
34 The Uttar Pradesh Co-operative Federation Ltd UP
35 The National Co-Operative Union of India UP
36 UP Krishi and Gram Vikas Bank UP
37 The Uttar Pradesh Co-operative Bank Limited UP
38 The Bahujan Foundation (Charitable Trust, LUCKNOW UP
39 The Irrigation and Flood Control Commission UP
40 The Asansol Durgapur Development Authority WB
41 The Indian Statistical Institute , Kolkotta WB
42 The West Bengal Handicrafts Development Corporation Ltd WB
43 The WB Small Industries Development Corporation Ltd WB
44 The West Bengal Industries Development Corporation Ltd WB
45 The Shantiniketan Sriniketan Development Authority WB
46 Haldia Development Authority WB
47 The WB Minorities Development Finance Corporation WB
48 The Hoogly River Bridge Commissioners WB
49 The West Bengal Fisheries Development Corporation Ltd WB
50 West Bengal State Haj Committee WB
51 The West Bengal Pharmaceutical and Phytochemical Development Corporation Ltd WB
52 The West Bengal Powerloom and Handloom Development Corporation Ltd WB
53 The West Bengal Khadi and Village Industry Society WB
54 Howrah Improvement Trust WB
55 The WB Fisheries Corporation WB
56 The Board of Wakf, WB
WB

Monday, May 22, 2006

விவசாயிகள் கடன் ரத்து - இது ஒரு பொருளாதார நடவடிக்கையா?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் விவசாயக் கடன்களை ரத்து செய்தது. இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் மதிப்பு ரூபாய் 6,600 கோடி ஆகும். இந்த செயல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய செயல் என்றாலும், பொருளாதார அடிப்படையில் இந்த முடிவு சரியா?

இந்த செயல்பாட்டை அரசியல், சாதி விருப்பு, வெறுப்பு இன்றி விவாதிக்க நண்பர்களை அழைக்கின்றேன்.

நலிந்த விவசாயிகளிக்கு கடன் நிவாரணம் அளிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் பட்ட நஷ்டம் இயற்கை பொய்த்ததாலோ அல்லது இயற்கையின் சீற்றத்தாலோ உருவானது. இந்த நஷ்டத்தை கூட்டுறவு கடன் தள்ளுபடி மூலம் ஈடு செய்வதுதான் ஒரே வழியா? வேற வழி ஒன்றும் இல்லையா?

இந்த கேள்வியை அலசும் போது எனக்குள் எழுந்த சில கேள்விகளும், பதில்களும்:

1. கூட்டுறவுக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. ஏன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் (வங்கி என்றே இனி அழைப்போம்) வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வில்லை?

கூட்டுறவு சங்கங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் தள்ளுபடி செய்வது சுலபமாகப் போனது. வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் , வங்கிகளும், மத்திய அரசும் இதை அனுமதிக்காது. அவ்வாறு அனுமதித்தால் இந்த தள்ளுபடி மற்ற எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட வேண்டும், இது இயலாத காரியம். (பொதுவாக மத்திய அரசு வட்டியை மட்டுமே தள்ளுபடி செய்யும், கடனை செலுத்த அதிக தவணை கொடுக்கும்).

2. அப்படியானால் வங்கிகளில் கடன் வாங்கி, நஷ்டப்பட்டவர்களின் கதி என்ன?

தெரியவில்லை.

3. கூட்டுறவுத்துறை ஒரு தொலை நோக்கோடு உருவாக்கப் பட்ட அமைப்பு. இது ஒரு நுண் கடன் (Micro Credit) அமைப்பு. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ளவர்களும், தங்களுக்குட்பட்ட அமைப்பு மூலமாக, சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அது அதிக லாபம் ஈட்டா விட்டாலும், நஷ்டத்தில் இயங்காமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை. இவ்வாறு கடன்களை ரத்து செய்தால், அந்த அமைப்புகள் எவ்வாறு தங்கள் செலவீனங்களை ஈடு கட்ட இயலும்?

அரசாங்கம், கடனில் உள்ள மூலதனத்தை (Principal) ஈடு செய்து விடும். அதுவும் பொதுவாக அந்த தொகையை ஒரு மானியமாக கருதி அதை அரசாங்கத்தின் கூடுதல் முதலீட்டாக கருத ஆணையிடும். (that is, the government will instruct the Societies to treat the amount waived as Tier 1 capital and thus increase the investment of the govt in the societies. This is just a book entry and as such there won’t be any additional cash flow into the credit mechanisam). இது எதிர்காலத்தில் கடன் கொள்கையை பாதிக்கும்.

4. இந்த நிவாரணத்தை வேறு எவ்விதமாக வழங்கியிருக்கக் கூடும்?

இது மாதிரி நஷ்டங்களை ஈடு செய்யவே காப்புறுதிக் குழுமங்கள் (Insurance Companies) உள்ளன. அரசாங்கம், விவசாயக் காப்புறுதியை கட்டாயமாக்கி அதற்குண்டான காப்புறுதித் தவணை (Premium)யையும், சிறு மற்றும், மத்திய தர (Small and Marginal) விவசாயிகளின் சார்பாக செலுத்த வேண்டும். காப்புறுதிக் குழுமங்களும் இத்தகைய இழப்பு ஏற்படும் பட்சத்தில், அரசாணையை மதித்து (வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல்), ஈடு செய்ய வேண்டும்.

5. இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

· கடன் தள்ளுபடி என்பது ஒரு பொருளாதார நடவடிக்கையாக மாறும். கட்சிகள் சம்பத்தப்பட்ட ஒரு நிலைப்பாடாக இருக்காது.
· கூட்டுறவுத் துறை மேலும் திறம் படுத்தப்படும் (Due to cash circulation).
· கடன் வாங்குபவர்களுக்கும், கூட்டுறவுக் கடன் என்றால் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணம் ஏற்படாது.
· கடன் தள்ளூபடியால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை மீண்டும் பொது மக்கள் தலையிலேயே புதிய அல்லது அதிக வரியாக சுமத்த வேண்டிய நிர்பந்ததிற்கு அரசு ஆளாக இருக்காது. காப்புறுதித் தவணைமட்டுமே செலுத்த வேண்டும்.

Wednesday, May 17, 2006

இட ஒதுக்கீட்டில் CPM மின் அணுகுமுறை

1) OBC உள்ள Creamy layer ஐச் சேர்ந்தவர்கள் இட ஒதிக்கீட்டில் இருந்து விலக்கப்படவேண்டும்.
2) Forward Community யில் உள்ள பொருளாதரத்தில் பின்னடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப் பட வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் CPM மின் இந்த அணுகுமுறை மிகவும் வரவேற்கத் தக்கதே. இது ஒதுக்கீட்டு முறையை சாதி அணுகுமுறையிலிருந்து, பொருளாதார அடிப்படை அணுகுமுறைக்கு இட்டு செல்லும் பயணத்தின் முதல் மைல் கல்லாகும். இது முதலில் கல்வி நிலையங்களில் அமுல் செய்யப்பட்டு, பின்னர் வேலை வாய்ப்புகளிலும் செயலாக்கப்பட வேண்டும்.

இத்தனை நாள் இருந்து வந்த சாதி வழி ஒதுக்கீடு முறையை மாற்ற அரசுக்கு கிடத்த நல்ல ஒரு சந்தர்ப்பம். இப்போதுள்ள பல சங்கடங்களுக்கு நிரந்தர தீர்வு காண வழி வகுக்கும்.

இப்போது பிரதமர் அமைத்துள்ள நால்வர் சபை, இந்த ஆலோசனையை நாட்டு நலன் கருதி ஏற்க வேண்டும்.

இந்த ஆட்சியில் கம்யுனிஸ்ட் கட்சிகள் பல நல்ல ஆலோசனைகளை அளித்து உள்ளன. பாராட்டுகள்.

Thursday, April 06, 2006

தமிழகத் தேர்தல் 2006 - கட்சிகளின் நிலைப்பாடுகள்.

2006 - தமிழக தேர்தலில், கட்சிகளின் உண்மையான நிலைப்பாடுகள் வெளியாகியுள்ளன.

  1. முக்கிய கட்சிகளின் கட்டுக்கோப்புகள் கலகலக்கத் தொட்ங்கியுள்ளன. இது மிக அதிக அளவில் வேட்பாளர் அதிருப்தி / மாற்றங்கள் என செய்யப்படுவதிலிருந்து தெரிகிறது. சற்று முந்தைய காலங்களில் வேட்பாளர் அறிவிப்புகள் முழுவதுமாக ஒத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இப்பொழுதோ, ஆர்ப்பாட்டங்கள், மறியல், தலைமை நிலையப் படையெடுப்பு, ராஜினாமா, கட்சித் தாவல் போன்றவை நிகழ்கின்றன. இதனால், வேட்பாளர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இது கட்சித் தலைமை, தொண்டர்களிடமிருந்து தொலைவில் இருக்கும் நிலைமையை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. இது கட்சிகளின் வீழ்ச்சிக்கு முதல் படியாகும்.
  2. கட்சிகள் ஏகாதிபத்திய முறையில் செயல் படுகின்றன. (தி.மு.க வில் கூடி முடிவு எடுப்பது போல தோன்றினாலும், திரு. கருணாநிதியின் முடிவே இறுதியானது). அ.தி.மு.க வில் இரண்டாம் மட்ட தலைவர்களே இல்லை. இன்றைய இரண்டாம் நிலைத் தலைவர், நாலை கடைநிலைத் தொண்டனுக்கும் கீழே தள்ளப் படுவார். தி.மு.க வில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோருமே இரண்டாம் நிலைத் தலைவர்களே. அவர்கள் எத்தனை யுகங்களானாலும் தலைவர் பதவியை எட்டி பிடிக்க முடியாது. குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அதற்கு தகுதியானவர்கள்.
  3. தி.மு.க என்றும் இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி இடுகிறது. கூட்டணிக் கட்சிகளின் தோளில் கை போட்டுக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை. இது அரசியல் காலச் சக்கரத்தில் தி.மு.க. வின் இறங்கு முகத்தை காட்டுகிறது.
  4. 82 வயதில் திரு. கருணாநிதி தான் இன்னும் தலைவராக, முதல்வராக முன்னிலை படுத்தப் படுகிறார். இன்றைய இந்தியாவில் முன்னேறி வரும் எந்த துறையை எடுத்துக்கொண்டாளும், இளைய தலைமுறையினரே தலைமைப் பொறுப்பில் இறுக்கின்றனர். ஏனெனில் புதிய சிந்தனைகளும், துணிர்ந்து முடிவு எடுக்கும் திறணும் அவர்களுக்கெ இருக்கும். வயதான தலைவர்கள் சில நிர்ப்பந்தகளுக்கு (நன்றி உணர்வு, பாசம், பிரதி பலன்...) கட்டுப்பட வேண்டியவர்களாகிறார்கள். (பா.ஜ.க சென்ற 10 ஆண்டுகளில் முன்னேறியதின் காரணம், இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைத்ததுதான். ஆனால், மீண்டும் திரு.அத்வாணி போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் தான் அது வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது). இவர்களது அனுபவம் இளைய தலைமுறையினரை வழி நடத்தி செல்ல உதவ வேண்டுமெ தவிர, அவர்களே எக்காலத்திற்கும் தலைவராக இருக்க அல்ல.
  5. எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, 2004 மக்களவைத் தேர்தலில் நன்கு படித்த இளைஞ்சர்கள் தேர்ந்து எடுக்கப் பட்டார்கள். ஆனால், தமிழக 2006 தேர்தலில் இது போன்ற எவ்வளவு வேட்பாளர்களை கழகக் கட்சிகள் நிறுத்தியுள்ளன? இளையவர்கள் என்றால் தலைவர்களின் வாரிசுகள் என்றே இங்கே அர்த்தம்.
  6. தேர்தல் வாக்குறுதிகளில் தொலை நோக்கு சிந்தனை எள்ளவும் இல்லை. இன்னும் தமிழக வாக்களர்களை கையேந்தி, பிச்சை எடுக்கும் மனிதர்களாகவே இக்கட்சிகள் பார்க்கின்றன. "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!" - இது மேடை பிரசாரத்திற்கு மட்டுமெ. மற்ற நேரங்களில் அவர்களின் எதிர்பார்ப்புகள் "இல்லை என்று சொல்லடா! கையேந்தி நில்லடா!!" மட்டுமே. இலவச நிலம், TV, வேட்டி, சேலை, நிவாரண நிதி இத்யாதி, இத்யாதிகள். ஏன் இக்கட்சிகள் வேலை வாய்ப்புத் திட்டங்கள் (வெறும் வேலை வாக்குறுதி மட்டும் அல்ல - குறிப்பிட்ட விதமான திட்டங்கள்), கட்டமைப்பு வசதிகள், புதிய சார் நகரங்கள் (Township), சுகாதார வசதிகள், பயண வசதிகள் பற்றி எந்த ஒரு வாக்குறுதியையும் அளிக்கவில்லை?